தமிழ்நாடு

மாதம் 200 கோடி வரை மாமூல் வசூல் கோவை மாவட்டம் கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில்!??

தமிழக கேரளா எல்லை சோதனைச் சாவடியில் மாதம் 200 கோடி வரை மாமூல் வசூல்!!?

சட்டவிரோதமாக டிப்பர் லாரிகளில் தார்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்லும் வீடியோ காட்சி

கோவை மாவட்டம் கேரளா எல்லைக்குள் ஓவர்லோடு டிப்பர் லாரிகளை அனுமதிக்க….லாரி ஒன்றுக்கு 2,000 ரூபாய் கப்பம் கட்டவேண்டும் என்ற தகவல் வந்துள்ளது.

தமிழக முதல்வர் மருமகன் பெயரை பயன்படுத்தி அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன் உறவினரான மணல் மாபியா என்று அழைக்கப்படும் நந்து என்பவர் சமூக விரோதிகளை வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக மண் கருங்கல் ஜல்லி எம் சான்ட் எடுதுச் செல்லும் டிப்பர் லாரிகளிடம் வசூல் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி ஜெயராமன் உறவினரான நந்து
கிணத்துக்கடவு வடசித்தூர் ஒன்றிய செயலாளராக இருந்து வந்து உள்ளார் இவர் மீது
மணல் சந்தன கட்டை போன்ற சட்ட விரோதமான கடத்திய செயல்களை செய்து வந்துள்ளதாகவும் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்து நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது அதிமுகவிலிருந்து கட்சியில் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினரான கிணத்துக்கடவு வட செந்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் திமுக வில் இணைந்து விட்டதாகவும்
திமுக கட்சி தலைவரின் மருமகனான முக்கிய புள்ளிக்கு நெருக்கமாக இருக்கிறேன் என்றும்
எவ்வளவு பணம் வசூல் செய்தாலும் அந்தப் பணத்தை திமுக கட்சி தலைவரின் மருமகனான முக்கிய புள்ளிக்கு தருவதாகவும்
சொல்லி இந்த வசூல் வேட்டை செய்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கேரள மாநிலத்திற்குள் ஒரு நாளைக்கு 10,000 டிப்பர் லாரிகள் செல்கிறது .
மாதம் குறைந்தது 3 லட்சம் டிப்பர் லாரிகள் ஓவர்லோடு மண் எடுத்துச் செல்லும் என்றும் எடுத்துச்செல்லும்
டிப்பர் லாரி ஒன்றுக்கு 2,000 ரூபாய் வரை மணல் மாபியா கும்பல் மாமூல் வசூல் செய்துவருவதாக தகவல்கள் வந்துள்ளது.

கோவை மாவட்டம் திருப்பூர் காரமடை போன்ற இடங்களில் இருக்கும் குவாரிகளில் இருந்து எம் சான்ட், ஜல்லி ,கருங்கல் ,மெட்டல், போன்றவற்றை டிப்பர் லாரிகளில் ஏற்றிக் கொண்டு செல்ல தமிழக மாநில எல்லையில் ஒன்பது இடங்களில் செக்போஸ்ட் சோதனைச் சாவடி அமைக்கப் பட்டுள்ளது. வாளையாறு ,வழுக்கள் ,வீரப்ப கவுண்டனூர் ,குப்பன் கவுண்டனூர் , ஜமீன்காளையாபுரம் ,கோபலபுரம் ,
மீனாட்சிபுரம் வளர்ந்தாய் மரம்.
இந்த ஒன்பது சோதனைச்சாவடி RTO மாவட்ட வாகனப் போக்குவரத்து அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் அங்கு நடப்பது வேறு இந்த ஒன்பது சோதனைச்சாவடி அருகிலும் தனியார் கட்டடத்தில் ஒரு அலுவலகம் இயங்குகின்றது என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
அந்த அலுவலகத்தில் தான் மாபியா கும்பலின் தலைவராக செயல்படும் பொள்ளாச்சி ஜெயராமன் உறவினரான நந்து அடியாட்களுடன் சட்டவிரோதமாக ஓவர்லோடு எடுத்துச்செல்லும் டிப்பர் லாரிகளை மறித்து லாரி ஒன்றுக்கு ஒருநாளைக்கு 2000 ரூபாய் மாமூல் வாங்கி வருவதாகவும்

இப்படி மாமூல் வாங்கும் பணம் மாதம் சுமார் 200 கோடி வரை இருக்கும் என்றும்அந்தப் பணத்தை
தமிழக முதல்வர் மருமகன் சொல்லும் இடத்தில் தரவேண்டும் என்றும் அந்த மாபியா கும்பல் சொல்லி வருவதாக தகவல் வந்துள்ளது.

இதுபோன்று 40 முதல் 50 டன் வரை எடுத்துச் செல்லும் டிப்பர் லாரி களினால் சாலைகள் மிகவும் பழுதடைந்து மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த வழியில் செல்லும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பலமுறை இது சம்பந்தமாக பல அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை மாறாக புகார் கொடுப்பவர்களை சமூக விரோதிகள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஒரு சில முன்னணி பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது.
ஆனால் எத்தனை பத்திரிக்கை செய்திகள் வந்தாலும் இந்த தமிழக-கேரள எல்லை களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச்செல்லும் டிப்பர் லாரிகளை அனுமதிக்க இந்த மாபியா கும்பல் உடந்தையாக செயல்படுவதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் உடனே தனிப்படை அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தி பொது மக்களிடம் இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

எது எப்படியோதமிழகத்தில் நல்லாட்சிதர வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழகத்திற்கு முதல்வராக வந்துள்ள மு க ஸ்டாலின் அவர்கள் பெயரையும் திமுக கட்சியின் பெயரையும் களங்கப்படுத்த இப்படி ஒரு மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறதா என்ற ஒரு சந்தேகம் எழுந்து வருகிறது.
இந்த சந்தேகத்தை எல்லாம் தமிழக முதல்வர்தான் தவிடுப்பொடியாக்கி ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button