மாநாடு திரைப்படம் வெளியானது எப்படி!காலை 5 மணிக்கு நடந்தது என்ன? அதிர்ச்சி ஆடியோ!
மிக மிக அவசரம் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி என்ற தயாரிப்பாளர் அந்தப் படத்தை இரண்டு மூன்று வருடங்கள் வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் முதலில் அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு பத்து லட்ச ரூபாய் சுரேஷ் காமாட்சியிடம் வட்டி இல்லாமல் வழங்கியுள்ளார்.அதன்பின் அந்தப் பணத்தை வைத்து ஆடியோவை வெளியிட்ட பின் அந்தப் படத்தின் மீது ஒரு சில உரிமைகளை விற்று பணத்தை வைத்து சாலிகிராமத்தில் அலுவலகம் ஒன்றை போட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி .அதன்பின் ஒரு ரூபாய் கூட முதல் இல்லாமல் மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபுவை அழைத்துக்கொண்டு நடிகர் சிம்புவிடம் கதை சொல்லி உள்ளார்.ஆனால் டி ராஜேந்தர் பலமுறை யோசனை செய்து தான் இந்த படத்திற்கு சிம்புவை ஒத்துக் கொண்டுள்ளார் . சிம்பு நடிப்பதற்கு மாநாடு படத்திற்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார் சிம்பு.அதன்பின் சுரேஷ் காமாட்சி நடிகர் சிம்புவிற்கு ஒரு கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்க மறைந்த தயாரிப்பாளர் கே பி பிலிம்ஸ் பாலு அவர்களிடம் வாங்கி கொடுத்துள்ளார் .அதன்பின் கேபி பாலு அவர்களை இந்த திரைப்படத்திற்கு 50 சதவீத பார்ட்னர் ஆக சேர்த்துக் கொள்வதாக பேசி 5 கோடி ரூபாய் கடன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி .அதன்பின் மறைந்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் பைனான்சியர் உத்தம்சந்த் அவர்களிடம் 5 கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்துள்ளார் சுரேஷ் காமாட்சியிடம் . அந்தப் 5 கோடியை வைத்து வைத்து இயக்குனர் SJசூரியா ஹீரோயின் கேமராமேன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முன்பணமாக கொடுத்து படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. அதன்பின் படத்திற்கு பணம் தேவைப்படும்போது ஹிந்தி உரிமத்தின் மீது 5 கோடி ரூபாய் வாங்கியுள்ளார் . அதன்பின் FMS உரிமம் 8 கோடி விலைபேசி முன்பணமாக 5 கோடி பெற்றுள்ளார். இதுபோல 30 கோடிக்கு மேல் கடன் வாங்கி தான் மாநாடு திரைப்படத்தை எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதனால் இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் உள்ளது என்று இந்தப் படத்தை வாங்கி வெளியிட யாரும் முன்வரவில்லை .அந்த சமயத்தில்தான் கோயமுத்தூர் கங்கா தியேட்டர் சுப்பு அவர்கள் 12 .50 கோடிக்கு தமிழ்நாடு திரையரங்குகளுக்கு மட்டும் வெளியிட உரிமத்தை வாங்கி உள்ளார்.அதன்பின் தீபாவளிக்கு மாநாடு திரைப்படத்தை வெளியிட சுரேஷ் காமாட்சி முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது . அதன்பின் டி ராஜேந்தர் அவர்கள் கூட்டு முயற்சியில் தற்போதுமாநாடு திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் மாநாடு திரைப்படம் வெற்றியைப் பற்றி பல ஊடகங்கள் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் படம் வெளியான சில அதிர்ச்சிதகவல்கள் வந்துள்ளன.
நவம்பர் 25ஆம் தேதி காலை 5மணிக்கு என்ன நடந்தது என்ற தகவலை நடிகர் சிம்புவின் தந்தை மற்றும் தாயாருடன் இருந்த தயாரிப்பாளர் சவுந்தர் ஆடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
6 கோடி ரூபாய் இருந்தால் தான் படம் வெளியாகும் என்ற சூழ்நிலையில் திரைத்துறையில் உள்ள முக்கிய தயாரிப்பாளர்கள் முடிந்தளவுக்கு படத்தை வெளியிட அனைவரிடமும் உதவி கேட்டுள்ளனர். ஆனால் எதுவுமே கை கொடுக்கவில்லை என்ற நிலையில் மாநாடு திரைப்படம் வெளியீடு ஒருவாரம் தள்ளி வைக்கலாம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்த நிலையில் தான் சிம்புவின் தந்தை டி ஆர் தாயார் உஷா இரண்டு பேரும் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று நினைத்து மாநாடு திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு பைனான்ஸ் கொடுத்த உத்தம்சந்த் அவரிடமே போய் முறையிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் நடிகர் சிம்புவின் பெற்றோர்கள். அதன்பின் டி நகர் வீட்டிலிருந்து 5:00 மணிக்கு உத்தம்சந்த் பைனான்சியர் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார் டி அவருடன் தயாரிப்பாளர் கவுன்சிலர் சௌந்தர் மட்டும் சென்றுள்ளார். பைனான்சியர் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி உள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை . 6மனிக்கு கதவு திறக்கப்பட்டது .அப்போது வெளியில் நின்று இருந்த டி ராஜேந்தர் உஷா அவர்களை அழைத்து பேச ஆரம்பித்துள்ளார் பைனான்சியர் உத்தம் சந்த். அப்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியையும் வரவைத்துள்ளனர் பைனான்சியர் வீட்டிற்கு. அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையில் 6 கோடி ரூபாய்க்கு ஏதாவது இடத்தின் சொத்து பத்திரத்தை பைனான்சியர் கேட்டதாகவும் தகவல்.நடிகர் சிம்புவின் தாயார் உஷா பெயரில் உள்ள சொத்து பத்திரத்தை கொடுத்து பொறுப்பேற்றுக் கொண்ட பின் தயாரிப்பாளரும் அதற்கு கையெழுத்துப் போட்டுள்ளார் அதன்பின் பைனான்சியர் உத்தம் சந்த் மாநாடு திரைப்படம் படம் வெளியிட தடையில்லை என்று Qube டிஜிட்டல் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார் . அதன் பின்னர் காலை7.50க்கு தான் மாநாடு திரைப்படம் முதல் காட்சி வெளியிட ஆரம்பித்தது. அதன்பின் சிம்பு உதயநிதியிடம் தொடர்பு கொண்டு கலைஞர் தொலைக்காட்சிக்கு உரிமத்தை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுள்ளார் அதன்பின் பேச்சுவார்த்தையில் தயாரிப்பு நிர்வாகம் 8 கோடி சொன்னதில் நான்கு கோடிக்கு கேட்டுள்ளார் உதயநிதி .அதன் பின் சிம்பு 6 கோடி கடன் வாங்கியுள்ளோம் ஆகையால் 6 கோடி கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டு உள்ளார் உடனே உதயநிதி ஆறுகோடி ரூபாய்க்கு கலைஞர் தொலைக்காட்சி உரிமம் வாங்கியுள்ளார். இதுதான் நடந்த உண்மை என்று வேதனையுடன் தன் ஆதங்கத்தை சக தயாரிப்பாளர்களுக்கு பேசி அனுப்பி உள்ளார்.
தயாரிப்பாளர் கவுன்சிலர் சௌந்தர்.
ஒரு திரைப்படம் எடுத்து வெளியாவதில் எவ்வளவு சிக்கல் உள்ளது என்பதை ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த டி ராஜேந்திரன் அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரணமாக ஒரு திரைப்படம் எடுக்க வரும் தயாரிப்பாளருக்கு என்ன நிலை என்று யோசித்துப் பாருங்கள்! சினிமா உலகம் ஒரு மாயை! அதில் வென்றவரும் உண்டு! மாண்ட வரும் உண்டு!