லஞ்ச ஒழிப்புத் துறை

முறைகேடான பத்திரப் பதிவால் பல லட்சம் கல்லா கட்டி வரும் உடுமலை சார்பு பதிவாளர்!மௌனம் காக்கும் திருப்பூர் மாவட்ட பதிவாளர்! நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவு  ஐ ஜி!?


உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் சார்பதிவாளர்      எஸ் .கணேசன்

உடுமலை சார்பதிவாளர்                   எஸ். கணேசன்



திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.இந்த பத்திர பதிவு அலுவலகத்தில் இடைத் தரகர்கள் ஆதிக்கம் இல்லாமல் எந்த ஒரு பத்திரம் கூட பதிவு செய்ய முடியாது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஸ்டாம் விற்பனை மற்றும் ஆவண எழுத்தாளர் (document writer) கார்த்திகேயணி என்ற பெண்மணியின்  முழு கட்டுப்பாட்டில் சார் பதிவாளர் கணேசன்

உடுமலை சார் பதிவாளர் அலுவலகம்


தமிழ் நாட்டில் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும்   திருப்பூர்  மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்களை  தொழில் அதிபர்கள்   வாங்கி வருவதால்  நிலங்களின் மதிப்பு கோடி ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகிறது.

அதுவும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையை ஏழைகளின்  ஊட்டி’னு சொல்லுவாங்க.

ஏழைகளின்  ஊட்டி

உடுமலையைச் சுத்தியிருக்கற 64 கிராம மக்களை நம்பித்தான் தொழில்கள் இருக்கு. அந்த 64 கிராம மக்களுக்கும் முக்கிய வருமானம் விவசாயம்தான்! குறிப்பாக உடுமலை பகுதியில் தென்னையும், வாழையும் அதிகம். பிராய்லர் கோழி வளர்ப்பு, நூல் மில், கொப்பரை முக்கியமான தொழில் . அது மட்டும் இல்லாமல்
ஒரு நாளைக்கு  குறைந்தது 10 கோடி ரூபாய்க்கு மேல்  ரியல் எஸ்டேட் பிஸினஸ் நடக்குது” .
ரியல் எஸ்டேட் தொழில்  சக்கை போடு போட்டுக்கிட்டிருக்கு. இந்தப் பகுதியில  காற்றில் மின்சாரம் தயாரிக்குறதுக்காக ஏகப்பட்ட விண்ட் மில்கள் வந்துக்கிட்டிருக்கு. நிலங்களோட விலையின் மதிப்பு  கூடுறதுக்கு அதுவும் ஒரு காரணம். ஊருக்கு தெற்கே  திருமூர்த்தி மலைக்குப் போற சாலையும், கிழக்கே பழநி ரோடும் நல்லா டெவலப் ஆகிட்டு இருக்கு.

‘பைபாஸ் ரோடு வந்ததால் விலை நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாம் இந்த ஊரைச் சுத்தியும் சுற்றுலாதலங்கள் இருக்கு. திருமூர்த்தி அணை, அமராவதி அணை, ஆழியாறு, பழநினு எல்லாமே முப்பது கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளயே இருக்கு. அதைவிட இந்த ஊர்ல கல்வி ஸ்தாபனங்கள் தரமா இருக்கு. பல ஊர்களிலிருந்தும் தங்களோட பிள்ளைகளை இந்த ஊருலயிருக்கற பள்ளியில சேத்துப் படிக்க வைக்குறாங்க. புகழ் பெற்ற சைனிக் ஸ்கூலும் இங்கே தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


லஞ்சம் கொழிக்கும் துறை!
உடுமலைப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில்  நிலம், சொத்துக்கள் தொடர்பான பத்திரப்பதிவு, நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், திருமண பதிவு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
தினந்தோறும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் பத்திரப் பதிவு செய்து வருகின்றனர்.

தொழில் அதிபர்களுக்கு வங்கிக் கொடுக்கும் நிலத்தரகர்கள் அந்த நிலங்களை பத்திரப் பதிவு செய்து கொடுக்க  பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள இடைத் தரகர்கள் மூலம் சார்பதிவாளர் கணேசன்  அவர்களுக்கு    பல லட்சம் ரூபாய் லஞ்சம்  கொடுத்து  பத்திரப் பதிவு செய்து கொடுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச் சாட்டை வைத்துள்ளனர். இந்தக் குற்றச் சாட்டு சம்மந்தமாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் பணபுரியும் ஒரு சிலரிடம் விசாரித்ததில் அதிர்ச்சி தரும் தகவல் தெரிவித்தனர். அது என்ன என்று விசாரித்தால் நிலம் வாங்க வரும் தொழிலதிபர்களிடம் பூர்வீக நிலங்கள்  என்று  கூறி பல கோடி ரூபாய்க்கு விலை பேசி பெரிய தொகையை முன் பணமாக  பெற்றுக் கொள்வார்கள் .ஆனால் அந்த நிலங்களுக்கு தாய் பத்திரம் என்றுக் கூறப்படும் அசல் மூலப் பத்திரங்கள்  (ஒரிஜினல் ) இருப்பதில்லை .
அப்படி அசல் தாய் பத்திரம் இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய, பதிவுத் துறை தடை விதித்துஉள்ளது!
சொத்து விற்பனையின் போது, பழைய அசல் மூலப் பத்திரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம்’ என, பதிவுத் துறை ஐ ஜி பிறப்பித்த உத்தரவை உடுமலைப்பேட்டை சார் பதிவாளர்  காற்றில் பறக்க விட்டு  அசல் மூலப் பத்திரம் இல்லாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களுக்கு  பல லட்சங்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளாமலே பத்திரப் பதிவு செய்து கொடுத்து  உல்லாசமாக ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என   கள ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் ஸ்டாம் விற்பனை செய்யும் (document writer)ஆவண எழுத்தாளர்
கார்த்திகேயணி என்ற பெண்மணியின்  முழு கட்டுப்பாட்டில் சார் பதிவாளர் கணேசன் இருப்பதாகவும் இந்தப் பெண்மணி நில ஆவணங்களை பதிவு செய்ய அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்றால் போதும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல் கள ஆய்வு செய்யாமல் உடனே சார்பதிவாளர் கணேசன் பத்திர பதிவு செய்து கொடுத்து வருவதாகவும் அதற்காக இந்த பெண்மணி மாதம் ஒரு பெரிய தொகையை சன்மானமாக கணேசன் அவர்களுக்கு வழங்கி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இப்படி இடைத்தளர்கள் மற்றும்

2023 கடந்த மார்ச் மாதம் திருப்பூர் , நெருப்பெரிச்சலில் உள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர் .


சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனையில் கணக்கில் வராதா பல லட்சம் பணம் பறிமுதல் செய்தது குறிப்பிடத் தக்கது.

உடுமலை அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இதே சார் பதிவாளர் கணேசன் பணியில் இருந்த போது  லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடித்ததாகவும் வந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் படங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது அது சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் பத்திர பதிவுக்கு பொதுமக்களிடம் பல இடங்களில் லஞ்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட பொதுமக்கள் இனி பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது வெறும் அறிவிப்பு மட்டுமாகவே இருக்கிறது எந்த பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் நேர்மையான முறைகளில் பத்திரப்பதிவு நடைபெறவில்லை என்பதுதான் நிதர்சனம்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை சோதனை செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும் அந்த நேரத்தில் சோதனை நடக்காத மற்ற அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் தங்களை காப்பாற்றிக் கொண்டு மீண்டும் தங்களது சித்து விளையாட்டை ஆரம்பித்து கல்லா கட்டி வருகிறார்கள். ஆகவே மாதம் ஒருமுறை லஞ்ச ஒழிப்புத்துறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சோதனையிட்டால் மட்டுமே ஊழல் முறைகேடு நடப்பதை தடுக்க முடியும் என்கின்றனர் அனைத்து சமூக ஆர்வலர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button