மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்!?
வாகன சோதனையில் பிடிபடும் ரேஷன் அரிசி மூடைகள் சட்டவிரோதமாக விற்பனை!
மதுரை சிவகங்கை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டுவதாக அதிர்ச்சித் தகவல்!!? மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்!?
வாகன சோதனையில் பிடிபடும் ரேஷன் அரிசி மூடைகள் சட்டவிரோதமாக விற்பனை!
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டுவதாக அதிர்ச்சித் தகவல்!!?மதுரை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் எஸ்.பி சிவ பிரசாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா!?
சமீப காலமாக தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பல புகார்கள் வந்து கொண்டுள்ள நிலையில் கன்னியாகுமரி கேரளா எல்லை கோவை கேரளா எல்லையில் ரேஷன் அரிசி கடத்தும் நபர்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிலைமான் பகுதியில் சட்டவிரோதமாக ரேசன் அரிசியை கடத்துவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததின் பெயரில் அப்பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகனங்களை சோதனை செய்துள்ளனர்.அப்போது அவ்வழியாக வந்த TN76.P.0988 என்னுடைய மினி வேனை சோதனை செய்ததில் அந்த வண்டியில் ரேஷன் அரிசி 45 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகள் வெள்ளை நிற பாலிதீன் பைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனர் மற்றும் ஒருவர் இருந்ததாக தெரிகிறது.
ரேஷன் அரிசி முட்டைகளுடன் வாகனம் மற்றும் வாகன ஓட்டுனர் மற்றும் உதவியாளர் இரண்டு பேரையும்
அழைத்துக்கொண்டு உணவு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் காவல் வாகன காவலர் திருப்பதி என்பவரும் சேர்ந்து உணவு தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்திற்கு சென்றபிறகு விசாரணை அதில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் மதுரை காமராஜர் சாலை சந்தைப்பேட்டை பகுதியில் குடியிருந்து வரும் முத்துராமலிங்கம் மகன் செல்வகுமார் என்பது தெரியவந்ததுள்ளது.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் காவலர் திருப்பதி இரண்டு பேரும் ரேஷன் அரிசி கடத்தி வந்த வாகன உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் வாகனத்தையும் ஓட்டுனரையும் அனுப்பி விடுகிறேன் என்று பேசியதாகவும் அதன்பின்பு வேன் உரிமையாளரிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு வேன் மற்றும் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் வந்தவர் யார் மீதும் வழக்கு போடாமல் அனுப்பி விட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்திற்கு நிழலாக இருந்து வரும் அனுப்பானடி மண்னெண்னை கடை உசேன்பாய் என்பவர் புட்சால் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கு மாதம் மாதம் இரண்டு லட்சம் வருவாய் ஈட்டித் தருகிறார்என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
இதுபோல் பனையூரில் சில நாள்களுக்கு முன்பு ஒரு குடோனில் 425 மூடை ரேஷன் அரிசி பதுக்கி வைத்து உள்ளதாக தகவல் கிடைத்தது அந்த தகவலை காவல் ஆய்வாளருக்கு தெரிவிக்கப்பட்டது. இப்போது காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி மற்றும் செந்திலிடம் சொல்லி நீங்கள் குடோனில் அரிசி கடத்தி வைத்ததாக எனக்கு ஒரு தகவல் வந்துவிட்டது ஆகையால் அந்த குடோனில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள் என்று அவர்களுக்கு தகவல் சொல்லிவிட்டு சக காவலர்களாக இருந்து வரும் சீனிவாசன். ரமேஷ். கணேஷ்குமார். என்பவர் களை அனுப்பி அந்த குடோனில் சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் சோதனையிட்டு ஒன்றும் இல்லை என்று கூறி விட்டு வந்து விட்டனர். காவல் ஆய்வாளர் சொன்னதை சரியாக செய்துவிட்டு வந்த காவலர்கள் ஆய்வாளருக்கு உறுதியானவர்கள் அவர்களுக்கும் இதில் பங்குண்டு மேலும் பனையூர் ஊரைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மற்றும் செந்தில் இருவரும் ஆய்வாளர் பிரேம் ஆனந்திற்கு காவலர் திருப்பதி அவர்களுக்கு மாதம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் வழங்கிவருகிறார் என்றும் இதுபோன்று சக்கிமங்கலம் சமத்துவபுரத்தில் இருக்கும் அய்யப்பன் என்பவர் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் திருப்பதிக்கு மாதம் மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் ரூபாய் 50000முதல் 1லட்சம் வரை கொடுத்து வருகிறார். இதுவும் விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரையூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்ததன் பேரில் கொரில்லா முத்து என்பவரை பேரையூர் காவல் நிலையத்தில் கைது செய்து ஆய்வாளர் பிரேம் ஆனந்த் அவர்களிடம் கொரில்லா முத்துவை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொரில்லா முத்து என்பவரிடம் ரூபாய் 2 லட்சத்தை பெற்றுக் கொண்டு அவரை அந்த கடத்தல் வழக்கில் இருந்து விடுவித்து அனுப்பிவிட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனியாபுரம் தனியார் ஆங்கிலப் பள்ளி அருகில் 20 டன் ரேஷன் அரிசி யுடன் கொரில்லா முத்து பிடிபட்டார் என்று தகவல் வந்துள்ளது.
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தும் சமூக விரோதிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வழக்குகள் போடாமல் அவர்களை விட்டு விடுவதாகவும் அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
வெளியில் விட்டு விடுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மீது குற்றச்சாட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதைவிட அதிர்ச்சி தகவல் என்னவென்றால் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களால் சோதனையின்போது பிடிக்கப்பட்ட ரேஷன் அரிசியை காவலர் திருப்பதி என்பவரிடம் ஒப்படைத்து அரசு ஒப்பந்தபுள்ளி பாண்டா முருகன் என்பவரிடம் ரேஷன் அரிசியைக் கொடுத்து லட்சக்கணக்கில் திருப்பதி மற்றும் காவல் ஆய்வாளர் பெற்றுக் கொண்டு இருவரும் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர். என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக இருக்கும் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஆய்வாளராக இருக்கும் பிரேம் ஆனந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மதத்தில் இருந்து பணியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பணியில் சேர்ந்ததிலிருந்து மாதம் 10 லட்ச ரூபாய் வரை மாமுல் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வசூலுக்கு உடந்தையாக ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் காவலர் திருப்பதி என்பவரும் இணைந்து வசூல் செய்து கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. இந்த சட்டவிரோத செயல்களை செய்பர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் என்று சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுக்கு உடந்தையாக அரசுக்கு புறம்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் வாகன ஓட்டுனர் செயல்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஆகவே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் காவல் வாகன ஓட்டுநர் திருப்பதி மீது தென் மண்டல ஐஜி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஆகும்.
எது எப்படியோ ரேசன் அரிசி கடத்தினால் 7 ஆண்டு ஜெயில்
ரேசன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் கடுமையான தண்டனை கொண்டு வரப்பட்டுள்ளதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
தமிழக எல்லைப் பகுதிகளில் 24 மணி நேர ரோந்து பணி மேற்கொள்வது, அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தும் லாரியின் உரிமத்தை ரத்து செய்யவும், டிரைவரின் லைசென்ஸை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
அதே போல கோவை, கன்னியாகுமரி, தேனி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் விடுமுறை நாட்களிலும் இரவு நேர ரோந்து பணியே மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கடத்தல்காரர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வாங்கித் தர குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது.
ரேஷன் கடை ஊழியர்கள் ஆகியோர் மீதும் துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரிசி கடத்தல்காரர்கள், போலி ரேஷன் கார்டுகள் குறித்து 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொலைபேசி எண்கள்: 044-24338974, 25670204