மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
மனநிலை பாதித்த இரு பெண்களின் தாய்க்கு 25000 ரூபாய் கடன் உதவி!

இன்று (03.08.2021) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் சிறு வணிக கடன் திட்டத்தின் மூலம் ரூ.25,000/- கடனுதவிக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் செவிலிமேடு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மனநிலை பாதித்த இரு பெண்களின் தாய் திருமதி.மஞ்சுளா அவர்களிடம் வழங்கினார். உடன் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் திரு.பா.லோகநாதன் உள்ளார்.