ரியல் எஸ்டேட் தொழிலில்
5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு கொலை மிரட்டல் விடும் அனுபவ் ஜிவல்லரி அதிமுக கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோவை மண்டல ஐஜி யிடம் புகார்!
ரியல் எஸ்டேட் தொழில்
5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு கொலை மிரட்டல் விடும் அனுபவ் ஜிவல்லரி அதிமுக கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோவை மண்டல ஐஜி யிடம் புகார்!
கோவையில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சுற்றி வந்தவர் பல நூறு கோடிகளுக்கு அதிபராக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சைக்கிளில் சுற்றி வந்தவர் தற்போது பல கோடி மதிப்புள்ள ஆடம்பர சொகுசு பங்களாவில் குடியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் சைகளில் சுற்றி வந்த அசால்ட் ரவி (எ)அனுபவ் ரவி பல லட்சம் மதிப்புள்ள உயர்தர சொகுசு காரில் கட்சி கொடியுடன் வலம் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது
அசால்ட் என்ற அனுபவ் ரவி மீது கோவை,போத்தனூர், சாய் நகரில் வசிக்கும்
சித்திக் மகன் அப்துல் ரகுமான் என்ற ராஜா (வ52)
காவல்துறை ஐஜி யிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில்
கடந்த 15 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் நண்பர்கள் மூலம் ,அசால்ட் ரவி என்ற அனுபவ் ரவி (வ53), அறிமுகம் ஆனார் .
அதன் பின்பு
தொழிலுக்கு உதவியாக இருந்து கொண்டு, வீட்டு மனை வாங்கும் நபர்களை அழைத்து வந்து, கவர்ச்சிகரமாக பேசி வீட்டு மனைகளை விற்று, அதில் கிடைக்கும் கமிஷன் தொகையை வாங்கி கொள்வார்.
இதனால் ரவியை
ராஜாவுக்கு மிகவும் பிடித்து விட தனது ரியல் எஸ்டேட் தொழிலில் பங்குதாரராக சேர்த்து வைத்துக் கொண்டதாகவும்
இதில் அசால்ட் ரவி என்ற அனு பவ் ரவி தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு முக்கிய அரசியல் பிரமுகர்கள் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதிமுக கட்சியில் சேர்ந்து இரண்டு முன்னாள் அமைச்சர்களிடம் அசால்ட் ரவி என்ற அனுபவ் ரவி தன்னை பெரிய ஆளாக காட்டிக் காட்டிக்கொண்டு வந்துள்ளார்.
இதற்கிடையில் ரியல் எஸ்டேட் ராஜாவுக்கு குடும்ப நண்பர் மூலம் ஒருவர் தன் இடத்தை விற்க முன் வந்துள்ளார், அதற்குரிய விலையை பேசி ஒப்பந்தம் போடும் போது அசால்ட் ரவி என்ற அனுபவ் ரவியும் தொழில் பங்கு தாராக தன்னை சேர்க்கும் படி கேட்க சரி என்று அவரையும் சேர்த்து அக்ரிமெண்ட் (ஒப்பந்தம்) போட்டதாகவும்
இந்த நிலையில் திடீரென அசால்ட் ரவி என்ற அனுபவ் ரவி, இடத்தை விற்க வந்த நபரிடம் போலியான தகவல்களை தெரிவித்து அந்த இடத்தை அபகரிக்க முயன்ற போது, நண்பர்களாக இருந்த அனுபவ் ரவிக்கும் ,ராஜா வுக்கும் இடையே உணடான
பிரச்சனையில் இருவரும் பிரிந்த நிலையில் ராஜா ரியல் எஸ்டேட் தொழிலுக்காக முதலீடு செய்து இருந்த இடத்தை ராஜாவுக்கு தெரியாமல் அசால்ட் ரவி என்ற அனுபவ் ரவி வீட்டு மனைகளாக பிரித்து பல கோடி ரூபாய்க்கு, விற்று உள்ளார்.
ராஜா தனக்கு சேர வேண்டிய பங்கு தொகையை கேட்டுள்ளார். அனுபவ் ரவி ராஜாவிற்கு பணத்தை தராமல் கட்டப்பஞ்சாயத்து செய்து ஆட்களை வைத்து மிரட்டி வந்ததாகவும் மன உளைச்சலில் இருந்த ராஜாவுக்கு பக்கவாதம் நோய் ஏற்பட்டு ஆறு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், மேலும் சிகிச்சை பெற பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் பக்கவாத நோய்க்கு மருந்து,மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருவதாகவும் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்,
இந்நிலையில் கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற மனைவியுடன் சென்ற நண்பர் ராஜா வை ,அனுபவ் ரவி காரில் வழிமறித்து தகராறு செய்து, என் கிட்ட பணமா கேட்குற, உன்னையும், உன் பொண்டாட்டி பிள்ளைகளையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதுடன், கோட நாடு கொலை போல உங்களை கொன்று விடுவேன் என மிரட்டி சென்றாக கூறப்பட்ட நிலையில் நண்பன் போல நடித்து என்னை ஏமாற்றி தனக்கு தர வேண்டிய ஐந்து கோடி ரூபாய் பணத்தை தராமல், கோடநாடு கொலை போல என்னை கொன்று விடுவதாக மிரட்டி வந்தார், இதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், அனுபவ் ரவியிடம் ஐந்து கோடி ரூபாய் பெற்று தரும்படியும்
தனது உயிரையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றும் படியும்
கோவை மேற்கு மண்டல காவல் துறை, ஐஜி பவானீஸ்வரியிடம் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் அப்துல் ரஹ்மான் என்ற ராஜா, மனைவி, தனது இரு மகள்களுடன் குடும்பத்துடன் வந்து கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்துள்ளார்.
கோவை மண்டல ஐஜி இடம் புகார் கொடுத்துள்ளது
சம்பந்தமாக அனுபவ் ரவி யிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு
ராஜாவுக்கு
கொடுக்க
வேண்டிய ஐந்து கோடி ரூபாய் பணத்தை கொடுக்காமல்
கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உங்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது என கேட்ட போது,
பணம் அனைத்தையும்
செட்டில் மெண்ட் செய்து விட்டேன், இனி நான் பார்த்து கொள்ளுகிறேன் என்று கூறியதற்கு பணம் கொடுத்ததற்கு ஆவணங்கள் இருந்தால் தர முடியுமா என்று கேட்டதற்கு பணம் கொடுத்ததற்கு ஆவணங்கள் இருப்பதாகவும் கூறினார் அப்படி ஆவணங்கள் தர முடியுமா என்று கேட்டதற்கு நேரில் வந்தால் தருவதாகவும் அனுபவ் ரவி கூறினார் ஆனால் அதன் பின்பு தொலைபேசி தொடர்பு எடுக்காமல் ஆவணங்களை இதுவரை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணமூர்த்தி என்பவருது முகநூலில் தொடர்ந்து ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார்.
அதில்
ஆயிரம் கோடி கடனாளிகள் என்றும்
கோவை
பாரதியார் ரோட்டில் உள்ள
சிகேகே ஜிவல்லரி உரிமையாளர் கே கிருஷ்ணமூர்த்தியின்
லலிதா காமாட்சி சுந்தரம் இல்லத்தை அபகரித்து மோசடி செய்ததில்
கட்டிங் ரியல் எஸ்டேட் அனுபவ் ஜிவல்லரி அதிமுக ரவி என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ. கோவை மண்டல ஐஜி இடம் கொடுத்துள்ள புகார் மீது தனிப்படை அமைத்து அதில் நேர்மையான காவலர்களை நியமித்து இந்த புகார் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டால் மட்டுமே பணம்
மோசடி, கொலை மிரட்டல் விட்டதாக கொடுத்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!
காவல்துறையில் நேர்மையான கோவை மண்டல ஐஜி யின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்!