மாவட்டச் செய்திகள்

அதிமுக மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் குத்தாலம் திமுக சேர்மேன்!?  இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் திமுக & அதிமுக மாவட்டச் செயலாளர்கள்!? திமுக கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்குமா!??

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக&திமுக மாவட்ட பொறுப்பாளர் இரண்டு பேரும்.  இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறார்கள் !??

மயிலாடுதுறை மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் &திமுக மாவட்ட பொருளாளர் நிவேதா முருகன்

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை!! மயிலாடுதுறை மாவட்டத்தில்!!
மயிலாடுதுறை திமுக மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தற்போது அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் சொல்லும் அனைத்தையும் தலையாட்டி பொம்மையாக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது!

லலிதா ஐ ஏ எஸ் (மாவட்ட ஆட்சியர்) மயிலாடுதுறை மாவட்டம்.

தற்போதுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கடந்த அதிமுக ஆட்சியில்  மாவட்ட ஆட்சியாளராக கொண்டுவரப்பட்டார்.
அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக எம்எல்ஏ மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் இவர்கள் அனைவருக்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அவர்கள் தற்போதும் விசுவாசியாக இருந்து வருகிறார் என்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் கடந்த அதிமுக ஆட்சியில்  200 கோடி ரூபாய்க்கு மேல் எடுத்த ஒப்பந்தம் வேலைகளை கையில் வைத்திருப்பதாகவும் அந்த வேலைகளை தவணை முறையில் செய்து வருவதாகவும் அப்படி தவணை முறையில் செய்த அந்த வேலைகள் அனைத்தும் தரமற்ற நிலையில்  இருப்பதாகவும்   மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பொது மக்கள் புகார் கொடுத்து நிலையிலும் மாவட்ட ஆட்சியர் லலிதா அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உடனே அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் அவர்களுக்கு காசோலைகள் வழங்கி விடுவதாகவும் இதற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 53  புதிய செவிலியர்களை நியமனம் செய்ய அரசு ஆணை போடப்பட்டது.
ஆனால் திமுக மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன்  மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை  இணை இயக்குனர் மகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து 63 பேர் பெயர் கொண்ட  பட்டியல் ஒன்றை கொடுத்து இவர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ளார் . அப்படி கொடுத்த பட்டியலில்  63 பேர் பெயர் இருந்துள்ளது. இதில் 30 பேர் பெயரை அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் கொடுத்ததாகவும் .
ஆனால் பட்டியலைப் பார்த்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் 53 செவிலியர்களை நிரப்ப அரசு ஆணை இருக்கும்போது 63 செவிலியர்களை எப்படி நியமனம் செய்ய முடியும் என்று அதிர்ச்சி அடைந்துள்ளார் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன்.அதன்பின் இப்படி எல்லாம் நீங்கள் வற்புறுத்தினாள் நான் என்னுடைய பணியை தொடர முடியாது என்று கூறியதாகவும் .அதுமட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியான 11 அலுவலக உதவியாளர் பணி இடங்கள் நிரப்ப மாவட்ட ஆட்சியர் லலிதா செய்தி வெளியிட்டிருந்தார் .மாவட்ட செயலாளர் நிவேதன முருகன் 11 பேரில் 8 பேர் பெயர் கொண்ட பட்டியலைக் கொடுத்து நான் கொடுத்த 8 பேரையும் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் வற்புறுத்தி உள்ளார்.இதனால் மாவட்ட ஆட்சியாளருக்கும் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனுக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும்  இந்த தகவல் முதல்வர் வரை சென்று உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது!  இதற்கு காரணம் அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேத முருகன் இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்து  செயல்பட்டு வருகிறார்கள் என்று திமுக  தொண்டர்கள் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகனின் அரசியல் அனுபவம் (இல்லாத)பயணம்! மாவட்டப் பொறுப்பாளர் பதவி பறிக்கபடுமா,!??

பாமக கட்சியிலிருந்து முன்னால் திமுக MLA மோகன்தாஸ் மூலம் 2004 இல் திமுகவில் சேர்ந்தார் தற்போதுள்ள மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன்!!

அதன்பின் 2010 ஆம் ஆண்டு ஒன்றிய திமுக செயலாளர் பதவிக்காக ஞானவேல் அவர்களை எதிர்த்து நின்ற நிவேத முருகன் ஒன்றிய செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு தோற்று விடுகிறார்.
பின்னர் ஒன்றியத்தை வடக்குத் தெற்காக பிரிக்கப் படுகிறது.
பின்னர் வடக்கு ஒன்றிய செயலாளராக நிவேதா முருகன் நியமிக்கப்படுகிறார்.
நிவேதா முருகனுக்கு குருநாதர் மாவட்டச் செயலாளராக இருந்த ஏ கே எஸ் விஜயன் .
அதன்பின் திமுக மாவட்டச் செயலாளரர் பதவிக்கு குத்தாலம் கல்யாணம்அவர்களை எதிர்த்து ஏ கே எஸ் விஜயன் தன்னுடைய சிஷ்யனான நிவேதா முருகனை நிற்க வைக்கிறார். அந்த மாவட்டச் செயலாளர் தேர்தலில் 9 ஓட்டில் தோற்கிறார் .
அப்போது ஏ கே எஸ் விஜயன் நிவேதா முருகனை மாவட்டச் செயலாளராக குத்தாலம் கல்யாணம் அவர்களை எதிர்த்து நிவேதா முருகனை நிறுத்தியதால் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏ கே எஸ் விஜய்னக்கு எதிராக ஒரு அணியாக திரண்டு குத்தாலம் கல்யாணம் அவர்களை வெற்றி பெற செய்கிறார்கள்.
பூம்புகார் தொகுதி 2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிக்கு திமுக வழங்கியது! அந்த நேரத்தில் நிவேதா முருகன் கூட்டணிக் கட்சி வேட்பாளரிடம் தொலைபேசியில் உங்களுக்கு சீட்டு வேண்டாம் என்று சொல்லுங்கள் அதற்கு ஒரு கோடி ரூபாய் வரை பணம் தருகிறேன் என்று பேரம் பேசிய ஆடியோவால் அப்போது சர்ச்சை ஏற்பட்டது. அந்த விவகாரம் திமுக தலைமை கழகம் வரை சென்றது என்கிறார்கள்.
அதன்பின் மாவட்டத்தில் திமுக 3 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் தோற்றது. அப்போது இருந்த மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்த திமுக குத்தாலம் கல்யாணம் அவர்களை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து திமுக தலைமை நீக்குகிறது.
ஆனால் மூன்று தொகுதிகளில் திமுக தோற்றதற்கு காரணம் ஏ கே எஸ் விஜயன் மற்றும் நிவேதா முருகன் கட்சிக்கு எதிராக வேலை பார்த்ததன் அடிப்படையில் தான் திமுக தோற்றது என்ற குற்றச்சாட்டு அப்போது பேசப்பட்டது.
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் திமுக தோற்றதற்கு முழு காரணம் எ கே எஸ் விஜயன் மற்றும் நிவேதா முருகன் என்று ஆணித்தரமாக பேசப்பட்டது.
ஆனால் திமுக கட்சி வேட்பாளர்கள் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தோற்றதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நிவேதா முருகன் திமுக கட்சியின் தலைமையில் உள்ள முக்கியப் புள்ளி ஒருவர் மூலம் மாவட்ட பொறுப்பாளர் பதவியை பெற்றுக் கொண்டார்.அதன்பின் தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள நினைத்த நிவேதா முருகன் தன் குருநாதர் ஏ கே எஸ் விஜயனை தன் பக்கம் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதன்பின் ஏ கே எஸ் விஜயனுக்கும் நிவேதா முருகனுக்கும் கோஷ்டி மோதல், உட்கட்சிப் பூசல் தற்போது வரை இருந்து வருகிறது.

நிவேதா முருகன் அரசியிலில் நீண்ட அனுபவம் இல்லாத காரணத்தினால் திமுக வில் உள்ள முன்னாள் மூத்த நிர்வாகிகள் யாரையும் மதிப்பதில்லை என்றும் திமுக கட்சியின் தலைமைக்கு எதிராக செயல்பட்டு வந்த சில நபர்களை கட்சியிலிருந்து நீக்கிய போதும் .நிவேதா முருகன் அவர்களிடம் உறவு என்ற பெயரில் பணத்தை பெற்றுக் கொண்டு தனக்கு ஆதரவாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு பதவிகளையும் கொடுத்து திமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச் சாட்டு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கட்சியில் உண்மையாக செயல்பட்டு வருபவர்களுக்கு எந்த ஒரு உதவிகளை செய்யாமல் பணம் படைத்வர்கள் மற்றும் எதிர்க் கட்சியில் உள்ள நபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பணத்தை சேர்ப்பது மட்டுமே கொள்கையாக வைத்துள்ளார் என்று திமுக உடன் பிறப்புகள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் .
பொறுத்து இருந்து பார்ப்பாம்!

குத்தாலம் (அதிமுக& திமுக )ஒன்றிய சேர்மன் மகேந்திரன்

முன்னாள் அதிமுக குத்தாலம் சேர்மன் மகேந்திரனுக்கு போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்)
அப்படியே திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனிடம் நாடகம் நடத்தி தற்போது திமுக குத்தாலம் சேர்மன் பதவியை தக்க வைத்திருக்கும் மகேந்திரன்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவின் கைக்கூலியாக திமுக மாவட்ட நிர்வாகிகள் தற்போது செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சேர்மேன் மகேந்திரன் அவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்று திமுக உடன் பிறப்புகள் கூறுகின்றனர்.
குத்தாலம் மகேந்திரன் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக மாவட்டச் செயலாளருமான முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பூம்புகார் தொகுதியில்  நடந்து முடிந்த 2021சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நின்ற போது தற்போது திமுகவில் இணைந்து குத்தால சேர்மனாக மகேந்திரன்
அதிமுக மாவட்டச் செயலாளர்  பவுன்ராஜ் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக  இரவு பகலாக தேர்தலுக்காக பாடுபட்டார் என்பதை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. ஏனென்றால் அதிமுகவில் குத்தாலம் சேர்மனாக மகேந்திரனை கொண்டுவந்தது அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ்தான் என்பதை உலகமே அறியும் என்கிறார்கள் திமுக உடன் பிறப்புகள்.
அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் அவர்களை எதிர்த்து திமுக மாவட்ட பொறுப்பாளர்  நிவேதா முருகன் வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தலில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேத முருகன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆன பிறகு குத்தாலம் அதிமுக சேர்மன் மகேந்திரனை அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் அழைத்து திமுகவில் இணைந்து கொண்டு அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட சொன்னதாகவும் அப்படியே செய்கிறேன் என்று  கூறிவிட்டு திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனை குத்தால அதிமுக சேர்மன் மகேந்திரன் நேரில் சந்தித்து திமுகவில் இணைத்துக் கொள்வதாக கூறி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு குத்தால சேர்மன் பொறுப்பை மகேந்திரன் தக்கவைத்துக் கொண்டு தற்போது அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் அவர்கள் சொல்லும் வேலைகளை அனைத்தையும் செய்து கொடுப்பதாகவும் அதிமுகவில் விசுவாசமாகவே குத்தாலம் சேர்மன் மகேந்திரன் செயல்பட்டு வருவதாகவும் திமுக உடன்பிறப்புகளின் குற்றச்சாட்டாக உள்ளது!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர் நிவேத முருகனுக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ்க்கு விசுவாசியாக செயல்பட்ட அதே அதிமுக குத்தால  சேர்மேன் மகேந்திரன் தான் தற்போது திமுகவில் இணைந்து கொண்டு அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் திமுக கவுன்சிலர்கள் ஒன்றுகூடி
நம்பிக்கையில்லாத் தீர்மானம்கொண்டுவருவதற்கு  கோரிக்கை விடுத்தனர்

அப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் மகேந்திரனுக்கு எதிராக அனைத்து திமுக  கவுன்சிலர்களும்  எதிர்த்து வாக்களித்து சேர்மன் பதவியிலிருந்து மகேந்திரனை நீக்கிவிடவேண்டும் என்று கூறியுள்ளனர். இதை அறிந்த குத்தாலம் மகேந்திரன் திமுக மாவட்ட பொறுப்பாளர் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம் நேரில் சந்தித்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வராமல் தடுக்க வேண்டும் என்றும்  எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கேட்டதற்கு இணங்க திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வராமல் முட்டுக்கட்டை போட்டு விட்டார் என்றும் திமுக கவுன்சிலர்கள் கூறி வருவதாக தகவல் வந்துள்ளது. அப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருந்தால் தற்போது மகேந்திரன்  சேர்மனாக இருக்க முடியாது என்றும் திமுக உடன் பிறப்புகள் கூறுகின்றனர்.
எது எப்படியோ தற்போது குத்தாலம் சேர்மன் மகேந்திரன் அதிமுக மாவட்டச் செயலாளர்  பவுன்ராஜ் சொல்வதை மட்டுமே கேட்டு நடப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள் எதைக் கேட்டாலும் செய்து கொடுப்பதாகவும் திமுக நிர்வாகிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும்
அதிமுக தொண்டர்கள் ஆனந்தத்தில் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

திமுக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் தற்போது இருந்து வருவதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாத சில அதிமுக மாவட்டச் செயலாளர்கள் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் மறைமுகமாக திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் கைகோர்த்துக்கொண்டு திமுக கட்சி தொண்டர்கள் மத்தியில் முகம் சுழிக்கும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. திமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் கட்சித் தலைமை சிறப்புக் குழு அமைத்து வரும் நகராட்சி தேர்தலுக்குள் முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே நகராட்சித் தேர்தலில் திமுக தொண்டர்கள் அனைவரும் ஒரு மனதோடு கட்சி வேலைகளை செய்து திமுக கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதுதான் திமுகவின் அடிமட்டத் தொண்டனின் ஒட்டுமொத்த குரலாகும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button