மாற்றுத்திறனாளி மீது பொய் வழக்கு போட பல லட்சம் லஞ்சம்! கருணை இல்லாத காவல் நிலையம்! டிஜிபி உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
மாற்றுத்திறனாளியான ஆசிரியர் மீது பொய் வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம் ஆய்வாளர்!
நடந்தது என்ன!?
மாற்றுத்திறனாளிஆசிரியரை பழிவாங்க துடிக்கும் உறவினர்களுக்கு உடந்தையாக செயல்படுகிறத காவல்துறை ? டிஜிபி வரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்!?
லஞ்சம் பணம்
கரன்சி கண்ணை மறைத்த உடன் மனிதாபிமானம் என்பதை அடகு வைத்து விட்டு பொய் வழக்கு போட்ட கேகே நல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர். துணை போன தென்காசி மாவட்ட கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும்!
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூர் ஆபிஸ் நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் என்பவரின் மகன் மாற்றுத் திறனாளியான முத்துக்குமார் .இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.60% மாற்றுத்திறனாளியாவார்.
ஊனமுற்றோருக்கான சான்றிதழை அரசே வழங்கி உள்ளது . முத்துகுமார் தந்தை சுந்தராஜ் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர் ஆவார்கள்.
1.செல்லயா தேவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் (.சித்ரவேல்,மாரியப்பன்)
2.வீரபத்திர தேவர்க்கு மூன்று மகன்கள் உள்ளனர். (நாராயணசாமி,பரமகுரு,சுந்தர மகாலிங்கம்.)
இவர்களுக்கு சொந்தமாக தலா ஒன்றரை ஏக்கர் என மூன்று ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது, இதில் முத்துகுமாருக்கு சொந்தமான நிலத்தில் பாதை வேண்டுமென சித்திர வேல் மற்றும் பங்காளிகள் பிரச்சனையில் ஈடுபட்டு வந்தனர்,
முத்துக்குமாரின் விவசாய நிலத்தில் பங்காளிகள் செல்வதற்கு பாதை இருக்கிறாதா என்று பொதுத் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டதில் எந்த ஒரு நடைபாதை இல்லை என தகவல் உரிமை சட்டத்தில் பதில் அளித்துள்ளனர்.
அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதில் பங்காளிகளுக்குள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.பாசன கிணறு மோட்டர் அறையின் சாவியை முத்துக்குமாரின் சித்தப்பாவான செல்லையா தேவரிடம் கேட்டால் கொடுக்க முடியாது என்று வாக்குவாதம் செய்வதும் அவரை தாக்கும் முயற்சியில் பங்காளியில் ஈடுபட்டு வந்துள்ளதுள்ளனர்.
அதையும் மீறி விவசாயம் செய்ய வேண்டும் எனக்கு தேவையான தண்ணீரை வழங்க பாசன கிணற்றின் மோட்டார் சாவியை கொடுங்கள் என்று முத்துகுமார் கேட்டால் நாங்கள் பணம் தருகிறோம் அந்த நிலத்தை எங்களுக்கு கொடுத்துவிடு என்று மிரட்டியுள்ளனர்.
இது குறித்து ஊனமுற்ற முத்துக்குமார் அரசு பள்ளியில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது கரிவலந்தநல்லூர் (கே வி நல்லூர்) காவல் நிலையத்தில் அப்போதைய ஆய்வாளராக இருந்த காளிராஜின் உத்தரவின் பெயரில் சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் முத்துக்குமாரை தொலைபேசி மூலம் அழைத்து உங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது .
நீங்கள் உங்க சித்தப்பா சித்திரவேலை தாக்கியதாக புகார் வந்துள்ளது நீங்கள் காவல் நிலையம் வரவேண்டும் என மிரட்டல் தோணியில் கூறியுள்ளார் .
அதற்கு பதில் அளித்த முத்துக்குமார் தற்போது அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன் .மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் இந்த சமயத்தில் நான் எப்படி அவர்களை எப்படி தாக்கி இருக்க முடியும் என்று பதில் கூறியதை அடுத்து அவர்கள் அந்த தொலைபேசியை துண்டித்தனர்.
10.03.2022 ம் தேதி மாலை 6 மணிக்கு முத்துக்குமார்
கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
என் மீது பொய் புகார் அளித்துள்ளனர் நான் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்போது நான் எப்படி அவர்களை அடிக்க முடியும் நீங்கள் மாணவர்களிடம் விசாரணை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார் , தாக்கப்பட்டதாக கூறும் சித்திரவேல் கடந்த இரண்டு மாதங்கள் முன்பு விவசாய நிலத்தில் விவசாயம் செய்த பொழுது மரத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டு ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலையும் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் முத்துகுமார் காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.,
அதைத் தொடர்ந்து மாணவர்களிடமும் காவல்துறை விசாரனை செய்ததில் அவர் பள்ளியில் இருந்தது உறுதி செய்தனர்.
இருந்த போதும் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினை வருவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நினைத்து முத்துக்குமார் 14.03.2022 சங்கரன்கோவில் சேர்ந்தமரம் வழியாக தென்காசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார் .இதற்கான சிசிடிவி காட்சிகளும் அவரிடம் ஆதாரமாக உள்ளது.
இந்த நிலையில் காலையில் புகார் அளிக்க சென்ற பொழுது மாவட்ட ஆட்சியர் வருவதற்கு காலதாமதம் ஆகும் என்ற நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க சென்றுள்ளார் அங்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சங்கரன்கோவிலில் ஒரு பிரச்சனைக்காக விசாரணைக்கு சென்றுள்ளதாக அங்கு இருந்த ஆய்வாளர் அழகு என்பவர் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து அழகு என்ற காவல் ஆய்வாளரிடம் புகார் மனுவை அளித்துவிட்டு கீழே இறங்கி வரும் பொழுது முத்துக்குமாரின் தகப்பனார் சுந்தரராஜ் மற்றும் தம்பி சித்திரவேல் மற்றும் அவருடைய மகன்கள் தாக்கியதாக தகவல் வந்துள்ளது . அடிபட்ட இடத்திலிருந்து தகப்பனார் சுந்தர்ராஜன் தம்பி சக்திவேல் இருவரையும் தாக்கியதை வீடியோ எடுத்து அந்தக் காட்சியியை முத்துக்குமார் செல் போனுக்கு அவர் தம்பி அனுப்பி உள்ளார் .
அதையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த ஆய்வாளர் அவர்களிடம் காண்பித்துள்ளார் .
உடனடியாக அங்கு இருந்த காவலர்கள் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது நீங்கள் செல்லுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்,
இதை தொடர்ந்து அவர் அங்கிருந்து கிளம்பி சொந்த ஊர் வந்து அடைந்த நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் ‘
மீண்டும் 14ஆம் தேதி 15 ஆம் தேதி இரண்டு தினங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்ததில் எந்த ஒரு விசாரணையும் செய்யவில்லை எனக் கூறி நேரில் சென்று மீண்டும் புகார் அளித்துள்ளார் .
இது சம்பந்தமாக மாற்றுத்திறனாளி ஆசிரியர் முத்துக்குமார் அவர்களிடம் விசாரித்த போது நான் 15ஆம்தேதி பள்ளிக்கு சென்று விட்டு மாவட்ட கல்வி அலுவலத்தில் மாணவ மாணவிகளுக்கு செருப்பு நோட்டு எடுப்பதற்காக தலைமை ஆசிரியர் உத்தரவு பெற்று கடிதத்துடன் சென்றுள்ளார்.அங்கு சென்றுவிட்டு மதியம் ஒரு மணி அளவில் பள்ளிக்கு வந்துள்ளார் முத்துக்குமார்.
இந்த நிலையில் சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் உங்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் முத்துக்குமாரை ஆய்வாளரை சென்று பார்க்கச் சொன்னதாகவும் அப்படி இல்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க இருக்கும் என விரட்டியுள்ளார். முத்துக்குமார் காவல் நிலையம் செல்ல விருப்பம் இல்லாமல் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தற்காலிக விடுப்பு எடுத்து மதியம் ஒன்றை மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று தென்காசி மாவட்ட காவல் பார்க்க காத்திருந்திருக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாப்பிட சென்றுள்ளதால் காத்திருக்குமாறு அலுவலகத்தில் கூறியுள்ளனர். அதை தொடர்ந்து மாலை வரை காத்திருந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை முத்துக்குமார் நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் என்னிடம் போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு உரிய சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.
உடனே ADSP அழைத்து முத்துக்குமார் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுமாறும் அதே போல் அவருடைய தம்பி மற்றும் தகப்பனார் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு வீடியோ காட்சிகள் இருந்தால் அவர்களையும் விடுவிக்க வேண்டுமென உத்தரவு அளித்து . என்னை அனுப்பி வைத்தார். ஆனால் அது வெறும்
ஆனால் இதுவரை என் மீது போடப்பட்ட பொய் வழக்கிலிருந்து விடுவிக்கவில்லை . இது ஒரு கண்துடைப்பு நாடகம் தான் என்று முத்துக்குமாருக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.
அரசு பணியில் இருப்பதால் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முத்துக்குமார் மீது பொய் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்து பழிவாங்க துடிக்கின்றனர்.
காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் வாங்கிய லஞ்சம் பணத்திற்காக முத்துக்குமார் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
இதை நிரூபிக்கும் விதமாக காவல்துறை ஆய்வாளர் பொய் வழக்கு போட்டதற்கு காரணமாக குறிப்பிடும் நேரங்களில் முத்துக்குமார் எங்கே இருந்தார் என்பதற்கான சிசிடிவி காட்சிகள் மற்றும் பள்ளியிலிருந்த ஆதாரங்கள் உள்ளது . இராஜபாளையத்தில் திருமணத்தில் கலந்து கொண்ட வீடியோ காட்சி இது போன்ற பல ஆதாரங்கள் முத்துக்குமாரிடம் உள்ளது .
மேலும் இவர்கள் தொடர்ந்து முத்துக்குமாரை அச்சுறுத்தி வருவதால் மனித உரிமை ஆணையத்திடமும் புகாரை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொது தகவல் உரிமைச் சட்டத்தில் மனு போட்டு உரிய தகவல்களையும் எந்த அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டது ? எப்படி நடவடிக்கை எடுத்தார்கள் என்று முத்துக்குமார் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .அதோடு ஆதாரங்களும் முத்துக்குமாரிடம் உள்ளது .இதில் அனைத்திலும் காவல்துறை வாங்கிய லஞ்சம் தான் முத்துக்குமார் மீது போடப்பட்ட பொய் வழக்கு !
பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால் தற்போது வரை முத்துக்குமாரை அழைத்து மிரட்டி வருவதாகவும் வருத்தத்துடன் ஆசிரியர் முத்துக்குமார் தெரிவித்தார்.
அப்போது இருந்த காவல் ஆய்வாளர் காளிராஜன் சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் ஆகிய இருவரும் செல்லையாத்தேவர் அவரின் மகன் வீரபத்திரனின் மகன் பரமகுரு, சங்கையாவின் மகன் செல்லையா, செல்லையாவின் மகன் மாரியப்பன்.
வீரபத்திரனின் மகன் நாராயணசாமி ஆகிய ஐந்து பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளதாகவும் முத்துக்குமார் குற்றம் சாட்டுகின்றார். 60% ஊனமுற்றவர் எப்படி அவர்களை அடித்து இருக்க முடியும்? காவல்துறையில் பணி செய்ய கூடிய அதிகாரிகளுக்கு சிந்திக்கும் திறன் கூட இல்லாத அளவுக்கு இருக்கின்றார்களா .?
இது குறித்து முத்துக்குமார் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் 18/4/2022 அன்று நேரடியாக அவரது மனைவி சிவகாமி மற்றும் குழந்தைகளுடன் சென்று புகார் அளித்தும் எந்த ஒரு நியாயமும் கிடைக்கவில்லை, அதன் பின்பு01/11/2022 அன்று தலைமைச் செயளாலர் இறையன்பு மற்றும் மாற்றுத் திறனாளிக்காண தலைமைச் செயளாலர் அனந்த குமார் அவர்களிடம் முத்துகுமார் மற்றும் மணைவி குழந்தைகளுடன் சென்று புகார் கொடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் தனி
பிரிவுக்கும் புகார் அளித்துள்ளார் முத்துக்குமார்.
யாரும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் பதவி ஏற்கும் பொழுது பொதுமக்கள் புகாருக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என கூறினார் .
தமிழக முதல்வரிடமும் புகார் அளித்துள்ளார் முத்துக்குமார். காவல்துறை டிஜிபி அவர்களுக்கும் புகார் அளித்துள்ளார்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை . முத்துக்குமார் மீது புகார் அளித்தவர்கள் அரசியல் கட்சியில் இருப்பதால் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே காவல்துறையும் தமிழக அரசும் உறுதுணையாக செயல்படுகிறதா என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார் மாற்றுத்திறனாளி ஆசிரியர் முத்துக்குமார் .
தகுந்த ஆதாரத்துடன்
முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது எனக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நான் குடும்பத்துடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டேன் என்று முத்துக்குமார் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்
மேலும் என் மீதும் என் தந்தை மற்றும்
தம்பி மீதும் போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பது முத்துக்குமாரின் கோரிக்கை .
முத்துக்குமார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு பொய் தான்
என்பதற்கு உரிய ஆவணங்களும் சிசிடிவி காட்சிகளும் உள்ளது என்று
பாதிக்கப்பட்ட ஊனமுற்ற ஆசிரியர் முத்துக்குமார் ரிப்போர்ட்டர் விஷன் மாத இதழ் அலுவலகத்திற்கு தகுந்த ஆதாரங்களை அனுப்பி தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது அனைத்தும் உண்மை தானா என்று நாமும் களத்தில் சென்று விசாரணை மேற்கொண்டோம் அவரிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தும் உண்மையாகவும் அவர் வைத்திருக்கும் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் உண்மையாகவே இருக்கிறது .
காவல்துறை கையூட்டு வாங்கிக் கொண்டு பொய் வழக்கு போட்ட நிலையில் தற்போது காவல்துறை தப்பிப்பதற்காக காவல்துறை உயர் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு பொய் வழக்கு போட்ட காவல்துறைக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர்.
உயர் அதிகாரிகள் காவல்துறையில் கீழ் பணி புரிய கூடிய அதிகாரிகளை எச்சரித்து தங்கள் கட்டுப்பாட்டில் நியாயமாக பணியாற்ற உத்தரவிட வேண்டுமே தவிர கையூட்டு பெற்றுக் கொண்டு செயல்படும் காவல்துறையை காப்பாற்ற முன்வரக்கூடாது .லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்த ஒரு குற்றமும் செய்யாமல் எல்லா ஆவணங்களையும் காண்பித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறாத காவல்துறை கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் காவல்துறை மீது தமிழக மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக காவல்துறை நடவடிக்கை இருக்க வேண்டும் .
இவர் மீது போடப்பட்ட பொய் வழக்கு திரும்ப பெற வேண்டும் என்பதே அந்த பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாம் நம்புகிறோம் .இல்லையென்றால் அடுத்த இதழிலில் அதிகாரிகள் கையூட்டு வாங்கிய புகைப்படம் வீடியோக்கள் வெளியாக இருக்கிறது.