மலையை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கும் மழை வாழ் மக்கள்!
திணறும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை!
மலையை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கும் மழை வாழ் மக்கள்!
திணறும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை!
இந்தியாவில் மலைப் பகுதியில் வாழும் பழங்குடிகள், ஆதிவாசிகள் என அனைவரும் காலம்காலமாக காடுகளில் வாழ்கிறார்கள். இதில் பழங்குடிகளின் வரலாறு என்பது சுமார் 3,000 – 4,000 பழமை வாய்ந்தது.
காடுகளை பாதுகாப்பது, காடுகளுடன் இணைந்து வாழ்வதும்தான் மலைவாழ் மக்களோட முக்கியமான வேலை. காடு இல்லை என்றால் அவர்கள் இல்லை, அவர்கள் இல்லை என்றால் காடுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம். அதுமட்டுமில்லாமல் காட்டை அழிப்பதற்கு பெரும் தடையாய் அங்குள்ள பழங்குடி மக்களும், மலைவாழ் மக்களும் இருந்தார்கள். அதனால் காட்டை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மலைவாழ் மக்கள் எல்லோரையும் ஆங்கிரமிப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.
மேகமலை வனப்பகுதி கடந்த 2009-ம் ஆண்டு வன உயிரின சரணாலயமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் (G.O M.S No-118) அவ்வனப்பகுதியில் வசித்து விவசாயம் செய்துவரும் மக்களின் வாழ்விடம் மற்றும் விவசாயப் பரப்புகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கொண்டுவரப்பட்டன.
பழங்குடியினருக்கு எதிரான உத்தரவை சமீபத்தில் நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் காடுகளில் வசிக்கும், பட்டா இல்லாத 11,27,446ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு.பட்டா இல்லாத பழங்குடி மக்கள் வனப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.தமிழகத்திலிருந்து 11,742 பேர் வெளியேற்றப்படவுள்ளனர்.
வருசநாடு அருகே, மேகமலை ஊராட்சிகளுக்கு உட்பட்ட அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர், ராஜீவ் நகர், வெள்ளிமலை, காந்திகிராமம், வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், கோடாலியூத்து, காமராஜபுரம், பஞ்சதாங்கி, மஞ்சனூத்து, யானைகஜம், உப்புத்துறை மாற்றும் அகமலை அண்ணாநகர் பகுதியில் 200 குடும்பங்கள் உள்ள கிராமங்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள மலைவாழ் விவசாய மக்களை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து மலையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை நிர்வாகம் இறங்கி உள்ளது.பல தலைமுறைகளாக வசிக்கும் இடத்தை விட்டு திடீரென வெளியேறச் சொல்வதை அம்மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
ஒரு நாட்டை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் அதன் ஆதி மனிதர்களையும், அவர்களது பண்பாடுகளையும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையுடன் தொடர்பில் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்வது வேதனையான ஒன்று.
300 குடும்பமாக அரசரடி மலைப்பகுதியில் காலம் காலமாக வாழ்ந்து வருவதாகவும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறையினர் திடீரென்று மலையை விட்டு கீழே இறங்கச் சொன்னால் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக ஆகிவிடும் .
இந்திய அரசியல் சாசனம் 1950ல் கோட்பாடு 51(அ) (எ) -ன் கீழ் இயற்கை வளங்களை காப்பாற்ற பொதுமக்களுக்கும் கடமைகள் உண்டு . மலையை விட்டு மலைவாழ் மக்கள் வெளியேற வேண்டும் என்றால் மூன்று விதமான கோரிக்கைகளை மலைவாழ் மக்கள் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் வைக்க உள்ளனர். 300 குடும்பங்களுக்கும் தலா மூன்று ஏக்கர் விவசாய நிலம் வழங்க வேண்டும் .
2) 300 குடும்பங்களுக்கும் வீடு வழங்க வேண்டும்
3) விவசாயம் செய்து பிழைக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும்
என்று பாதிக்கப்பட்டோர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் த.கா. ராதாகிருஷ்ணன் தலைமையில் வடசென்னை மாவட்ட செயலாளர் நா. ரவிச்சந்திரன்,திருவள்ளூர் மாவட்ட தலைவர் கி. மூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எ. தாமோதரன் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் நிபந்தனை கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.