லஞ்சம் தலைவிரித்தாடும் திண்டுக்கல் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகம்! சாட்டையை கையில் எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை !?

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்! சாட்டையை கையில் எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை !?

2018 ஆண்டில் தமிழகத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் ஸ்டார் 2.0 நிலைக்கு உயர்த்தப்பட்டது. இதையடுத்து இணையதளம் மூலம் மட்டுமே 100 சதவீதம் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இணையவழி பத்திரங்களை பதிவு செய்ய கைரேகை, புகைப்படம் என அனைத்து நடைமுறைகளையும் 10 நிமிடங்களில் முடித்து ஆவணத்தை பதிவு செய்த சார் பதிவாளர். அடுத்த 5 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் வழங்கப்பட முடியும் என்று பதிவுத்துறை துணைத் தலைவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னோட்டமாக 2018பிப்ரவரி மாதம் மதுரை மண்டலத்தில் உள்ள
ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகம், TNAU நகா், இராஜகம்பீரம், திருமோகூா் ரோடு,
ஒத்தக்கடை சார் பத்திர பதிவு அலுவலகத்தில் இணைய வழியில் பதிவான முதல் பத்திரத்தை 15 நிமிடங்களில் உரிமையாளரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் 102 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இருக்கின்றன.

திண்டுக்கல் தமிழ்நாட்டில் முதன்மை பதிவு ஆணையமாக உள்ளது மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பதிவேடுகள் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் செய்கிறது.அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு SRO (sab register office )அலுவலகங்கள், சந்தை மதிப்புடன் வழிகாட்டி மதிப்புகளின் சரிபார்ப்பு மற்றும் முத்திரைக் கட்டணம் சரிபார்ப்பு ஆகியவற்றை இது கண்காணிக்கிறது. மேலும் மாநில அரசின் அதிகாரப்பூர்வ பதிவுகளை முத்திரையிட்டு வெளியிடுவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்.திண்டுக்கல் அருகில் ஜவுளி நகரமாக வேடசந்தூரும் திகழ்வது திண்டுக்கல்லுக்கு சிறப்புச் சேர்த்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சார் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இதை சாதகமாக பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்தூர் ,குஜிலியம்பாறை ஆகிய பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய வரும் பொதுமக்களால் பதிவு அலுவலரை சந்திக்க விடுவதில்லையாம்.அதற்கு காரணம் இடைத் தலைவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருவதாகவும். இடைத்தரகர்கள் மூலம் சார் பதிவாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்து வருவதாகவும் இடைத்தரகர்களின் தொல்லை அதிகமாக உள்ளதாகவும் முக்கியமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த மூன்று சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடம் ஊழியர்கள் மற்றும் சார் பதிவாளர்கள் மிக மோசமாக நடந்து கொள்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .


சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடமதுரை சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தற்போது பொறுப்பு சார் பதிவாளராக இருக்கும் பிரபு அவர்கள் மாதம் குறைந்தது 5 லட்ச ரூபாய் வரை கல்லாக கட்டி வருவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
வடமதுரை பொறுப்பு சார் பதிவாளர் பிரபு பத்திரப்பதிவு செய்யும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கள ஆய்வு மேற்கொள்வதில்லை என்றும் அது மட்டுமில்லாமல் அப்படியே கள ஆய்வு செய்ய வேண்டும் என்றால் நிலத்தின் உரிமையாளர்கள் பெரிய தொகை லஞ்சமாக கொடுப்பது மட்டுமில்லாமல் சென்றுவர வாகனம் மற்றும் அனைத்து வசதிகளையும் இவருக்கு செய்து கொடுத்தால் மட்டுமே கள ஆய்வுக்கு வருவாராம் . அதுமட்டுமில்லாமல் வில்லங்கச் சான்றுகளை கொடுக்க மறுத்து வருவதாகவும் மற்றும் பத்திரப்பதிவு செய்த பின் அசல் ஆவணங்களை இரண்டு மாதங்களாகியும் கொடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்த அசல் ஆவணங்களை வழங்கி வருவதாகவும் அது மட்டுமில்லாமல் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் மற்றும் வயதான முதியவர்களை நீண்ட நேரம் காக்க வைப்பதும் அவர்களை தகாத வார்த்தைகளில் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் முக்கியமாக பத்திரப்பதிவு செய்ய கொடுக்கும் ஆவணங்களை சரி பார்க்க தெரியவில்லை என்றும் பொறுப்பு சார்பதிவாளர் பிரபு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனென்றால் தலைமை கணக்காளராக இருந்தவரை பதிவாளராக நியமித்தால் இப்படித்தான் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் சார் பதிவாளர் மீது வரும் குற்றச்சாட்டுகளை திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் ( DR ) கண்டுகொள்ளாமல் இருக்க மாதம் பெரும் தொகையை பிரபு கப்பம் கப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.ஆகவே வடமதுரை வேடசந்தூர் குஜிலியம்பாறை போன்ற சார் பதிவாளர் அலுவலகங்களில் நேர்மையான நிரந்தர சார் பதிவாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதியாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வர முடியும் என்பது தான் நிதர்சனமாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் பத்திரப்பதிவு உயரதிகாரிகள் மற்றும் பத்திரப்பதிவு ஐ ஜி நடவடிக்கை எடுப்பார்களா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.


மாநில சொந்த வரி வருவாயில் பெரும்பங்கை வகிப்பது பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறைகளாகும். இதில் பதிவுத் துறையில், கணினிமயமாக்கம் அதிகரித்ததன் காரணமாக, பதிவு எண்ணிக் கையும் உயர்ந்துள்ளது. அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்கள் பத்திரப்பதிவுத் துறையில் அமல்படுத்தப்படுவதாலும், பழைய ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாலும், வில்லங்கச் சான்று, பத்திர நகல்பெறுவது உள்ளிட்டவை எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.
இதனால் பதிவுத்துறை வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதவிர, சமீபத்தில் தத்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சார்பதிவக எல்லைகளை வரையறுத்து மறுசீரமைத்தல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் 04.11.2022 அன்று பிற்பகல் 4.45 மணியளவில் நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியார் ச.விசாகன்,அவர்கள் தெரிவித்துள்ளார்.