மத்திய அரசு

பல உயிர்களை காவு வாங்க கட்டப்படும் மதுரை வாடிப்பட்டி மேம்பாலம்!!?அதிர்ச்சியில் பொதுமக்கள்!

மெத்தன போக்குடன் சரியான திட்டமிடல் இல்லாமல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டும் பணி செயல் படுகிறதா !??

சாலை விபத்துகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் – மோசமான சாலைகளே முக்கிய காரணம்?!

11/2/21 ல் கோரிக்கை வைக்கபட்டது .13/2/21 ல் பார்வை செய்யப் பட்டது.

5/3 /21ல் நெடுச்சாலை துறை மத்திய இணை அமைச்சர் V.K.சிங் பார்வையிட்டார். 10/3/21 ல் கோரிக்கை நிறைவேற்றபடுவதாக NHAI யால் உறுதிமொழி வழங்கபட்டது.

வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி தொடர்ந்து நடக்கும் விபத்தினால் பல உயிர்கள் பலியாகி வருவதை தடுத்து நிறுத்த மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் பல முறை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை ஆய்வு செய்தபின் விபத்து நடக்கும் இடத்தில் மேம்பாலத்தை கட்ட முடிவு செய்தது.

தற்போது
வாடிபட்டி தேசியநெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் திண்டுக்கல்லில் இருந்து வரும் போது டெக்ஸ்டைல் பூங்காவை அடுத்து ஆரம்பித்து வாடிப்பட்டி நுழைவாயிலை தாண்டி ஆண்டிபட்டி பங்களா முல்லைப் பெரியார் கால்வாய் கச்சை கட்டிக் கிராமத்துக்கு செல்லும் சாலைக்கு முன்பு இறங்கி முடிகிறது.
ஆனால்
வாடிப்பட்டி முதல் மேலூர் புதுதாமரைப்பட்டி வரை புதியதாக சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதனால் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தின் பின்புறத்தில் ஆண்டிபட்டி பங்களா கச்சைகட்டி பிரிவு வரை தற்போது மேம்பாலம் கட்டுமானப்பணிக்காக கீழ்புறத்தில் அணுகுசாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இதில் தற்போது செல்லும் நான்குவழிச் சாலையில் பெரியாறு பாசனகால்வாயை கடந்து சோழவந்தான் பிரிவிற்கு வாகனங்கள் திரும்பி செல்கின்றன.
அதுபோல் சோழவந்தான் பிரிவிலிருந்து கச்சைகட்டி பிரிவிற்கு வரும் வாகனங்கள் மின்வாரியஅலுவலகம் முன்பு வந்து திரும்பி செல்வதற்குப் பதிலாகச்சாலை விதிமுறைகளை மீறி எதிர் புறமாகத் திண்டுக்கல் மதுரை சாலையில் செல்கின்றன.
போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்ற வாகனங்களால் கடந்த ஆறு மாதங்களுக்குள் 60 அறுபது வாகனங்கள் விபத்தில் சிக்கி உள்ளது.
இப்படி நடந்த விபத்தால் 25பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதும் வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருவதும் உயிர் பலியாகி வரும்அவல நிலையாக உள்ளது.
இந்தசூழ்நிலையில் புதியதாக கட்டப்படவுள்ள மேம்பாலம் கச்சைகட்டி பிரிவில் இணைப்பதால் இந்த விபத்துக்கள் மேலும் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே இந்தமேம்பாலப் பணியை விரிவுபடுத்தி பெரியாறு பாசனகால்வாய் தாண்டி சோழவந்தான் பிரிவினை கடந்து வனத்துறைஅலுவலகம் முன்பு மேம்பாலம் முடிந்தால் பாலத்தின் அடிப்பகுதியில் சோழவந்தான் பிரிவிலிருந்து வரும் வாகனங்கள் அதே திசையில் அணுகு சாலையில் வந்து கச்சைகட்டி பிரிவிற்கு நேராக பாலத்தின் அடியில் சென்றுவிடும் .அதேபோல் சோழவந்தான் பிரிவிலிருந்து மதுரைக்கு செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழ்புறம் அணுகு சாலையில் வந்து வனத்துறை அலுவலகம்முன்பு இணைக் கப்படும் பகுதியிலிருந்து மதுரைக்கு நேராக சென்றுவிடும்.
இதனால் முற்றிலும் விபத்துக்கள் தவிர்க் கப்படும்.

சாலைகள் விரிவுப்படுத்துவதும் பாலங்கள்க்கட்டுவதும் விபத்துக்கள் ஏற்படாமல் பொதுமக்களின் உயிரை பாதுகாக்கதான் .
எனவே மேற்படி பாலம் கட்டும் பணியில் தற்போது மேம்பாலம் அமைக்க கட்டுமானம் தொடங்கவுள்ள நிலையில் பணியினை மாற்றி அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும்.
எனவே பொதுமக்கள் கோரிக்கை யினை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காமல் பழைய வரைபடத்தின் அடிப்படையில் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்றால்
மேம்பாலம் அமைக்கும் அருகில் உள்ள கிராம பொதுமக்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் தர்ணா போரட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
ஆகையால் மனித உயிர்களை துச்சமாக நினைக்காமல் பொதுமக்களின் கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்று மேம்பால பணியை தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button