மதுவில் விஷம் கலந்த கொடுத்து திட்டமிட்டு கொலை செய்த கோவில் பூசாரி அதிர்ச்சித் தகவல்!
முன்விரோதம் காரணமாக சாமி படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலந்து கொடுத்து திட்டமிட்டு கொலை செய்த பூசாரி!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மதுவுக்கு ஆசைப்பட்டு மெக்கானிக் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் மதுவில் விஷம் கலந்து பூஜையில் வைத்த பூசாரி கைது கோவில் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் விஷம் வைத்ததாக வாக்குமூலம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (49)டிவி மெக்கானிக்.
கோட்டார் வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் அருள் (33)டிரைவர் இருவரும் உறவினர்கள். அருளுக்கும் ஊரில் உள்ள கோவிலில் நிர்வாகத்திற்க்கும் ஏற்க்கனவே பிரச்சனை இருந்து உள்ளது.இதில் அருள் மீது சிலர் ஆத்திரத்தில் இருந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே பிரச்சனைகள் ஏற்பட்டு கோட்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்த நிலையில் கடந்த 1 ம் தேதி சுடலை மாடன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.அப்போது சாமிக்கு வைக்கப்பட்ட மதுவை அருள் எனக்குத்தான் தரவேண்டும் எனக் கூறி வாங்கிச் சென்றுள்ளார். இதனிடையே தனது உறவினர் செல்வகுமார் வீட்டில் இருந்து வெளியே கொசுவத்தி வாங்க வந்துள்ளார் செல்வகுமார் அங்கு வந்தபோது இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.இதில் செல்வகுமார் திடீரென உயிரிழந்தார் .அருள் ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். செல்வகுமாரின் உடல் பிரேதபரிசோதனையில் மதுவில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது.இது தொடர்பாக மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் ஏ எஸ் பி யாங்சென்ட் டெமோ பூட்டியா தலைமையில் ஜந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.மூன்று நாட்களாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் எந்த தகவலும் கிடைககமால் போலீசார் தினறி வந்தனர் சாமிக்கு படையல் வைக்கப்பட்ட மதுவில் யார் விஷம் கலந்தார்கள் ? என போலீசார் கண்டுபிடிக்கவில்லை பின்னர் 11 நபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் மூன்று பேரை மூன்று நாட்களாக வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மதுவில் விஷம் கலந்தது வடலிவிளை வயல் தெருவை சேர்ந்த அஜி என்ற சதீஷ் (45) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அஜியை நேற்று காலை போலீசார் கைது செய்தனர் . பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கோவில் தொடர்பாக அருளுக்கும் மற்றொரு தரப்புக்கு பிரச்சனை ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் இருந்து அருள் போதையில் கோவிலை சுற்றிவந்து இன்று பூஜையில் படையலில் வைக்கப்படும் மது எனக்குத்தான் தர வேண்டும் வேறு யாரும் கை வைக்கக் கூடாது என கூறிவந்துள்ளார்.இந்த தகவல் எதிராளியின் பூசாரி அஜித்துக்கு கிடைத்தது ஏற்கனவே அருள்மிது ஆத்திரத்தில் இருந்த அஜி அவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து ஒரு சிறு பாட்டிலில் விஷத்தை கொண்டு வந்து அதை கோவில் கருவறையில் மறைத்து வைத்தும் அருள் வந்து கேட்கும் போது மதுவில் விஷம் கலந்து வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது . இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அருள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் .மேலும் சிலரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவிலில் பூசாரியை முன் விரோதம் காரணமாக கோவிலில் சாமிக்கு படைக்கப்பட்ட மதுவில் எதிராளியை திட்டமிட்டு கொலைசெய்ய விஷம் கலந்த சம்பவம் நாகர்கோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும். மதுவுக்கு ஆசைப்பட்டு தனது உயிரை இழந்த செல்வகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தாரை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.புனிதமாக கருதப்படும் கோவிலில் நம்பிக்கையின் அடிப்படையில் தனது கஷ்டங்களை கூறி கடவுளை வணங்க வரும் பக்தர்கள் இனி கோவிலில் எந்த பொருட்கள் கொடுத்தாலும் நம்பிக்கையுடன் வாங்கி செல்வார்காளா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.