ராம்கோ நிறுவனம் சார்பில் 2 லட்சம் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி வட்டம், சின்னவாடி கிராமத்தை சேர்ந்த திரு.சேர்மராஜா என்பவருக்கு விபத்தில் கால் எலும்பு உடைந்துவிட்டதாகவும், இதற்காக மதுரையில் உள்ள பிரித்தி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் எனவும், அவருக்கு தந்தை இல்லை. தாய் கூலி வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார் எனவும், மேல் அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுவதாகவும் என மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் வரப்பெற்ற தகவலின் அடிப்படையில்,
சிவகாசி வட்டாட்சியர் மூலம் விசாரணை செய்து உண்மை தன்மையை ஆராய்ந்து, அந்த தகவல்களின் அடிப்படையில், மேல் சிகிச்சை பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரையின் பேரில் ரூ.2 இலட்சம் நிதியுதவியினை சார்பில், நிதியுதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, திரு.சேர்மராஜா என்பவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.2 இலட்சம் நிதியுதவியினை அவரது தாயாரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்;. மேலும், சிகிச்சை பெற்றுவருபவரின் தாயாருக்கு, விதவை உதவித்தொகை கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில், பொது மேலாளர் (கணக்கு மற்றும் நிர்வாகம்) திரு.மணிகண்டன், ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் திரு.முருகேசன், சிவகாசி வட்டாட்சியர் திரு.ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.