லஞ்ச ஒழிப்புத் துறை

மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் நிலத்தை
வேறு நபருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்து மோசடி! மாதம் பல லட்ச ரூபாய் கல்லாக் கட்டும் காட்பாடி சார் பதிவாளர்!சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!

பல லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் நிலத்தை
வேறு நபருக்கு பத்திரப் பதிவுச் செய்து கொடுத்த  காட்பாடி சார் பதிவாளர்!

சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவுத்துறை நிர்வாகப் பதிவாளர் சுடரொளி  மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் நிலையில்

  இன்னும்
வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யாதது ஏன்?

அதுமட்டுமில்லாமல் ஊழல் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட சார்பதிவாளர் நித்தியானந்தம் தொடர்ந்து விரோதமாக பத்திர பதிவு செய்து கொடுத்து லஞ்சம்  ஊழல் முறைகேடு மோசடியில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்!

“வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்குட்பட்ட காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளர் பொறுப்பில் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சார்பதிவாளர் நிலைய 1-ல் சார்பதிவாளர் பொறுப்பில் பணியாற்றி வந்தார். அங்கு பல்வேறு முறைகேடுகளில் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து இவர் மீது பல்வேறு முறைகேடு லஞ்சம் லாவண்யம் குற்றச்சாட்டுகள் முன்வைத்து ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர். அதுமட்டுமின்றி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் சார் பதிவாளர் பொறுப்பில் இருக்கும்போது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை கைப்பற்றி வழக்கும் பதிவுச் செய்து அந்த வழக்கானது நிலுவையில் உள்ள நிலையில் கூட மாவட்ட பதிவுத்துறை நிர்வாகம் இவர் மீது எந்த நடவடிக்கும் எடுக்கப்படாத நிலையில். காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் டிசி லேண்ட் முறைகேடாக பதிவுச் செய்து ஆதாரப்பூர்வமாக சிக்கிக் கொண்ட கவிதா என்பவரை வேலூர் கண்காணிப்பாளர் பிரிவிற்கு இடமாற்றம் செய்து அவருக்கு பதிலாக இங்கு மூன்று மாதத்திற்கு முன்பு பொறுப்பு சார்பதிவாளராக பணிக்கு மாற்றப்பட்ட நித்தியானந்தம் என்பவர் பத்திரம்  எழுத்தாளர்கள் சிலருடன் கைகோர்த்துக்கொண்டு இரண்டு சென்ட், மூன்று சென்ட், நான்கு செண்ட், ஐந்து சென்ட், அதற்கும் மேல் என்று முறைப்படுத்தாமலும் அங்கீகரிப்பு இல்லாத இடங்களைப் பதிவுச் செய்ய லட்சக்கணக்கில் லஞ்சத்தை வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு செய்வதோடு ஃபிக்சேஷன் செய்யாத இடங்களையும் ஃபிக்சேஷன் செய்து தருவதாக கூறி தன் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவர் மூலம் ஆவணங்களை சரி பார்ப்பதாக கூறி டாக்குமெண்ட் ரைட்டர் முதல் பத்திரப்பதிவு செய்ய வருபவரிடம் நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்து வருகிறார்கள். இது சம்பந்தமாக பதிவுத்துறை துணைத் தலைவரின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்க முற்பட்டபோது அவர் தொலைபேசியை எடுக்க மறுத்து விட்டார். இதையடுத்து மாவட்ட நிர்வாகப் பதிவாளர் சுடரொளி என்பவரிடம் செய்தியாளர்கள் நேரடியாக செய்த விசாரணையில். அவர் கூறியதாவது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளும், லஞ்ச லாவண்யங்களும் அதிகரித்து வருகிறது. இது குறித்து தாங்கள் விசாரணைச் செய்து நடவடிக்கை எடுக்குமாறு அல்லது அங்கு பணிபுரியும் நபர்களை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்திட வேண்டும் என்று கேட்ட போது. அவர் அதற்கு ஆட்கள் பற்றாக்குறையால் நித்தியானந்தம் என்பவரை அங்கு சார்பதிவாளர் பொறுப்பு பணிக்கு அமர்ந்திருக்கிறோம் நாங்கள் என்ன செய்ய முடியும் மேலிடத்தில் உள்ள அதிகாரிகள். சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பணியாட்களை நிரப்பினால் நன்றாக இருக்கும் என்று  அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை வைக்கிறார். எனவே வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாக பதிவாளராக இருக்கும் சுடரொளி என்பவர் குறித்து சில செய்தியாளர்கள் விசாரிக்கத் தொடங்கியபோது. மாவட்ட நிர்வாகப் பதிவாளர் சுடரொளி என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதிச் சேர்ந்தவராவார் இவர் பதிவுத்துறை நிர்வாகத்தில் சென்னை மற்றும் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகப் பதிவாளராகவும், வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவுத்துறை நிர்வாகத்தில். மாவட்ட நிர்வாகப் பதிவாளராக 3 வருடங்கள் கழிந்தும் கூட பணியாற்றி வருகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் செல்வாக்குகள் உள்ளது என்று இவருக்கு கீழ் பணிபுரியும் சார்பாதிவாளர்கள் ஒரு சிலர் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு கீழ் பணிபுரிந்து வரும் சார்பதிவாளர்கள் இவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் கேட்கும் தொகையை கொடுக்கவில்லை என்றால் பணியிடம் மாற்றுவதும் அவர் ஆடிட்டிங் செய்ய வரும்போது பல்வேறு குளறுபடிகள். முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி சிக்கலில் மாட்டி விடுவதாகவும். அதற்குப் பயந்து அவர் கேட்கும் தொகையை அவ்வப்போது லஞ்சமாக கொடுத்து வருகிறோம் என சார்பதிவாளர் பொறுப்பில் உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒடுகத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த குமரன் என்பவரை காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பொறுப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் அவரை வேறு இடத்திற்கு பணியிடம் மாற்றாமலே இருக்கும் மாவட்ட பதிவுத்துறை நிர்வாகப் பதிவாளர் சுடரொளி-யின் சப்போர்ட் மிக அதிகமாக உள்ளது என்று  சார்பதிவாளர் முதல் ஊழியர்கள் வரை தன்னைப் பெருமிதமாக தம்பட்டை அடித்துக்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு காட்பாடி மக்கள் ஒரு பெயரும் வைத்துள்ளனர். இவர் பெயர் வெறும் குமரன் அல்ல ஃபிக்செஷன் குமரன் என்று கூறும் அளவிற்கு லே-அவுட் மனை பிரிவு ஏற்படுத்தி விற்பவர்களிடம் லஞ்ச லாவணிகளைப் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு செய்ய ஒருங்கிணைந்த மாவட்ட பதிவுத்துறை நிர்வாகப் பதிவாளர் ஒப்புதலுடன் சார்பதிவாளர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு பத்திரப்பதிவு செய்து வருவதாக தெரிகிறது. மேலும் சார்பதிவாளர் பொறுப்பிலிருக்கும் நித்தியானந்தம் என்பவர் ஒரு சில டாக்குமெண்ட் ரைட்டர்களுடன் கைகோர்த்துக்கொண்டு சேர்க்காடு பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் மெடிக்கல் ரிப்போர்ட் எதுவுமின்றி கார்டியன் கையொப்பமின்றி அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் சொத்தானது பத்திரப்பதிவுச் செய்து விற்கப்பட்டுள்ளதாக சார்பதிவாளர் அலுவலகம் முன்பு உட்கார்ந்திருக்கும் டாக்குமெண்ட் ரைட்டர்கள் புலம்பி வருவது குறித்து செய்தியாளர்கள் சிலர் காதால் கேட்டு செய்தியாக பதிவிட்டுள்ளனர். லஞ்சம் லாவண்யங்களுக்கென பேர் போன சார்பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தம் என்பவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் இரவு 8.30 மணி அளவில் அலுவலகத்திலே இருந்து கொண்டு தனக்கு கீழ் பணிபுரியும் நபர்களை வைத்து தொலைபேசி மூலம் லேடி டாக்குமெண்ட் ரைட்டர்களுக்கு தொடர்புக் கொண்டு பத்திரப்பதிவு செய்ததற்காக நித்தியானந்தம் ஐயா தன் கால்குலேட்டரில் தெரிவித்த லஞ்சப் பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி தொந்தரவு செய்வதாக லேடி டாக்குமெண்ட் ரைடர்கள் தங்களின் வேதனையை தெரிவிக்கின்றனர்‌. எனவே வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீஸ் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி நாள் ஒன்றுக்கு 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சப் பணத்தை அள்ளிச் செல்லும் நித்தியானந்தம் போன்று லஞ்சப் பேய்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீஸ் அதிகாரிகள் அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் பொறிவைத்து பிடித்து பிணையில் வெளிவர முடியாத பிரிவினை பதிவுச் செய்து காப்புமாட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

தமிழக பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ் மற்றும் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ். ஆகிய உயர்மட்ட அதிகாரிகள். டெவெலப்மென்ட் ஏரியாவை கொண்ட  சார்பாதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகள். குளறுபடிகளை தடுக்கும் விதமாக அருமையான அதிகாரிகளைக் கொண்ட  ஒரு குழுவோ அல்லது நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. முறைகேடுகளை தடுத்து நிறுத்த  எடுக்கப் போகும்  நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button