மத்திய மற்றும் மாநில அரசுகளின்சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை பெற உதவி மையம்!

விருதுநகர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பற்றி முழுமையாக அறிந்து பயன்பெறுவதற்கு ஏதுவாக அமைக்கப்ட்ட பொதுமக்களுக்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் Resource center for Participatory development studies என்ற தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் அரசின் திட்டங்களை பற்றி முழுமையாக அறிந்து பயன்பெறுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட பொதுமக்களுக்கான உதவி மையத்தினை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நடுத்தர சமூகத்தினர், ஏழை எளிய மக்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், பயன்பெறும் வகையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை எளிதில் அணுகி விண்ணப்பிப்பதற்கும், அவர்களுக்கு தேவையான அரசின் திட்டங்களை பெறுவதற்கு வழிகாட்டிடவும், Resource center for Participatory development studies என்ற தன்னர்வ நிறுவனத்தின் உதவியுடன் பொதுமக்களுக்கான உதவி மையத்தினை அணுகி தங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை அறிந்து, தெரிந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, கேட்டுக
்கொண்டார்
இந்நிகழச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் .இரா.மங்களராமசுப்ரமணியன், அலுவலக மேலாளர்(பொது) பரமானந்தராஜா, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஜெய்கணேஷ், ஜான்சன் தங்கராஜ்,ராமசந்திரன், முருகன், .அரசன் மற்றும் அரசு அலுவல
ர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்.