மாதம் 5 லட்சம் லஞ்சம் கப்பம் கட்டவேண்டும்!?அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுப் பணத்தை முறைகேடு செய்யும் சீர்காழி ABDO அருள்மொழி மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவு போடுவாரா தமிழக முதல்வர் !??
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுப் பணத்தை முறைகேடு செய்யும் சீர்காழி ABDO அருள்மொழி மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவு போடுவாரா தமிழக முதல்வர் !??
37 ஊராட்சி மன்ற பணித்தளப்பொறுப்பாளர்களிடம் மாதம் சுமார் 5லட்சம் வரை கல்லா கட்டும் சீர்காழி ABDOஅருள்மொழி என்ற அதிர்ச்சித் தகவல்!??
தமிழகத்தில் பெரும்பாலாக திமுக அதிமுக கட்சிகள் தான் ஆட்சியில் இருந்து வந்துள்ளது. அப்படி மாறி மாறி திமுக அதிமுக ஆட்சி செய்யும் போது செய்த போதெல்லாம் அந்த அந்தக் கட்சி நிர்வாகிகள் எனக்கு சட்டமன்ற உறுப்பினர் மிகவும் நெருக்கமானவர் அமைச்சர் மிகவும் நெருக்கமானவர் முதல்வர் மிகவும் நெருக்கமானவர் என்று சொல்வதுதான் வழக்கம்.
கடந்த அதிமுக ஆட்சியில் கீழ்மட்ட அரசு அலுவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை எனக்கு அந்த அமைச்சரை தெரியும் இந்த அமைச்சர் எனது உறவினர் அந்த அமைச்சர் என் மனைவிக்கு உறவினர் என்று சொல்லிக் கொண்டு தாங்கள் செய்யும் அரசுக்கு எதிரான சட்ட விரோதமாக லஞ்ச ஊழல் மோசடிகளை மறைக்க இது போன்ற யுக்திகளை பயன்படுத்தி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
ஆனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி யூனியன் அலுவலகத்தில் பணியில் இருக்கும் பெண் ABDO அவர்கள் ஒரு படி மேலே சென்று தமிழக முதல்வர் துணைவியார் எனக்கு மிக நெருக்கமானவர் என்று புருடா விட்டுக் கொண்டு அலுவலகத்தில் வருபவர்கள் அனைவரையும் மிரட்டி கொண்டு இருப்பதாக தகவல்.
சீர்காழி யூனியனுக்கு உட்பட்ட 37 ஊராட்சி மன்றங்கள் கொரோனா உச்சகட்டத்தில் இருந்த போது 13 ஊராட்சி மன்றங்களுக்கு கொடுக்க வேண்டிய பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் அனுப்புமாறு ABDO அருள்மொழிடயிடம் கேட்டுள்ளனர். ஆனால் பிளிச்சிங் பவுடர் மூட்டைகளை அனுப்பாமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார் . அதுபோக ஏ பி டி ஓ அருள்மொழி ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்துக்கு புறம்பாக தன்னுடைய சுயலாபதிற்காக 37 ஊராட்சி மன்ற பணிதளப்பொருப்பாளர்களை நியமனம் செய்து அவர்களிடம் வாரம் ஒரு ஊராட்சி மன்ற பணித்தள பொறுப்பாளர் 2000 ரூபாய் வீதம் 43 ஊராட்சி மன்ற பணிதளபொறுப்பாளர்களிடம் வாரம் ஒரு லட்ச வீதம் மாதம் சுமார் 5 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த பொறுப்பிற்கு வேறு நபரை நியமித்து விடுவேன் என்று மிரட்டி பணம் கேட்பதாக ஊராட்சி மன்ற பணித்தள பொறுப்பாளர்கள் ஒருசிலர் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் புலம்பி வந்துள்ளதாகவும் ஒரு சில ஊராட்சி மன்ற பணி தளபொறுப்பாளர்கள் மறைமுகமாக பேசி வந்துள்ளனர் இந்த தகவல் வந்த நிலையில் இதை பற்றி ABDO அருள்மொழியிடம் கேட்ட உராட்சி மன்ற தலைவர்களை ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசியதால் 13 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்களாம்.
அதன் பின்பு 13 ஊராட்சி மன்ற தலைவர்கள் ABDO அருள்மொழி மீது மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யூனியன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் .
அதன் பின்பு ஆர்ப்பாட்டம் செய்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒரு சிலரை அழைத்து தன் பணம் மற்றும் அதிகார பலத்தால் தனக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டு தன்பதவியைத் தக்கவைத்துக் கொண்டார் என்ற தகவலும் வந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி யூனியன் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது கொரோனா உச்சகட்டத்தில் இருந்த போது தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் உள்ள ஊராட்சி நகராட்சி மாநகராட்சிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் கிருமி நாசனி மற்றும் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்த முழு அதிகாரம் கொடுத்த நிலையில் சீர்காழி யூனியன் ஏ பி டி ஓ பூம்புகாரில் உள்ள ஒரு நிறுவனத்தில் 600 மூட்டைகள் பிளிச்சிங் பவுடர் வாங்கியதாக பில் போட்டு உள்ளதாகவும் ஆனால் 100 மூட்டைகள் மட்டுமே வாங்கிவிட்டு 500 மூட்டைகளுக்கான அரசு பணத்தை முறைகேடு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோல் சீர்காழியில் யூனியன் அலுவலகம் மூலம் நடந்து முடிந்த வேலைகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
ABDO அருள்மொழியின் கணவரின் அண்ணன் சீர்காழியின் முன்னாள் திமுக சேர்மேன் தற்போது திமுக மாவட்ட கவுன்சிலராக இருப்பதாகவும்
சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வமும் ABDO அருள்மொழியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் MLA பன்னீர் செல்வம் எனது உறவினர் என்று அருள்மொழி கூறி வருகிறார் என்றும் திமுக கட்சி தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தில் மிகவும் நெருக்கமாக உள்ளதாகவும் கூறிக்கொண்டு அலுவலகத்தில் அரசுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஏபிடிஒ அருள்மொழியை மீதுள்ள குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் அதற்கு சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அவர்கள் அதிகாரிகளை அழைத்து ஏ பி டி ஓ அருள்மொழி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதாகவும் ஒருசிலஊராட்சி மன்றத் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்ற தகவலும் வந்துள்ளது.
இதுபோன்று அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் வரும்போது அந்த மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரை பயன்படுத்தாமல் பார்த்துக் கொண்டால் தான் கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம் ஏற்படாமல் இருக்கும் ஆகவே சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பெயரை பயன்படுத்தி ABDO அருள்மொழி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு வராமல் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்சி உடன்பிறப்புகள்.
எது எப்படியோ தமிழ்நாட்டின் முதல்வராக திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து தமிழகம் இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டு உள்ள நிலையில் இதுபோன்ற ஒரு சில அதிகாரிகள் தங்களுடைய சுயலாபத்துக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்து வருவதால் பொதுமக்களிடம் கட்சிக்கும் ஆட்சிக்கும் முதல்வர் குடும்பத்தினருக்கும் உள்ள நற்பெயர் இதனால் நீர்த்துப்போகச் செய்ய வாய்ப்பு உள்ளதாக. ஆகையால் இதுபோல் அரசு அதிகாரத்தை சட்டத்திற்கு எதிராக துஷ்பிரயோகம் செய்பவர்களை உடனே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை செய்து இது போன்று குற்றச் சாட்டுகள் உள்ள அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் கனவு நிஜமாகும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.