முறைகேடாகடெண்டர் விடப்பட்ட 5300 டாஸ்மாக் பார்களின் டெண்டர் ரத்து!
நீதிமன்றம் அதிரடி உத்தரவால் அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!?
காற்றில் பறக்கவிட்ட மதுவிலக்கு சட்டம் 4-ஏ பிரிவு!?
பார்களில் மது அருந்திய மதுப் பிரியர்கள் பொது இடங்களில் மது அருந்தும் அவலம்! கண்டுகொள்ளாத காவல்துறை!?
முறைகேடாக நடத்தப்பட்ட 5300 டாஸ்மாக் பார் டெண்டர் ரத்து!
நீதிமன்றம் உத்தரவால் அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!?
காற்றில் பறக்கவிட்ட மதுவிலக்கு சட்டம் 4-ஏ பிரிவு!?
பார்களில் மது அருந்திய மதுப் பிரியர்கள் பொது இடங்களில் மது அருந்தும் அவலம்! கண்டுகொள்ளாத காவல்துறை!?
2014 ஆண்டு கொண்டுவந்த டாஸ்மாக் பார் ஏலம் நடைமுறை ரத்து !டாஸ்மாக் பார் நடத்த கட்டிட உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் ! ஒப்பந்தம் படிவத்தில் இடம்பெற வேண்டும்! மூன்று மாதத்திற்குள் டாஸ்மாக் பார் ஒப்பந்தம் விட உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
2014 ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள 5300 டாஸ்மாக் அவர்கள் ஏலம் விடப்பட்டது.3,240 டாஸ்மாக் பார்கள் ஏலம் விட்டதில் விதி மீறல் நடப்பதாக பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!
டாஸ்மாக் பார் ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு ஒரு வருடம் மட்டுமே செல்லும் . ஆனால் கடந்த ஆறு வருடமாக டாஸ்மார்க் ஏலம் நடக்கவில்லை ! இந்நிலையில் திமுக ஆட்சி வந்தவுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 2022 தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மார்க் பார்கள் ஏலம் விட உத்தரவிட்டார் .(இதில் பார் இருக்கும் இடத்தில் உள்ள டாஸ்மார்க் கடையில் நாள் ஒன்றுக்கு நடக்கும் வியாபாரத்தில் இரண்டு சதவீதம் மற்றும் இரண்டு மாதம் முன் தொகையாவும் பார் உரிமையாளர்கள் மாதம் மாதம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கட்ட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.)
ஆனால் டாஸ்மாக் பார் ஏலத்தில் கலந்து கொள்ள சென்ற பார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஏலத்தில் பங்கேற்க 2-ந் தேதி முதல் 18-ந் தேதி (இன்று) வரை விண்ணப்பம் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் செந்தி்பாலாஜி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பார்களை ஒதுக்கீடு செய்வதற்காக மற்றவர்களுக்கு விண்ணப்பம் மறுக்கப்படுவதாகவும், இதன் பின்னணியில் ஆளும்கட்சியினர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுக்கப்பட்டது.
இது சமந்தமாக விசாரித்த போது ஏற்கனவே பார் நடத்தும் பார் உரிமையாளர்கள் பெயரை நீக்கி விட்டு அமைச்சர் செந்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பார்களை ஒதுக்கீடு செய்வதற்காக மற்றவர்களுக்கு விண்ணப்பம் மறுக்கப்படுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்கள் பெயரில் ஏலம் எடுத்தது போல் அதிகாரிகள் கூறியதைக் கேட்ட பார் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து டாஸ்மார்க் நிர்வாக மேலாளரிடம் விளக்கம் கேட்க எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் அமைச்சர் செந்தில் சொன்னதை நாங்கள் செய்தோம் என்று அமைச்சர்கள் கூறியதாக டாஸ்மாக் பார் சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.டாஸ்மாக் பார் டெண்டரில் விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக, தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் நடத்தினர்.
இந்த குற்றச்சாட்டிற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் அனைத்துமே வெளிப்படைத் தன்மையோடு தான் நடைபெற்றது’ என்று விளக்கம் அளித்திருந்தார். இருந்தபோதிலும், பார் உரிமையாளர்கள் சார்பில் டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கானது நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகியிருந்தார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ் ஆஜராகியிருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் நிர்வாகத்திடம் பல கிடுக்கு பிடி கேள்விகளை நீதிபதி கேட்டுள்ளார். நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் டாஸ்மாக் நிர்வாகம் செய்வதறியாது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியானது.
அதன் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி
உடனே டாஸ்மாக் பார் சங்கத் தலைவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு வேண்டப்பட்ட நபர்கள் ஒரு சில இடங்களில் அனுமதியின்றி டாஸ்மார்க் பார்களை நடத்தி வந்துள்ளனர். இது சம்பந்தமாக டாஸ்மார்க் பார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அனுமதியின்றி நடக்கும் பாரை உடனடியாக மூடும்படி வலியுறுத்தி உள்ளனர். ஆனால் காவல்துறையினர் அனுமதியின்றி பார் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் டாஸ்மார்க் பார் சங்க தலைவர் அன்பரசு மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்திய போது கைது சம்பந்தமாக காவல்துறையினரிடம் நீதிபதி விளக்கம் கேட்டுள்ளார். காவல்துறையினர் கைது நடவடிக்கைக்கு உரிய ஆவணங்களை நீதிபதியிடம் சமர்ப்பிக்காததால் டாஸ்மார்க் பார் சங்க தலைவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அக்டோபர் 1ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள 5300 டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் முறைகேடாக நடத்தப்பட்ட டாஸ்மாக் பார் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றிருந்த நிலையில் உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர அவசரமாக டாஸ்மார்க் நிர்வாக நீதிமன்றத்தில் டென்டரை ரத்து செய்து மீண்டும் டெண்டர் விட அறிக்கை தாக்கல் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது
வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே2022 ஆகஸ்ட் மாதம் நடந்த டாஸ்மாக் பார் ஏலத்தை ரத்து செய்து அடுத்த ஏலம் விடும் படிவத்தில் டாஸ்மார்க் பார் நடக்கும் கட்டிடத்தின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று எச்சரித்து 2014 ஆம் ஆண்டு டெண்டர் நடைமுறையை ரத்து செய்து மூன்று மாதத்தில் டாஸ்மாக் பார் ஏலம் விட டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் எல்.சுப்பிரமணியன் அவர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால் டாஸ்மாக் பார் நடத்தும் உரிமையாளர்களுக்கு வெற்றி என்றாலும் அடுத்த மூன்று மாதத்தில் நடக்க போகும் டாஸ்மார்க் பார் டெண்டர் எப்படி இருக்கப் போகிறது என்ற அச்சமும் இருப்பதாகவும் கட்டிட உரிமையாளர்களிடம் ஆட்சேபனையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) பெற்றால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். இந்த சான்றிதழை பெறுவதற்கு கட்டிட உரிமையாளர்களை ஆளும்கட்சியினர் மிரட்டுவதாகவும் தமிழ்நாடு பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.டாஸ்மார்க் பார் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மதுவிலக்கு சட்டம் 4-ஏ பிரிவின் படி, பொது இடங்களில் போதையில் இருக்கும் நபர்களுக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், பார்களில் மது அருந்திய நபர்களை பொது இடங்களில் நடமாட அனுமதிப்பது” குறித்தும் நீதி மன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது