மாவட்டச் செய்திகள்

மதுரை வாடிப்பட்டி ஓடை கரை பாதை ஆக்கிரமிப்புக்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உடந்தையா!?

கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஓடைக்கரை கால்வாய்கள் ஏரிகள் குளங்கள் தூர் வாருவதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் பேசி வரும் நிலையில்

அதுபோல கடந்த பத்தாண்டுகளில் எடப்பாடி அவர்கள் பேசியதற்கு எதிராக சோழவந்தான் சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் ஏரிகளிலும் கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகளை பல கோடி ரூபாய்க்கு முன்னாள் அதிமுக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தான் அனைத்து ஒப்பந்தங்களையும் எடுத்து செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் சோழவந்தான் சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து கால்வாய்களிலும் ஏரிகளும் குளங்களும் சரியாக தூர்வாரப்படவில்லை என்றும் கால்வாய்கள் மூலம் சுற்றியுள்ள கண்மாய்களுக்கு மழை நீர் சரியாக வருவதில்லை என்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பல புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர்கள் அவர்களுக்கு அனுப்பி இருந்த நிலையில் எந்த ஒரு விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற தகவல் வந்துள்ளது.

மாறாக அனைத்து குளங்களும் ஏரிகளும் ஓடைகள் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதாக அரசுக்கு தவறான தகவல்களை  சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்தின் உறவினர் வாடிப்பட்டி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்லையா அவர்கள் பல கோடி ரூபாய் ஊழல் செய்வதற்கு உடந்தையாக செயல்பட்டு வந்துள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.

மதுரைமாவட்டம் வாடிப்பட்டி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்லையா      பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்லையாவின் உடந்தையுடன்   சில சமூக விரோதிகளை வைத்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் மேற்கூறிய ஓடைக்கரை இருபுறமும் உள்ள பத்தடி பாதையைஆக்கிரமிப்பு செய்துள்ளனர் .

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் குலசேகரன் கோட்டை கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு பூர்வீகத் தொழில் விவசாயம் ஆடு மாடுகளை மேய்ப்பது தான் .

கிராம மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க செல்லாயி அம்மன் ஓடைக்கரையில் வழியாக தரிசு நிலங்களுக்கு ஆடு மாடுகளை கொண்டு செல்வது வழக்கம்.
அதுபோல ஓடைக்கரை அருகே உள்ள சுமார் 50 விவசாயிகளின் நிலங்கள் உள்ளன. அந்த விவசாய நிலங்களுக்கும் இந்த ஓடக்கரை பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

வருவாய் ஆவண புல வரைபடத்திலும் மேற்படி இடமானது ஓடைக்கரை பாதை என காட்டப்பட்டுள்ளது.
அதற்கான வரைபடமும் உள்ளது.

வாய்க்கால்களில் ஓரமாக ஆடு மாடுகளை மேய்க்க கொண்டு செல்ல வேண்டும்.
வாய்க்காலை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளதால் இரண்டு கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஓடைகரை இரு புறமும் பத்தடி அகலமுள்ள பாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
கிராம மக்களின் நலன் கருதி
ஓடைக்கரை வழி செல்லும் விவசாய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் செல்லவும்
ஆடு மாடுகள் மேய்த்து வர கால்வாயில் பாதை அமைத்து தருமாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அவர்களுக்கு கிராம மக்கள் சார்பாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் குலசேகரன் கோட்டை கிராமம் செல்லாயி அம்மன் கோவில் ஓடை கரை இரு புறமும் பத்தடி அகலமுள்ள பாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
சில சமூக விரோதிகளை வைத்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் மேற்கூறிய ஓடைக்கரை இருபுறமும் உள்ள பத்தடி பாதையைஆக்கிரமிப்பு செய்துள்ளனர் . இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் ஓடை கரையில் சென்று நிலத்திற்கு செல்லும் விவசாயிகள் 15/ 7 /2021 தமிழக முதல்வர் பொதுப்பணித்துறை மாவட்ட ஆட்சியாளர் அனைவருக்கும் கிராம நிர்வாக அலுவலர் வருவாய்த்துறை அனைவருக்கும் புகார் கொடுத்துள்ளனர்.

மனுவில் குறிப்பிட்டுள்ளது.

  1. சர்வே எண் 341 கிழக்கு ஓடைக்கரையில் பொது வண்டிப் பாதை ஆக்கிரமிப்பு அகற்றுதல் சம்பந்தமாக.
  2. 50 ஏக்கர் மானாவாரி புஞ்சை விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்லும் பாதை!
  3. செல்லாயி அம்மன் கோவில் கிழக்குப் பக்கமுள்ள ஓடைக் கரையில் தான் பொதுப் பாதையாக நூறு வருடங்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
  4. செல்லாயி அம்மன் கோவில் அருகே உள்ள முனியாண்டி கோவிலுக்கும் கிராம மக்கள் மேற்படி ஓடைக்கரை பாதை வழியாக வெள்ளி மற்றும் செவ்வாய் மட்டில் சென்று வழிபட்டு வந்துள்ளனர்.
  5. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலை புதியதாக அமைக்கப்பட்டதால் அதனருகே ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உருவானது
  6. தற்போது மேற்கூறிய ஓடைக்கரையில் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் கால்நடை போக்குவரத்து மற்றும் குலசேகரன் கோட்டை மக்கள் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை ஏற்பட்டுள்ளது.

7.அரசு சார்பாக விவசாய நிலங்களில் முன்னேற்றத்திற்காக மேற்கூறிய ஓடையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு அங்கு நீர்வள ஆதாரத்தை மேம்பட செய்துள்ளது பொதுப்பணித்துறை.

  1. ஓடைக் கரையில் கிழக்கு பாதை வழியாக செல்லக்கூடிய குலசேகரன் கோட்டை கிராம பொதுமக்கள் கால்நடைகள் மற்றும் விவசாய இடுபொருட்கள் கொண்டு செல்லக்கூடிய வாகனங்கள் எதுவும் விவசாய நிலங்களுக்குச் சென்று வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பல முறை புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  2. இந்த புகாரை உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடி ஆய்வு செய்து தனிநபர்களின் ஆக்கிரமிப்பை அகற்றி கால்நடைகள் விவசாயிகளின் கொண்டு செல்லக்கூடிய வாகனங்கள் உட்பட விவசாய நிலங்களுக்கு இடையே ஒரு இல்லாமல் சென்று வருவதற்கு பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புகாரின் அடிப்படையில் 30/07/21 அன்று வருவாய்த் துறைச் சார்ந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து மேற்படி ஓடைக்கரை பாதையானது வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இல்லை என்றும் இந்த பாதை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது என கூறி மேல் நடவடிக்கைக்காக பொதுப் பிரிவுக்கு புகார் பரிந்துரை செய்வதாக வாய்மொழியாக கூறிச் சென்று விட்டனர்.
ஆனால் இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஓடைக்கரையில் இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

ஆகையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வருக்கு ஓடைக்கரை பொதுப் பாதையை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து ஓடைக்கரை பொதுப் பாதையை மீண்டும் விவசாயிகள் செல்ல பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் கடந்த அதிமுக ஆட்சியில் தூர்வார பட்டதாக சொல்லப்படும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள ஏரி குளங்கள் கால்வாய்கள் ஓடைகள் அனைத்து இடங்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டால் மட்டுமே பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக பொதுமக்கள் கூறப்படும் குற்றச் சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button