லஞ்ச ஒழிப்புத் துறை

லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக பட்டா வழங்கி பத்திரப்பதிவு செய்து கொடுத்த அம்பத்தூர் வட்டாட்சியர்மீது நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்!

வாரம் ஒருமுறை கோட்டாட்சியர்கள், பட்டா தவறு திருத்தப் பணியில் ஈடுபட வேண்டுமென தமிழக முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் .திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் வட்டாட்சியர்கள் பெரும்பாலும் ஊழல் கரை படிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களின் மீது துறை ரீதியாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் வருவாய்த்துறை செயலாளர் மற்றும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை  மாநகராட்சி மண்டலம் 7 அம்பத்தூர் பகுதியில் உள்ள வார்டு 82, 81 அம்பத்தூர்    ரெட்டில்ஸ் மெயின் ரோடு கங்கை நகர்  சர்வீஸ் ரோட்டில்  வெக்காளியம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள சர்வே 791/8A   சுமார் 22 சென்ட் நிலம்  உள்ளது.

அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு கங்கை நகர்.
சட்ட விரோதமாக பட்டா வழங்கிய இடம் அம்பத்தூர் கங்கை நகர்
சர்வீஸ் ரோடு

ஆனால் அந்த அந்த இடத்தில் சட்டவிரோதமாக    அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி இருப்பதாக அம்பத்தூர் மாநகராட்சி ஆணையருக்கு புகார் கொடுத்து அதன் பின்பு அந்த கட்டிடத்திற்கு  அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கட்டிடத்தை அதிகாரிகள் சீல் வைத்த போது

அதன் பின்பு அதே நபர்கள் சட்டவிரோதமாக கட்டிட வேலை ஆரம்பிக்க செங்கல் மணல் கொட்டி வைத்துள்ளனர் .

அதிகாரிகள் வைத்த சீல் சட்ட விரோதமாக அகற்றப்பட்டு மீண்டும் கட்டிடத்தை கட்டுவதற்கு செங்கல் மணல் இறக்கி வைத்துள்ள படம்

மீண்டும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் தற்போது எந்த வேலையும் நடக்கவில்லை என்றும் தகவல் வந்துள்ளது.
சரி இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிக்கை குழு புலனாய்வு மேற்கொண்டது. அப்போது அதிர்ச்சி தரும் தகவலை அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். அது என்னவென்றால் தற்போது சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டி உள்ள கட்டிடங்கள் சட்ட விரோதமாக அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் அந்த இடத்தின்  உண்மையான உரிமையாளர்
துரைசாமி நாயக்கர் பெருமாள் நாயக்கர் இவர்கள் இரண்டு பேரின் பூர்வீக நிலம் என்றும் தாம்பரம் புழல் புறவழிச்சாலை (பைபாஸ் )சாலை அமைக்கும் போது சாலைக்கு நிலம் எடுத்துள்ளனர் . சாலைக்கு எடுத்தது போக மீதி நிலம்  சுமார் 22 சென்ட் நிலம் உள்ளது.
துரைசாமி நாயக்கருக்கு கோதண்டன் மாசிலாமணி என்ற இரண்டு மகன்கள் .ஆனால் இரண்டு பேரும் இறந்து விட்டனர்.தற்போது அவர்களது வாரிசு தாரர்கள் சீனிவாசன் மகாலிங்க ஈஸ்வரி தனஞ்செளியன் மேனகா மற்றும் உறவினர்கள் இருக்கின்றனர். பெருமாள் நாயக்கருக்கு வாரிசு இல்லை.
துரைசாமி நாயக்கர் பெருமாள் நாயக்கர் மனைவி ஆண்டாள் அம்மாள் இவர்கள் இரண்டு பேர் பெயரில் சிட்டா அடங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆனால் சட்டவிரோதமாக   அந்த நிலத்தை 500 சதுர அடி 600 சதுர அடி என்று பல பேரிடம் பல லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு வாய்மொழியாக பிரித்து கொடுத்து  மோசடி செய்துள்ளனர்.தற்போது பல லட்சங்கள் கொடுத்து வாங்கிய நபர்கள்  தாங்கள் இந்த இடத்தை அனுபவித்து வருவதாக சொல்லி வில்லிவாக்கம் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அவர்களுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்து எந்தவித மூலப்பத்திரம் என்று சொல்லப்படும் அசல் தாய் பத்திரம் போன்ற எந்த ஆவணங்களும் இல்லாமல் சட்ட விரோதமாக தங்களுடைய மனைவி மற்றும் மகள்கள் கணவர்கள் பேரில் தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.


இந்த மோசடிக்கு உடந்தையாக கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் கொரட்டூர் நிள அளவர் வருவாய் ஆய்வாளர்  மற்றும் அம்பத்தூர் வட்டாட்சியர் இவர்கள் ஒன்று சேர்ந்து பல லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக முறைகேடாக  பட்டா வழங்கி மோசடி செய்து உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்கள்.
இதுபோன்று அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் பல நிலங்களை சட்ட விரோதமாக லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கி அந்த நிலங்களை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
_
(வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு என் மற்றும் பெயர் வருமாறு.)
சர்வே 791/8A 22 சென்ட் நிலம் துரைசாமி நாய்க்கர்
கோதண்டம், மாசிலாமணி இரண்டு மகன்கள். இவர்களது வாரிசு
பெருமாள் நாயக்கர் மனைவி ஆண்டாள் அம்மாள்   மல்லிகா  வாரிசு இல்லை
2020  27 அக்டோபர் 4348/2020
கோபி மகள் ஜெயந்தி  588 சதுரடி 
வாங்கியவர் இராஜேஸ்வரி
10 மார்ச் 2023
2022 ஜனவரி தட்ச்ணாமூர்தி மனைவி சூரியக் குமாரி  வாங்கியவர் வில்வன்  ஏப்ரல் 28/2023  பத்திரப்பதிவு எண் 3965/2023

(1) 09 நவம்பர் 2020 கணேசன் என்பவர் மகன் கவுதம் 588 சதுரடி  பத்திரப்பதிவு எண்4710

(2) 09நவம்பர் 2020 ஜகதீஸ்வரி கணவர் கணேசன்  200 சதுரடி
4712  பத்திரப்பதிவு எண்
(2317/2022)  மணி என்பவருக்கு  மார்ச் மாதம் விற்பனை செய்து பதிவு செய்துள்ளது.

(3) தான செட்டில்மென்ட்
வெங்கடேஷ் என்பவரருக்கு மனைவி விஜயா   மார்ச் 2022  தான settlement. 587 சதுரடி பத்திரப்பதிவு எண் (2406)

(4) மகள் உஷா பெயருக்கு
569 சதுரடு கணவர் பாபு 30மார்ச்2022  (பத்திர பதிவு எண் 2407 வில்லிவாக்கம் )


எது எப்படியோ நீதிமன்றங்கள் பலமுறை லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எச்சரித்தும் அதுவும் முக்கியமாக பத்திரப்பதிவுத்துறை ஐஜிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.அதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல் தற்போது பத்திரப்பதிவுத்துறை வருவாய்த்துறை இந்த இரண்டு துறையில் இருக்கும் அதிகாரிகளின் லஞ்ச ஊழல் முறைகேடுகளை தடுத்து அவர்கள் மீது துணை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் ஏன் தயங்குகிறார்கள். நடவடிக்கை எடுக்க இவர்களை தடுப்பது யார் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நம்பி வாக்களித்து இந்த ஆட்சியை ஒப்படைத்துள்ளார்கள் என்றும் ஆகவே தவறு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையெல்லாம் தற்போது வருவாய்த்துறை பத்திரப்பதிவு துறையில் உள்ள அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டு தங்கள் சுயலாபத்திற்காக சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவது தான் நிதர்சனமாக உள்ளது ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் பத்திரப்பதிவு துறை மற்றும் வருவாய்த்துறையில் உள்ள அதிகாரிகளை கண்காணிக்க தனி குழு அமைத்து விசாரித்தால் மட்டுமே இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுதான் நிதர்சனம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button