மாவட்டச் செய்திகள்

எத்தனை விவசாயிகளை காவு வாங்க காத்திருக்கிறதோ!? அச்சத்தில் விவசாயிகள்! திண்டுக்கல் செட்டிநாடு சிமெண்ட்  ஸ்டோன் கிரசிங் பிளான்ட் தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!

சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகள் மற்றும் தூசிகள் விவசாய நிலங்களை பாதிக்கும், மண் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும், பயிர் உற்பத்தியைக் குறைக்கும்.
சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் தூசிகள் மற்றும் வேதிப்பொருட்கள் மண்ணில் படிந்து, மண்ணின் வளத்தை குறைக்கும். இதன் காரணமாக, பயிர்கள் போதிய அளவு ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல், விளைச்சல் குறையும்.
தொழிற்சாலை கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதால், நீர் ஆதாரங்கள் மாசுபடும். இதன் காரணமாக, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும், மேலும் அந்த நீரை பயன்படுத்தி செய்யப்படும் விவசாயமும் பாதிக்கப்படும்.
மண்ணில் உள்ள நச்சுப்பொருட்கள் பயிர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும், இதனால் விளைச்சல் குறையும்.
தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகள் மற்றும் தூசிகள் காற்றுடன் கலந்து, சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துகின்றன. இதனால், மனிதர்கள் மற்றும் விலங்குகள் உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிமெண்ட் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள், சூழல் மண்டலத்தின் சமநிலையை சீர்குலைக்கும். என்பது சாதாரண ஏழை எளிய சாமானியனுக்கு கூட தற்போது தெரியும்.
ஆனால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவில்லையா !?இல்லை தெரியாதது போல் நடிக்கின்றார்களா!?
இது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் & ஸ்டோன் கிரசிங் பிளான்ட் தனியார் ஆலை இயங்கி வருகிறது.


இந்த ஆலையை சுற்றி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த ஆலையின் மிக அருகில் மல்லபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிட் ஆலையில் புதிதாக கிரசிங் பிளான்ட் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் சுற்றுவட்டார விவசாய நிலங்கள் முழுவதும் பாலடைந்து இருப்பதால் விவசாய செய்ய முடியாமல் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் . அது மட்டும் இல்லாமல் இந்த

ஆலையைச் சுற்றி கால்நடை மேச்சல் நிலங்கள் அனைத்தும் மாசடைந்து மோசமான நிலையில் இருப்பதால் கால்நடைகளை வளர்ப்பவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும் அது மட்டும் இல்லாமல்  இந்த ஆலையில் இருந்து வெளிவரும் தூசிகளால் அப்பகுதி முழுவதும் மாசடைந்து அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நுரையீரல் தொற்று ஏற்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சைகள் பெற்று வருவதாகவும் இதனால் ஏற்படும் மன உளைச்சலால் தற்கொலை செய்வதை விட வேறு வழி இல்லை எனவும் கிராமப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

அது மட்டும் இல்லாமல்  இந்த ஆலைக்கு அனுமதி வழங்கும்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் நேரில் கள ஆய்வு செய்யாமலும் அப்பகுதி கிராம மக்களிடம் கலந்து ஆலோசிக்காமலும் சட்ட விரோதமாக தடையில்லா சான்றிதழ் வழங்கி எம் சாண்ட் தயாரிக்க அனுமதி  வழங்கி உள்ளது.
இந்த அனுமதி வழங்குவதற்கு திண்டுக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள்  செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை  நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதாகவும் ஆகவே பொதுமக்கள் நலன் கருதி விவசாயிகள் கால்நடைகள் பொதுமக்கள் அனைவருக்கும் பாதிப்படையும் வகையில் இயங்கி வரும் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து அந்த ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் இந்த ஆலைக்கு சட்டவிரோதமாக அனுமதி  வழங்கிய அதிகாரிகள் மீது  துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம்  23/07/25 அன்று வழங்கிய கோரிக்கை மனு மீது
26/ 6 /2025 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற செட்டிநாடு சிமெண்ட் ஸ்டோன் சிமெண்ட் கிருசிங் பிளான்ட் தொழிற்சாலை சம்பந்தமாக இருதரப்பு இரு தரப்பில் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும்
30 /6 /2025 அன்று மீண்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது .
அந்த புகார் மனுவில்
கூறியிருப்பது 23/06/25 அன்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் செட்டிநாடு சிமெண்ட் கிருசிங் பிளான்ட் தொழிற்சாலை மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது 26/ 6 /20025 அன்று மாலை 3 மணிக்கு வட்டாட்சியர் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை  ஐந்து பேர் கொண்ட குழு   ஏற்றுக்கொண்ட நிலையில்
கிராம பொதுமக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலையில் ஸ்டோன் கிரசிங் பிளான்ட் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை   கால்நடை பாதிப்பு விவசாய பாதிப்பு மற்றும் இழப்பு சம்பந்தமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
அதேபோல் ஒவ்வொரு முறையும் தொழிற்சாலையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது செட்டிநாடு தொழிற்சாலை  நிறுவனம் சார்பாக கூறிய வாக்கு மூலத்தை இதுவரை நிறைவேற்றவில்லை.
அது மட்டும் இல்லாமல்
07/02/2024 அன்று செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகத்தில் சார்பாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் 26/06/25 அன்று வட்டாட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மீண்டும் அதே வாக்குறுதியை கொடுத்துள்ளனர். மட்டுமில்லாமல் இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் நலன் கருதி எந்தவித பொதுமக்களின் பாதிப்பு சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் சார்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்
இந்த பேச்சுவார்த்தை மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆகவேதான் இரு தரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை மீது உடன்பாடு இல்லை என ஒரு கிராம பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துள்ளனர்.

ஆகவே  செட்டிநாடு சிமெண்ட் ஸ்டோன் கிரேசிங் பிளான்ட்டை அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த கிராம பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆகவே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி உடனடியாக செட்டிநாடு சிமெண்ட் ஸ்டோன் கிரசன்ட் பிளான்ட் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க
திண்டுக்கல்லில் நடக்கும் நூதன கனிமவள கொள்ளை சம்பந்தமாக
திண்டுக்கல் மாவட்டத்தில்  செயற்கை மணல் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது .அதுமட்டும் இல்லாமல்  கிரசர் நடத்த அரசு அனுமதி வாங்கிவிட்டு  செயற்கை மணல் தயாரித்து சட்டவிரோதமாக இயங்கி வரும்  குவாரிகளுக்கு தடை விதிக்க வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம் தடை ஆணை பெற்றுள்ளார்.
ஆனால் உயர் நீதிமன்ற தடை ஆணையை பொருட்படுத்தாமல் திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளை மூடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு
இந்த வழக்கு சம்பந்தமாக 16.7.2025 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்த நிலையில் திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் சரவணன் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முன்பு ஆஜராகி திண்டுக்கல்லில் மணல் கொள்ளை நடைபெறவில்லை எனவும் சட்ட விரோதமாக இயங்கி வந்த குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
பெயருக்கு புகைப்படங்களை சீல் வைத்தது போல் எடுத்துவிட்டு நீதிமன்றத்தையே அதிகாரிகள் ஏமாற்றி இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எது எப்படியோ
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனைப் பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் அனைவரும் துணை போவது தான் வேதனையாக உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் செட்டிநாடு சிமெண்ட் ஸ்டோன் கிரேசிங் பிளான்ட்டை அகற்ற  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்று…

Related Articles

Back to top button