மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு (assembled) எலக்ட்ரிக் ஆட்டோ விற்பனை செய்து ஒரு கோடி மோசடி! திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார்களா!?

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.
இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் அழகர் கோவில் ரோடு மதுரை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடனுதவி பெறும் மாற்றுத்திறனாளிகள் பெறும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.25,000 முதல் ரூ.25,000 இலட்சம் வரை தேசிய மயமாககப் பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது . மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக கிராமப் புற மாற்றுத் திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியமும், நகர்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு லட்ச ரூபாய் வங்கி கடன் தொகையில் 35 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறார்கள். இந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற தினசரி

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வருகைதரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டு அவர்களது குறைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் மிகப்பெரிய கடமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உள்ளது.மாற்றுத் திறனாளிகளை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மாற்றுத்திறனாளிகள் சுய தொழில்களில் ஈடுபடவும், சிறு, குறு தொழில்களில் அடியெடுத்து வைக்கவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மானியமோ, கடனோபெற உதவுவது குறித்தும் தொடர்ந்து திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு
வங்கி கடன் மற்றும் மானியத்துடன் ஆட்டோ வழங்கப்படுவதாக திண்டுக்கல் பழைய கரூர் ரோடு பெஸ்கி கல்லூரி அருகில் அப்காட் அசோசியேட் நிறுவன உரிமையாளர் அப்துல் மாலிக் மற்றும் மேலாளர் சந்தோஷ் குமார் ஆகிய இருவரும் கூறி அதற்கு தேவையான ஆவணங்களை 36 மாற்றுத்திறனாளிகளிடம் பெற்றுக் கொண்டு 36 மாற்றுத் திறனாளிகளுக்கு (சாரதி எலக்ட்ரிக் ஆட்டோ) திண்டுக்கல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மூலம் வழங்கியுள்ளனர். 36 ஆட்டோ வழங்கியதில் 10 ஆட்டோக்கள் முடியாத அளவிற்கு அதில் உள்ள பாகங்கள் பழுதடைந்து இருப்பதாகவும் எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கிய மாற்றுத்திறனாளிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
அப்துல் மாலிக், முகமது ஜூபைர்,சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேர் மாற்றுத்திறனாளிகள் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெற்று அப்காட் அசோசியேட் நிறுவனத்தில் வாங்கியுள்ள எலக்ட்ரிக் ஆட்டோ அந்த நிறுவனம் சொந்தமாக தயாரித்த ( assembled )எலக்ட்ரிக் ஆட்டோ என்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சாரதி எலக்ட்ரிக் ஆட்டோ நிறுவனத்திடம் நேரடியாக வாங்காமல் சாரதி என்ற பெயரில் உதிரி பாகங்களை வைத்து (assembled)எலக்ட்ரிக் ஆட்டோவை உருவாக்கி மாற்றுத்திறனாளிகளுக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளதாகவும் இது சம்பந்தமாக ஆப்காட் அசோசியேட் நிறுவனத்தின் மீது சாரதி எலக்ட்ரிக் ஆட்டோ நிறுவனம் புகார் கொடுத்துள்ளதாகவும் திண்டுக்கல்லில் உள்ள அப்காட் அசோசியேட் நிறுவன உரிமையாளர் மோசடி செய்வதற்கு உடனடியாக திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளி நல வாரிய அலுவலர்களும் உடந்தையாக இருந்ததாகவும் அது மட்டுமில்லாமல் எலக்ட்ரிக் ஆட்டோவை மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமலே திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் எலக்ட்ரிக் ஆட்டோக்களை பதிவு செய்து கொடுத்தது எப்படி என்றும் இந்த மோசடியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்றும் மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கிய மானியத் தொகை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகவும்

சிறு தொழில் மதுரை மாவட்ட தொழில் மையம் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் மாற்றுத்திறனாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்படி அரசு வழங்கிய மானியத் தொகை ரத்து செய்யப்பட்டால் மாற்றுத்திறனாளிகள் எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு பேட் பாய் ஆஃப் இந்தியா வங்கியில் வாங்கிய முழு தொகை சுமார் (3,72,750 )மூன்று லட்சத்து 72 ஆயிரம் வட்டி தொகை இரண்டும் சேர்த்து 6 லட்சம் ரூபாய் வரை கட்ட வேண்டிய அபாய சூழ்நிலை ஏற்படும் என்றும்
அதுமட்டுமில்லாமல் தற்போது வாங்கி பயன்படுத்தி வரும் எலக்ட்ரிக் ஆட்டோவில் உள்ள பேட்டரி 7 மணி நேரம் சார்ஜ் செய்வதற்கு 7 யூனிட் வரை மின்சாரம் தேவைப்படுவதாகவும் அது மட்டும் இல்லாமல் ஏழு மணி நேரம் சார்ஜ் வெறும் 50 கிலோ மீட்டர் தான் அந்த ஆட்டோவை இயக்க முடிகிறது என்றும் அதற்குப் பின்பு மறுபடியும் ஏழு மணி நேரம் சார்ஜ் போட்டு ஓட்டினால் அதில் வரும் வருமானத்தில் குடும்பச் செலவுகளை கவனிப்பதா!? வங்கியில் வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணை கட்டுவதா !? மின் கட்டணம் கட்டுவதா!? என தெரியாமல் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் . இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வங்கியில் 60 மாதம் கட்ட வேண்டிய தவணையை கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மானியத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கியுள்ள 20 க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
புகாரி மீது விசாரணை மேற்கொள்ள தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகளை விசாரணைக்கு அழைத்ததாகவும் ஆனால்
திக்குக்கு ஒன்று திசைக்கு ஒன்றுமாக உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் புகார் கொடுத்துள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றாக விசாரணைக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் அது மட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு எலக்ட்ரிக் ஆட்டோ விற்பனை செய்த நிறுவனம் நூதன முறையில் மாற்றுத்திறனாளிகளிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதால் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை செய்தால் நேர்மையான முறையில் விசாரணை நடக்கும் என்றும் தாடிக்கொம்பு காவல் நிலையத்திலிருந்து விசாரணைக்கு ஆஜராக தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சம்மன் அனுப்பி வருவதாகவும் ஆகவே மாற்றுத்திறனாளிகளின் புகாரின் மீது துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை செய்தால் மட்டுமே நூதன முறையில் மோசடியாக விற்பனை செய்த அப்காட் அசோசியேட் நிறுவனத்திடம் எலக்ட்ரிக் ஆட்டோவை வாங்கியுள்ள 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் . அதுமட்டுமில்லாமல் மோசடி கும்பலிடம் சிக்கித் தவிக்கும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மறுவாழ்வு நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
எது எப்படியோ குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அரசு யாருக்கு சலுகைகள் வழங்குகிறதோ அவர்களை குறிவைத்து அதுவும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் என்று கூட பார்க்காமல் அவர்களுக்கு வழங்கும் பல லட்சம் ரூபாய் அரசு மானிய தொகையை நூதன முறையில் எலக்ட்ரிக் ஆட்டோக்களை விற்று பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோ திண்டுக்கல் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே மோசடி கும்பல்களை கண்டுபிடிக்க முடியும். அப்படி மோசடி நடந்தது உண்மை என்றால் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சாரதி எலக்ட்ரிக் ஆட்டோ விற்பனை செய்த அப் காட் அசோசியேட் நிறுவனத்தின் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

Related Articles

Back to top button