மருத்துவம்
மருத்துவ மனையின் பதிவேட்டிலிருந்த 14 நோயாளிகள் மாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையை
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் டாக்டர்.மா.ஆர்த்தி,திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நேரில் சென்று பார்வையிட்டு, அங்குள்ள அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்து மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

மருத்துவமனையில் மருத்துவ பதிவேட்டில் உள்நோயாளியாக பதிவு செய்யப்பட்ட 14 நோயாளிகள் எங்கே என மருத்துவர்களை திடீர் ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பினார்
அதற்கு பதில் சொல்ல முடியாமல் மருத்துவ மனையில் இருக்கும் உழியர்கள் நின்றனர். வருகைப் பதிவேட்டை ஆய்வுசெய்தார். மேலும், வெளி நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் இடம் ஆகியவற்றை ஆய்வுசெய்து, முறையாக மருந்துகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதையும் சோதனை செய்தார்.