மாவட்டச் செய்திகள்

லஞ்சம் தலைவிரித்தாடும் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை!?இடைத்தரகர்கள் இல்லாமல் பத்திரப்பதிவு நடக்குமா!? நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!?

கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் மோசடி முறைகேடுகள் ஊழல் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனிப்பிரிவுக்கு புகார் அளித்ததன் பெயரில் பத்திரப்பதிவு துறை ஐஜி புகார் சம்பந்தமாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடத்த உத்தரவு பிறப்பித்தார்.
அதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் சமீபகாலமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்படி சோதனை நடத்தி வந்ததில் பல பத்திரப்பதிவு அலுவலகங்களில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் பணம் இருந்ததை கண்டுபிடித்து ஹலோ சார் பதிவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஒரு சிலரை பணியிடை நீக்கம் செய்தால் ஒரு சில பெயரை துறைரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தற்காலிக ஊழியர்களாக பணி நியமிக்கப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத் தரகர்களை வைத்து ஊழல் மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி பத்திரப்பதிவுத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது.

ஆனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் மட்டுமே கை ஓங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் நடந்து வருவதாகவும் கோவை மாவட்டத்தில் அதிக வருமானம் வரும் சார்பதிவாளர் அலுவலகம் என்றால் அது பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகம் மட்டுமே!
ஏனென்றால் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு  செய்ய நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் என்பதால் ஒவ்வொன்றும் பண மூட்டை என சொல்லும் அளவுக்கு மகேஸ்வரி இடைத்தரகர்கள் வைத்து செயல்படுகிறார் என்ற தகவல் வந்துள்ளது.அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கின்ற பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை விட இரண்டு மடங்கு சார்பதிவாளர் உமா மகேஸ்வரிக்கு கிடைப்பதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.

உமா மகேஸ்வரி /சார்பதிவாளர் பொள்ளாச்சி
இடைத்தரகர். ராஜா

ஏனென்றால் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசு உரிமம் பெற்ற இரண்டு பத்திர எழுத்தாளர்கள் மற்றொருவர் எந்த ஒரு அரசு பணியிலும் இல்லாத (king ) என்ற பெயரைக் கொண்ட இந்த மூவரும் உமா மகேஸ்வரி அவர்களுக்கு இடைத் தரகர்களாக இருந்து கொண்டு பத்திரங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக சரிசெய்து அந்தப் பத்திரங்களை பதிவு செய்து கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் முக்கியமாக கிங் பெயரைக் கொண்ட நபர் சொல்வதை மட்டுமே சார்பதிவாளர் உமா மகேஸ்வரி பத்திரப்பதிவு செய்வார் என்றும் அப்படி கிங் பெயர் உள்ளவரிடம் செல்லாமல் பத்திரப்பதிவு செய்ய எல்லா ஆவணங்களும் முறையாக சமர்ப்பித்தாலும் அவ்வளவு எளிதில் பத்திரப்பதிவு நடைபெறாது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.. ஏனென்றால் ஒரு பத்திரப் பதிவுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடி கட்டிப் பறக்கிறார் என்றும் கிங் பெயர் கொண்டவரை மீறி எந்த ஒரு பத்திரப் பதிவும் நடப்பது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்திரப்பதிவு செய்யும் இடங்களுக்கு களப்பணி செய்து சரிபார்ப்பது சார்பதிவாளர் அவர்களின் வேலை. ஆனால் சார்பதிவாளர் உமாமகேஸ்வரி களப்பணி என்ற பெயரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லாமல் பத்திர பதிவு செய்யும் நபர்களிடம் அதற்கு ஒரு பெரிய தொகையை நிர்ணயித்து பெற்றுக்கொண்டு களப்பணி சென்றதாக செலவு கணக்கை காட்டி அரசுப் பணத்தையும் மோசடி செய்து வருகிறார் என்ற தகவலும் வந்துள்ளது.
எது எப்படியோ சார்பதிவாளர் உமாமகேஸ்வரி அவர்களுக்கு சேர வேண்டிய தொகையை கிங் பெயர் கொண்டவர் சரியாக வசூல் செய்து அந்தத் தொகையை சார்பதிவாளர் உமா மகேஸ்வரி அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற பின் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு சார்பதிவாளர் உமா மகேஸ்வரியின் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வரவைத்து அந்தக் காரில் அவருக்கு சேர வேண்டிய தொகையை ஒப்படைத்து விடுகிறார் கிங் பெயர் கொண்டவர் என்ற தகவலும் வந்துள்ளது. இதனால் பொள்ளாச்சி சார்பதிவாளர் உமாமகேஸ்வரி அலுவலகத்தில் யாரிடமும் பணம் வாங்காமல் நேர்மையாக பத்திரப்பதிவு செய்வதாக கூறி மாய பிம்பத்தோற்றத்தை உண்டாக்கி  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஆனால் பொள்ளாச்சி சார்பதிவாளர் ஆக இருக்கும் உமாமகேஸ்வரி அவர்களுக்கு லஞ்சமாக கிடைக்கும் பணம் மாதம் சுமார் 25 லட்ச ரூபாய் வரை இருக்கும் என்று அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.விஜிலன்ஸ் ரெய்டு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது .ஆனால் அதை எதிர் கொள்ளவும் சார் பதிவாளர் உமா மகேஸ்வரி தயார் நிலையில் இடைத்தரகர்களை வைத்துள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது. எந்த பணத்தையும் பறிமுதல் செய்ய முடியாது என்கிறார்கள்.காரணம் கிங் பெயர் கொண்டவர் கிங்காக கரன்சி டீலிங் செய்வது எல்லாமே இவர் தானாம். கடந்த அதிமுக ஆட்சியிலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கோலோச்சி வந்தார் தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக சில மாதங்கள் அமைதியாக இருந்த கிங் தற்போது மீண்டும் மாற்றத்தை தோன்ற ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள். பத்திரபதிவு சார் பதிவாளர் ஆய்வு செய்ய வேண்டிய பைல்களை எல்லாம் இடைத்தரகர்கள் தான் ஆய்வு செய்கிறார்கள் இதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள் எல்லாம் கரன்சி படுத்தும் பாடு என்கிறார்கள் அங்கு வேலை செய்யும் கீழ்நிலை ஊழியர்கள்..

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையில் தெரிவித்துள்ளார்.

ஆகவே கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் ஊழல் செய்து 6 லட்சம் கோடி ரூபாய் வரை கடனில் விட்டுச் சென்ற தமிழகத்தை தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல நூதன திட்டங்களை வகுத்து தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வந்து கொண்டிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.அந்த அளவுக்கு சாதுரியமாக அரசை வழிநடத்திக் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பு வராமல் பல திட்டங்களை புதிதாக உருவாக்கி அதிலிருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட முயற்சி செய்து வருகிறார். ஆனால் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் இதுபோன்ற பத்திரப்பதிவு அலுவலகங்களில் இருக்கும் சார் பதிவாளர்கள் தங்களது சுயலாபத்திற்காக அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக பத்திரப் பதிவுகள் செய்து வஞ்சங்கள் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதை தமிழக முதல்வர் நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து  சேர்துள்ளதை கண்டுபிடிக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தவறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button