போக்குவரத்துத் துறை

மாதம் அரை கோடி வரை கல்லா கட்டும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம்!!?இடைத்தரகர்களின் கூடாரமாக இயங்கும் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு கட்டவிழ்த்துவிடப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் RTO முருகானந்தம்!


தமிழகமுழுவதுமுள்ள வட்டாரப்போக்குவரத்தஅலுவலகங்களில் வாகனஓட்டுனரஉரிமம் வாகனங்களின் உரிமம் புதுப்பித்தல் புது வாகனங்களுக்கு பதிவு எண் போன்ற அனைத்தையுமே இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்லைனில் பதிவு செய்து அதன்பின் அந்தத் தேதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தால் போதும் என்ற நிலையை மாற்றி தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் வரும் எந்த ஒரு உரிமத்திற்கு கையெழுத்து போடுவது இல்லை வட்டரப்போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசாங்கம் விதித்த கட்டணத்தைவிட இடைத்தரகர்கள் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து வசூல் செய்வது தான் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போதைய அதிர்ச்சித் தகவல்.
(1). வாகனம் ஓட்டி காண்பிக்காமல் ஓட்டுநர் உரிமம் பெற 5,000 ரூபாய்

(2). இரண்டு சக்கர வாகனத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெற வாகன சோதனையில் 8 போடும் போது தன்னுடைய ஒரு காலை தரையில் வைத்தால் அதற்கு 500 ரூபாயும்
இரண்டு கால்களை தரையில் ஊன்றினால் அதற்கு 1000ரூபாய்
இந்தக் கட்டணத்தை இடைத்தரகர்கள் உரிமம் பெற வரும் நபர்களிடம் வசூல் செய்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமாம். அப்படி ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்கள் இவர்கள் கேட்கும் பணத்தை தர மறுத்தால் உடனே வாகன சோதனையில் சரியாக வாகனத்தை ஒட்டவில்லை என்று உரிமம் தர மறுத்து விடுவதாக தகவல் வந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் நல்லாட்சியை செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளை பற்றி இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக ஆளுநர் உள்பட அனைவரும் பாராட்டி வரும் நிலையில் திமுக கட்சி மற்றும் ஆட்சியை களங்கப்படுத்தும் வகையில் தற்போது கோவை மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பதிவுத் துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலகங்களில் சட்டவிரோதமான செயல்களில் அரசு அதிகாரிகள் நடந்து வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில்
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ளே சென்றால் இடைத்தரகர்கள் அதிகாரிகள் போல் இருக்கைகளில் அமர்ந்து இருப்பதைத் தான் காண முடிகிறது .

நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களின் உரிமங்களை புதுப்பிக்க இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருவதால் கோவை மாவட்டத்திலேயே அதிகமாக வருமானம் அரசுக்கு ஈட்டித் தரும் அலுவலகமாக இந்த அலுவலகம் திகழ்ந்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அரசுக்கு வரும் வருமானத்தை விட மூன்று மடங்கு வருமானம் இடைத்தரகர்கள் மூலம் முருகானந்தத்திற்கு கிடைப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்துமே கேரளாவுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகும். கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி கேரளா சோதனைச் சாவடியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பெயரளவில் மட்டுமே சோதனை நடத்துவார்கள். ஏனென்றால் வாகனங்களை புதுப்பிக்க வரும்பொழுது வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி களிடம் மாதம் ஒரு பெரிய தொகையை இடைத்தரகர்கள் நிர்ணயம் செய்து விடுவார்கள் . அப்படி நிர்ணயம் செய்த ரூபாய் மாதம் சுமார் 25 லட்சம் வரை இருக்கலாம் என்ற ஒரு அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது.
மற்றும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் கேரளாவிற்கு லாரிகள் மூலம் மாடுகள் ஏற்றிச் செல்வது பொள்ளாச்சி சோதனைச்சாவடி வழியாக தான் அதிகமாக இருக்கிறது என்பதால் மாடுகளை லாரியில் ஏற்றிச் செல்லக்கூடாது என்ற சட்டவிதிகளை மீறி சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்களிடம் இடைத்தரகர்களை வைத்து1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வாகனங்களுக்கு ஏற்றார் போல் பணம் பெற்றுக்கொண்டு எந்தவித சோதனையும் செய்யாமல் வாகனத்தின் எந்தவித சான்றிதழ்களின் சரி பார்க்காமல் அந்த வாகனங்களை விட்டுவிடுவதுதால் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்த் அதற்கு மாதம் பல லட்சம் கிடைப்பதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் மண், கல், எம் சான்ட்டல் ,ஜல்லி,போன்ற கனிம வளங்களை சட்டவிரோதமாக கேரளாவுக்கு எடுத்துச் செல்லும் பல கனரக வாகனங்களின் உரிமம் புதுப்பிக்காமல் இருப்பதாகவும் அதை கண்டு கொள்ளாமல் இருக்க ஒரு பெரிய தொகையை பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்த் அதற்கு கிடைப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பொள்ளாச்சியிலிருந்து கேரள எல்லைக்குள் செல்லும் தனியார் சொகுசுப் பேருந்துகள் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் செல்வதாகவும் அந்த தனியார் சொகுசு பேருந்து உரிமையாளர்கள் மாதம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முருகானந்த் அதற்கு ஒரு பெரிய தொகையை கொடுத்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்ல பொள்ளாச்சியில் மட்டும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பள்ளி வாகனங்கள் தற்போது இயக்கப்படுகிறது. அப்படி பள்ளி வாகனங்களை பெயரளவில் சோதனை செய்துவிட்டு தகுதிச் சான்றிதழ் கொடுத்து விட்டு பள்ளி உரிமையாளர் மற்றும் தாளாளர்களிடம் மாதம் ஒரு பெரிய தொகையை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் இடைத்தரகர்கள் மூலம் பெற்றுக் கொள்வதாகவும் என்ற அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது.
இப்படி பல விதங்களில் மாதம் பல கல்லா கட்டும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முருகானந்தத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் புகார்கள் தற்போது எழுந்துள்ளது.
எது எப்படியோ வாகன விபத்துக்கள் நடக்கும் போது தான் இது போன்ற ஒருசில தவறுகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் செய்து இருப்பது தெரியவரும் அப்போது இது பெரிய பேசுபொருளாக இருக்கும் . லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும் சோதனை செய்து அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால்அதன் பின்பு அனைவரும் அதை மறந்து விடுவார்கள். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை பொருத்தவரை பொங்கல் தீபாவளி போன்ற நேரங்களில் மட்டும் சோதனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஆகவே மாதம் ஒரு முறை தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தால் மட்டுமே அங்கு நடக்கும் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை கண்டுபிடிக்க முடியும்.
ஆகையால் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் நேர்மையான அதிகாரிகளை நியமித்து இது போன்று இடைத்தரகர்களை வைத்து பல லட்சங்களை லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இடைத்தரகர்கள் இல்லாத பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் பொது மக்களின் அச்சம் நீங்கும் என்பது தான் நிதர்சனம்.
பொறுத்திருந்து பார்ப்போம்..

Related Articles

10 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button