மாத மாமூல் பணம் மற்றும் ஓசி இடியாப்பம் தர மறுத்த நபரை சிட்லப்பாக்கம் S12 காவல்துறையினர் அடித்து இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ!!”

விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தினால் நீதிமன்றம் கண் மூடிக்கொண்டு இருக்காது நீதிபதி எச்சரிக்கை!
மாத மாமூல் மற்றும் ஓசி இடியாப்பம் தராததால் இரண்டு பட்டதாரி இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த சிட்லபாக்கம
S12 காவல் ஆய்வாளர் !
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வசித்து வரும் பட்டாதாரி இளைஞரான மனோ மற்றும் அவரது நண்பர் சிலம்பரசன் என்பவர் குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலையில் காவல் சோதனை சாவடி (போலீஸ் பூத்)அருகில் கடந்த ஒருவருட காலமாக இடியாப்பம் புட்டு கடை நடத்தி வருகிறார். சிட்லபாக்கம் S12 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு இருப்பதால். அடிக்கடி இக்கடைக்கு சிட்லபாக்கம் S 12 காவல்நிலைய காவலர் சுரேஷ் குமார் என்பவர் வந்து ஓசியில் இடியாப்பம் மற்றும் பணம் கேட்பார் கடையில் பணி புரிகின்றவர் பயந்து இடியாப்பம் கொடுத்து அனுப்பிவிடுவார். இப்படி ஒரு வருடமாக தொடர்து மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு காவலர் சுரேஷ்குமார் வந்து இடியாப்பம் கேட்டுள்ளார் கடையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்ததால் இடியாப்பம் கொடுப்பதற்கு தாமதமாகிவிட்டது .
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் சிறிது நேரம் கழித்து வந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சிலம்பரனையும் அவரது தம்பி விக்னேஷையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி இனிமேல் எனக்கு மாத மாதம் மாமூல் பணம் கொடுக்க வேண்டும் என்று அவர்களை மிரட்டி உள்ளார் .
எதற்கு சார் நாங்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சிலம்பரசன் கேட்டதற்கு அவரை அசிங்க அசிங்கமாக திட்டியதுடன் கடுமையாக தாக்கியுள்ளார். பின்பு சிலம்பரசனையும் அவரது சகோதரர் விக்னேஷ்யையும் அடித்து காவல் நிலையத்திற்கு போலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர் .
பின்பு காவல்நிலையத்தில் வைத்து இருவரையும் தாக்கி ஆய்வாளர் மகுடீஸ்வரியிடம் ஒப்படைத்து பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்து உள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் S12 சிட்லபாக்கம் காவல்நிலைய காவலர் சுரேஷ் குமாரின் மீது மனித உரிமை ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
எது எப்படியோ இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் வந்தவர்களை சோதனையிட்டதில் கஞ்சா மற்றும் கத்தி வைத்திருந்ததாக விக்னேஷ் என்ற நபரை ஓட ஓட விரட்டி அடித்து துன்புறுத்தி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இரவு முழுவதும் விடிய விடிய விக்னேஷ் என்ற இளைஞரை அடித்து கொன்றதாக தற்போது மனித உரிமை ஆணையம் வரை விசாரணைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே காவல்துறையினர் யாராவது தவறு செய்திருந்தால் அவர்களை பொது இடங்களில் வைத்து அடித்து இழுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் . இல்லை என்றால் மூன்றாவது கண் என்று சொல்லப்படும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்துள்ளார் காட்சிகள் மற்றும் பொதுமக்கள் எடுக்கும் வீடியோக்களின் அடிப்படையில் காவலர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது தான் நிதர்சனம்.