ராஜினாமா செய்யப் போவதாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்!
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளராக முத்து சாமியும் வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம் உள்ளார்கள்.
வடக்கு மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் ஆறு ஒன்றியங்களில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 12 ஒன்றிய செயலாளர்களும் மீதமுள்ள மூன்று ஒன்றியத்தை சேர்த்து 15 திமுக ஒன்றிய செயலாளர்கள் உள்ளனர்.
1.பவானி வடக்கு -பவானி சேகர்,
2.தெற்கு -துரைராஜ், 3.அம்மாபேட்டை வடக்கு- சரவணன், 4.தெற்கு -ஈஸ்வரன், 5.அந்தியூர் -ஏ.ஜி.வெங்கடாசலம், 6.கோபி வடக்கு -ரவீந்திரன், 7.தெற்கு -முருகன். 8.டி.என்.பாளையம்- சிவபாலன், -9.நம்பியூர் செந்தில்குமார். 10.பவானிசாகர் வடக்கு- மகேந்திரன், 11.தெற்கு- காளியப்பன், 12சத்தியமங்கலம் வடக்கு- தேவராஜ், 13.தெற்கு -இளங்கோ, 14.தாளவாடி -மேற்கு சிவண்ணா, 15.கிழக்கு- நாகராஜ் ஆகியோரை திமுக தலைமை கழகம் அதிகாரிப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாகவே ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்ல சிவத்துடன் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி டி என் பாளையம் ஒன்றிய செயலாளர் சிவ பாலன் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கருதப்படுகிறது.
இதனால் டி என் பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் சிவ பாலான் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக பல முறை திமுக தலைமை கழகத்தில் முறையிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் ஆகவே திமுக கட்சி ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக திமுக தலைமை கழகத்திற்கு தெரிவித்ததாகவும் அது சம்பந்தமாக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் நல்லசிவத்தையும் சிவபாலனையும் திமுக தலைமைக் கழகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 2024 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கட்சியில் மாவட்ட செயலாளர்களுக்கு ஒன்றிய செயலாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் கட்சி வேலைகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி திமுக தொண்டர்களின் ஆதங்கமாக உள்ளது. ஆகவே திமுக தலைவர் உடனடியாக தலையிட்டு ஒன்றிய செயலாளர் சிவபாலன் வைக்கும் குற்றச்சாட்டின் மீது தொகுதியில் என்ன நடந்தது என்ற உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ள விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று அப்பகுதி திமுக அடிமட்ட தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது.