மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்! வாடிப்பட்டி பேரூராட்சியை கைப்பற்றப் போவது திமுகதான் அமைச்சர் மூர்த்தி !

வாடிப்பட்டி பேரூராட்சி தேர்தலில் நிற்கும் திமுக மற்றும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக கட்சி தலைவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 8 மாத கால ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி அமைச்சர் பி.மூர்த்தி வாக்கு சேகரிப்பு!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர். பி. மூர்த்தி மேட்டு நீரேத்தான்.யூனியன் ஆபிஸ் பிரிவு ரோடு. பேரூராட்சி அலுவலகம் சாணாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜீப்பில் நின்றவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



முன்னாள் திமுக பேரூர் செயலாளர் பால்பாண்டியனை ஆதரித்து அமைச்சர் பி மூர்த்தி வாக்கு சேகரித்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவராக திமுக கட்சி சார்பில் பால்பாண்டியன் முன் நிறுத்தி பேசியபோது

கடந்த கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கிடப்பில் போட்டு விட்டனர் தற்போது திமுக ஆட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடக்க உள்ளது. ஆகையால் இந்த தேர்தலில் வாடிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 13 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளில் முழுமையாக வெற்றி பெறும் பிப்ரவரி 22ஆம் தேதி திமுக சார்பில் பால்பாண்டியன் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்றும் அதன் பின் கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் வாடிப்பட்டி பேரூராட்சியில் நடந்த ஊழல்கள் மற்றும் முழுமையாக செயல்படாத திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும். வாடிப்பட்டி பேரூராட்சியின் நிர்வாக குளறுபடி மற்றும் சீர்கேடுகளை சரி செய்யவும்,
1-வது வார்டில் நிற்கும் பால் பாண்டியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று வாக்காளர்களிடம் அமைச்சர் மூர்த்தி வாக்கு சேகரித்தார்.



திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு மேலும் மக்களுக்கு தேவையான நல திட்டங்களை பூர்த்தி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் எடுத்துச் சென்று வாடிப்பட்டி பேரூராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தையும் முழுமையாக நடைமுறை படுத்த முன் நின்று உறுதியாக செய்து கொடுப்பேன் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் போது பிரச்சாரத்தின் போது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ,முன்னாள் திமுக செயலாளர் மற்றும் வார்டு செயலாளர்
முன்னாள் பேரூராட்சித் தலைவர் திமுக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி ,வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் வெங்கடாசலபதி கார்த்திக்
மற்றும் வார்டு செயலாளர்கள் கட்சியின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.