ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாளன் திரைப்படம் வெளியாவதில் சிக்கலா!? படுக்கை அறை காட்சியை நீக்காவிட்டால் ஜூலை 8ஆம் தேதி தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா, மூன்று மாநிலத்தில் வெளியாகும் திரையரங்குகள் முன்பு பிஜேபி கட்சி போராட்டம் நடத்த திட்டம்! !on YouTube
படைப்பாளன் தமிழ் திரைப்படம் வருகின்ற எட்டாம் தேதி தமிழகம் கேரளா கர்நாடகா மூன்று மாநிலங்களில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியான உடனே இந்து மக்கள் கட்சி மற்றும் பிஜேபி கட்சி ஆதரவாளர் படைப்பாளன் திரைப்படத்தில் முருகப்பெருமானை கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த காட்சிகளை நீக்காமல் திரையரங்கில் திரையிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வரும் எட்டாம் தேதி படைப்பாளன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தை வெளியிட விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். படத்தில் முருகப்பெருமான் காட்சி நீக்காவிட்டால் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் திட்டமிட்டபடி படைப்பாளன் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிஜேபி கட்சி ஆளும் கர்நாடகாவில் திரையரங்கில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.