மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை ஊழல் முறை கேடு!சேலம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி விடுதி காப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா!?
மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை ஊழல் முறை கேடு!
சேலம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி விடுதி காப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது
பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா!?
எல்பிசி., இல்லாமல்
போலியாக முன் ஊதியச் சான்று தயாரித்து கருவூல அலுவலகத்
தையும் பழங்குடியினர் திட்ட அலுவலகத்தையும் ஏமாற்றி மாத ஊதியம் பெற்று முறைகேடு!
கற்பிக்காமல்
சிறப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளாக மாற்றி (scribe) எழுத்தர் வைத்து தேர்வு எழுத வைப்பதாக குற்றச்சாட்டு!
பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா?அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஆகும். இவை பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை, பொதுப் பிரிவினர் அளவிற்கு இணையாகக் கொண்டு வர அரசால் எடுக்கப்பட்ட முயற்சியாகும். இந்தப் பள்ளியில் மாணவர்கள் கட்டாயம் அங்கேயே தங்கி படிக்க வேண்டும்.
இந்திய மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இது சுமார் ஒரு சதவீதம். ஆனால், எண்ணிக்கையில் இவர்கள் சுமார் எட்டு லட்சம் பேர். தமிழ்நாட்டின் வெவ்வேறு மலைகளில் வெவ்வேறு சமூக, கலாசார, பொருளாதார சூழ்நிலையில் வாழும் இம்மக்களின் எழுத்தறிவு 54 சதவீதம் மட்டுமே. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 3 கி.மீ.க்குள் தொடக்கப் பள்ளி இருக்க வேண்டும் என்றாலும் மலைப் பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.மலைப் பகுதிகளில் இக்குழந்தைகளுக்கு கல்வி வழங்க 17 மாவட்டங்களில் 314 அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சுமார் 30,000 பேர் பயில்கின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் இப்பள்ளிகளைக் கண்காணிப்பதில்லை.
இதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக தற்போதுஓடைகாட்டுப் புதூர் பழங்குடியின உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிபள்ளி
தலைமை ஆசிரியர் எல்பிசி., இல்லாமல் சம்பளம்….
தேர்ச்சி பெற மாணவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து
மாற்று திறனாளிகளாக மாற்றி ( scribe)
எழுத்தர் வைத்து தேர்வுகளை எழுத வைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜி.டி.ஆர் எனப்படும் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆதி திராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.. ஆரம்ப கல்வியே இன்றளவும் எட்டாக் கனியாக உள்ள விளிம்பு நிலை மாணவ மாணவிகளுக்கு, கல்வி கிடைக்க அரசால் உருவாக்கப்பட்ட மிக உன்னதமான பள்ளிகள் தாம் இவை.
மூன்று வேளை உணவு, உறைவிடம், கல்வி என சகலமும் இவர்களுக்கு கிடைக்க அரசு செல விடுகிறது.
சேலம் கெங்கவல்லி வட்டம்,
ஓடைகாட்டுப் புதூர் பழங்குடியின உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிபள்ளி முறைக்கேடு
களில் டாப் லிஸ்ட். இந்த விடுதியில் காலையில் வெறும் 30 சதவீத மாணவர்களே சாப்பிடுகின்றனர். மேலும் சனி மற்றும் ஞாயிறுகளில் மாணவர்கள் விடுதியில் தங்குவதே இல்லை. இந்த விடுதிகளில் சராசரியாக மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை ஊழல் முறை கேடு நடப்பதாகவும் விடுதி காப்பாளர்களான தலைமை ஆசிரியர் பாக்கியசேனன் என்பவர் முறையாக பள்ளிக்கு வருவதில்லை என்றும். வாரத்தில் புதன் கிழமை அன்று மட்டும் பள்ளிக்கு, அதுவும் மதியம் 12 மணிக்கு பச்சை மலை அடிவாரத்தில் உள்ள சோபனபுரம் “அரசின் பச்சை கடையிலிருந்து” பள்ளிக்கு வருவார். அவருக்கு சமையல் செய்யும் ராமசாமி,கல்பனா சிறப்பாக செய்து வைத்திருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, குழந்தைகள் என்ன சாப்பிட்டார்கள் என்கிற கவலை ஏதுமின்றி 2 மணிக்கு வீட்டிற்கு திரும்பி விடுவார்.சமையலர்கள் இருவரும் குழந்தைகளிடம் ஒருமையில் பேசி, “போடுறத தின்னுங்க” கொடூரமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு இழந்துள்ளது.தங்கி படிக்கக் கூடிய 134 மாணவர்களின் உணவுப் பட்டியல் படி உணவு வழங்குவ
தில்லை.10 வது வகுப்பு படிக்கும் உள்ளூர் மாணவர்களை இரவில் வர வைத்து சமையலர்கள் இருவரும் புகைப்படம் எடுத்து தலைமை ஆசிரியருக்கு அனுப்பி விடுவார்கள். அதை ஆதாரமாக வைத்து விடுதி கட்டணத்தை தானே எடுத்துக்கொண்டு முறைகேடு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம் என பெற்றோர்களே கவலைப்
கவலைப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால் எந்த கவலையும் இன்றி தேர்வு மையம் நமது பள்ளி என்பதால் மாணவர்களிடம் கலியமூர்த்தி என்கிற தொகுப்பூதிய ஆசிரியர் மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் தலா ரூபாய் 500 வசூலித்து தேர்வு நடத்த வரும் கண்காணிப்பாளர்களுக் கறி விருந்து வைத்து மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்து விடலாம் என்கிற பாதையில் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது
மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்தது முதல் உடல் ரீதியான குறைபாடுகள் மற்றும் கற்றல் குறைபாடுகள் இருந்தால் அதை அந்த கல்வி நிலையத்திற்கு உட்பட்ட வட்டார வள மையம் மூலமாக, இது போன்ற குழந்தைகளைக்
கண்காணித்து வழிகாட்ட சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளனர். ஆனால் ஓடைக்காட்டுப் புதூர் பள்ளியில் 1முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில் சிறப்பு குழந்தைகள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் பத்தாம் வகுப்பில் மார்ச் மாதம் வந்த உடன் கற்றலில் பின் தங்கிய குழந்தைகளை( IED) அறிவுசார் குறைபாடு மற்றும் இயக்க குறைபாடு உடைய சிறப்பு குழந்தையாக மாவட்ட குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறை அலுவலரை கவனித்து, (IED)Individualized Education Program in the field of education.
கல்வித் துறையில் தனிப்பட்ட கல்வித் திட்டமாக மாற்றி விடுவதாகும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது போன்ற சட்ட விரோத செயல்களை செய்வதற்கென்றே கொடுங்கல் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற கணித பட்டதாரி ஆசிரியர் கிருஷ்ணகுமார் உள்ளார். கொடுங்கல் கிருஷ்ணகுமார் மற்றும் ஓடைக் காட்டுப் புதூர் பாக்கிய சேனன் இதற்காக பெற்றோர்களிடம் ரூபாய் 10,000 வசூலித்து இந்த வேலையை செய்கின்றனர். இதனால் கற்றலில் பின் தங்கிய குழந்தைகளுக்கு கற்றல் உத்திகளை மாற்றி கற்பிக்காமல்
சிறப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளாக மாற்றி (scribe) எழுத்தர் வைத்து எழுதும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டிலும் உள்ளது.
ஓடைக்காட்டுப் புதூர் தலைமை ஆசிரியர் பாக்கிய சேனன் இதற்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம் அரச வெளியில் பணிபுரிந்து இங்கே 8 மாதங்கள் ஆகியும் அங்கிருந்து பணிப் பதிவேடு மற்றும் முன் ஊதியச் சான்று (LPC) இல்லாமலேயே போலியாக முன் ஊதியச் சான்று தயாரித்து கருவூல அலுவலகத்
தையும் பழங்குடியினர் திட்ட அலுவலகத்தையும் ஏமாற்றி தற்போது வரை சம்பளம் பெற்று வருவது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது எப்படி? இல்லை தெரிந்தும் தெரியாமல் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா?
என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே ஓடைக்காட்டுப்புதூர் தலைமை ஆசிரியர் பாக்கிய சேனன் மீதும், கொடுங்கல் உண்டு உறைவிட உயர்நிலைப்
பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற கணித பட்டதாரி ஆசிரியர் கிருஷ்ணகுமார் மீதும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை நடவடிக்கை எடுப்பாரா?
விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் அனைத்தையும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும்.திட்ட செயலாக்கத்தையும், தொடர் கண்காணிப்பையும் பள்ளிக் கல்வித் துறை உறுதி செய்வதும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.
பழங்குடியின மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்த, இவர்களின் நலனில் அக்கறையுள்ள அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்து அமர்த்துதலே முதன்மையான சீர்திருத்தமாகும்.விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் விடுதிகளில் தங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இடைநிற்றலைத் தடுக்க தொடர்ந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ஒரு தொகையை கல்வி ஊக்கத் தொகையாக வழங்கலாம்.விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பது என நிர்ணயம் செய்வதைத் தவிர்த்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும்.பழங்குடி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அவர்களது சமூகப் பொருளாதார, கலாசார வாழ்நிலையில் இருந்து மதிப்பீடு செய்து கீழ்காணும் தீர்வை நோக்கிச் செல்ல வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.
பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு இலவச, சமமான, கட்டாய தரமான கல்வி உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். பழங்குடி பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் சமவெளிப் பகுதியில் உள்ளதுபோல் அல்லாமல் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல், கற்பித்தல் முறைகள் உருவாக்கப்படவேண்டும்.
போதுமான கட்டடங்கள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, ஆய்வக நூலக வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அவற்றை மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இயற்கையோடு இணைந்த நீண்ட நெடிய வாழ்வியல் வழிமுறையில் கண்டறியப்பட்ட குன்றா வளர்ச்சிக்கான அடிப்படையாக கூறுபாடுகளை எப்படி பிற பகுதி மக்கள் பின்பற்ற முடியும் என்பதற்கான ஆய்வுகள் வேண்டும்.
பழங்குடியினர் நலனில் அக்கறையுள்ள கல்வியாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் அமைப்புகள் ஆகியோரைக் கொண்ட மாநில அளவிலான ஒரு பொது மேடையை பழங்குடியினர் கல்வி உரிமை கூட்டமைப்பு எனும் பெயரில் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
சென்னை, மே 16 -ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிக ளுக்காக ரூ.82.02 கோடியில் கட்டப்பட் டுள்ள விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (15.5.2023)அன்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் பழங்குடியினர் மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் .