மும்பை தாராவி யாக மாறிவரும் திருப்பூர் டாலர் சிட்டி! அதிர்ச்சி தகவல்!

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு துப்புரவுத் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வைக்கின்றனர்
மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ளது.

60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் ஒரு பகுதியாக குப்பைகளை அகற்றவதற்கு தற்காலிக துப்புரவு பணியாளர்களும் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

மாநகராட்சிகளில் தெருக்கள் , பூங்காக்கள் , பொது இடங்கள் , சாக்கடைகள் , மழைநீர் வடிகால்கள் மற்றும் பொது கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தற்காலிக துப்புரவுத் தொழிலாளர்களை மாநகராட்சி நிர்வாகம் நியமித்து வருகின்றனர்.

தற்போது திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஒப்பந்ததாரர்களை நியமித்துள்ளது. தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தில் இருந்து குடும்பங்களாக அழைத்து வந்து அவர்களுக்கு தற்காலிக துப்புரவு பணியாளர்களாக வேலை கொடுத்து அவர்கள் தங்குவதற்கு அரசு புறம்போக்கு நிலங்களில் தற்காலிக சிறு சிறு டெண்டுகள் போட்டு மிக நெருக்கமாக மும்பை தாராவியில் வசித்து வருவது போல திருப்பூரில் வசித்து வருகின்றனர்.

தற்போது அந்தப் பகுதி மும்பை தராவியாகவே காட்சியளிக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கழிவுகள் தொடர்பான வரையறுக்கப்பட்ட இடங்களில் பணிபுரிவதால் ஏற்படும் ஆபத்துகள் , முக்கிய பிரச்சினைகளில் ஒன்று . துப்புரவுப் பணிகளில் தண்ணீரால் பரவும் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே இவர்கள் அனைவருக்கும் கையுறை, காலணிகள், ரிப்ளக்டர் ஜாக்கெட், முகக்கவசம் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அவர்கள் வசிக்கும் இடத்தில் அடிப்படை வசதியான கழிப்பறை, குடிதண்ணீர் ,மருத்துவம் சாலை வசதி எதுவுமே இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தர துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தற்காலிக பணியாளர் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கப்படுவதில்லை.
அது மட்டும் இல்லாமல் அவர்கள் வசிக்கும் இடம் சுகாதாரமற்ற நிலையில் மிக மோசமாக இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் நியமனத்துக்கான ஒப்பந்த நடைமுறையை தமிழக அரசு ஒழிக்க வேண்டும் என்று தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.துப்புரவு தொழிலாளர்களை பாதுகாக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா!?