மாவட்டச் செய்திகள்

லஞ்ச ஊழலில் கொடி கட்டி பறக்கும் மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி பேரூராட்சி!கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு போன்ற வைரஸ் நோயால் பொதுமக்கள் அவதி! கோமாவில் இருக்கும் பேரூராட்சி நிர்வாகம்!நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியின் அவல நிலை!
கடந்த இரண்டு வருடமாக எந்தவித கட்டமைப்பு மற்றும் நிர்வாக செயல்பாடுகள் இல்லாமல் கோமாவில் இருக்கும் வாடிப்பட்டி பேரூராட்சி ! வசூல் வேட்டையில் கோலாச்சி நிற்கும் பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள்!?


கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியின் நிர்வாகத்தில் லஞ்ச ஊழலில்  கொடிகட்டிப் பறந்ததை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
தற்போதும் தொடரும் அவல நிலை!
வாடிப்பட்டி பேரூராட்சியில் லஞ்சம் வாங்கும் பட்டியல்!

1. 500 சதுர அடி வீட்டிற்கு அனுமதி வழங்க 20 ஆயிரம் லஞ்சம்.
2). 500 சதுர அடிக்கு மேல் ஆயிரம் சதுரடி வரை அனுமதி 20 ஆயிரம் லஞ்சம்.
3). 1000 சதுர அடிக்கு மேல் 2000 சதுர அடி வரை கட்டும் வீட்டிற்கு அனுமதி தர 50,000 ரூபாய் லஞ்சம்.
4). வணிகரீதியான கடைகளுக்கு
100 சதுரடி உள்ள ஒரு கடைக்கு அனுமதிக்கு வழங்க 10000 ரூபாய்
5) இரண்டு மாடி அல்லது மூன்று மாடி வரை வணிக வளாகம் கட்டும் கட்டிடத்திற்கு அனுமதி வழங்க ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம்.
6) அதுபோல் சாலைகளில் நடைபாதை கடைகளுக்கு அனுமதி வழங்க ஒரு கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் .
7). திருமண மண்டபங்கள் அனுமதி வழங்க 10 லட்சம் வரை லஞ்சம்.
8) குடிநீர் குழாய் இணைப்பு வீடுகளுக்கு வழங்க 20 ஆயிரம் ரூபாய் 10 வருடம் முன்பே லஞ்சம் வாங்கியதாக தகவல்!தற்போது குடிநீர் குழாய்கள் வழங்க 25 ஆயிரம் வரை லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இப்படி வாடிப்பட்டி பேரூராட்சியில் வாங்கும்  லஞ்சப்பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது என்ற தகவலை சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மாதம் 10 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்ச ரூபாய் வரை பேரூராட்சியில் வேலை செய்யும் மூன்று கிளர்க் வேலை செய்வோருக்கு மட்டும் லஞ்சமாக வருவதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.

வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட  VS.நகர் என்ற பெயரில் வீட்டுமனை விற்பனை செய்யப்படுகிறது. அந்த இடத்தில் இடம் வாங்கி வீடு கட்ட அனுமதி கேட்டு வாடிப்பட்டி பேரூராட்சியில் வருபவர்களுக்கு சுமார் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது. எஸ் வி எஸ் நகர் பிளாட் போட்டு விற்பனை செய்ய அனுமதி வழங்கியது யார் என்று கேட்டால் இதுவரை வாடிப்பட்டி பேரூராட்சியில் பதில் இல்லை.
இப்படி பல கோடி வரை வாடிப்பட்டி பேரூராட்சியில் லஞ்சம் ஊழல் மோசடி நடந்ததாக தகவல் வந்துள்ளது. கட்டிட வரைபட அனுமதி தொடர்பாக இங்குக் குவியும் ஆவணங்கள் தான். இது வெறும் பைல்கள் அல்ல என்றும் இவை ஒவ்வொன்றும் பணமூட்டை என சொல்லும் அளவுக்கு பேரூராட்சி செயல்பாடு உள்ளது. எல்லா ஆவணங்களும் முறையாக சமர்ப்பித்தால் இப்பிரிவில் இருந்து அவ்வளவு எளிதில் கட்டிட வரைபட அனுமதி பெற முடியாது நகர்த்த வேண்டியதை நகர்த்தினால் தான் பைல்கள் நகரும். கரன்சி நடமாட்டம் அதிகரித்து விட்டதால் விஜிலன்ஸ் ரெய்டு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது ஆனால் அதை எதிர்கொள்ள பேரூராட்சியில் வேலை செய்யும் கிளார்க் மூன்று பேர் தயார் நிலையில் உள்ளனர் எப்போது வந்தாலும் எங்களிடமிருந்து எந்த பணத்தையும் பறிமுதல்  செய்ய முடியாது என்கிறார்கள். காரணம் இடைத்தரகர்கள் கடந்த பத்து வருட அதிமுக ஆட்சியில் கோலாச்சி வந்தார்கள் அதன் பின் ஆட்சி மாற்றம் வந்தவுடன் சில மாதங்கள் அமைதியாக இருந்த இவர்கள் தற்போது மீண்டும் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்று அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு செய்ய வேண்டிய எல்லா ஆவணங்களையும் கார்த்திக் ,தமிழரசி, ஆறுமுகம் இவர்கள்தான் ஆய்வு செய்வார்களாம். இதை தடுக்க வேண்டிய உயர் அதிகாரிகள் பச்சை கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள் என்றும் எல்லாமே கரன்சி படுத்தும் பாடும் என்றும் அவர்களுக்கு சேரவேண்டிய கரன்சி மாதா மாதம் சரியாக சரியான நேரத்தில் சேர்ந்து விடுவதால் அவர்கள் இவர்கள் செய்யும் லஞ்ச ஊழல் மோசடிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது. பேரூராட்சியில் உள்ள  மூன்று  கிளார்க் வேலையில் இருப்பவர்கள் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் என்றும் இவங்க பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதன பொருட்கள் தொடங்கி குடிநீர் பைப் வாங்குவது வரைக்கும் அவர்களுக்கு கமிஷன் கொடுக்கும் கடையில்தான் வாங்க வைக்கிறார்களாம்.அது மட்டுமில்லாமல் 100 மதிப்புள்ள பொருளை வாங்கி 200 கணக்கு எழுதி பாதிக்குப் பாதி கமிஷன் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அடிப்படை வசதிகள் மேற்கொள்வது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாக உயரதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்யாமல் இதுபோன்ற சட்ட விரோதமான அரசுக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார்களாம். வரி வசூல் செய்த பணத்தை ஒரு மாதம் வரை வரைக்கும் தாங்களே வைத்துக்கொண்டு சுய செலவுகளை செய்து வருகிறார்களாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கடந்த ஒரு வருடம் முன்பு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலர் சிவக்குமார் பணியிட மாறுதல் வந்தவுடன் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து ஃபைல் மற்றும் (ஆவணங்கள்) மற்றும் காசோலைகளை எடுத்துக் கொண்டு மதுரை செல்லும் வழியில் உள்ள கோவில் பெயர் கொண்ட ஹோட்டல் ஒன்றில் ஒரு வாரம் ரூம் போட்டு வாடிபட்டி பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் வரை பல பெயர்களில் காசோலைகளை  போட்டு பணத்தை எடுத்து ஊழல் செய்துவிட்டு ஈரோடு மாவட்டம் வானியம்புத்தூர் பேரூராட்சிக்கு சென்றுவிட்டார் என்றும் வாடிப்பட்டி பேரூராட்சியில் ஊழல் நடந்துள்ளதாகவும் பேரூராட்சியின் வரவு செலவு கணக்குகளை அறிக்கையை கொடுக்குமாறும் 07/10/21 அன்று தகவல் அறியும் சட்டத்தில் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் மகாராஜன் மற்றும் வாடிப்பட்டி தாலுகா பொறுப்பாளர் குப்புசாமி மூலம் கேட்டிருந்த நிலையில் புதிதாக வந்திருந்த பேரூராட்சி நிர்வாக அலுவலர் சரஸ்வதி மனுதாரரை நேரில் வந்து தகவல்களை சேகரித்து கொள்ளுமாறு13/11/21அன்று பதில் அனுப்பி இருந்தார். அதன்பின் மனுதாரர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற போது ஒரு சில கணக்கு வழக்குகளை காண்பித்து மற்ற எதையுமே காண்பிக்க மறுத்துவிட்டார்கள் . அதன்பின் 23/11/21 அன்று மனுதாரர்  மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புகார்அனுப்பியதடுடன் மேல்முறையீடு செய்திருந்தார். இது சமந்த்தமாக05/01/2022அன்று   AD அவர்கள்  மனுதாரர் மற்றும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் சண்முகம் அவர்களையும் நேரடி விசாரணை செய்து மனுதாரர் கேட்டிருந்த தகவல்களை வழங்குமாறு பேரூராட்சி அலுவலர் சண்முகம் அவர்களிடம் கூறி அனுப்பியுள்ளார். ஆனால் இதுவரை மனுதாரரை அழைத்து எந்தவித தகவலையும் பேரூராட்சி அலுவலக சண்முகம் தகவல்களை அளிக்காமல் எப்போது கேட்டாலும் மீட்டிங்கில் உள்ளேன் வெளியில் உள்ளேன் என்று கூறி காலம் தாழ்த்தி ஏமாற்றி வருகிறார் என்றும்  தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மனுதாரர் தற்போது பேரூராட்சி நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
தற்போது பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு எப்போது சென்றாலும் யாரும் இல்லை நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவதாகவும் புகார்கள் வந்துள்ளது.

பேரூராட்சியில் உள்ள கார்த்தி,தனலட்சுமி,ஆறுமுகம், இவர்கள் மூன்று பேரும்  வாடிப்பட்டி பேரூராட்சியில் இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வாங்கி ஆதிக்கம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீடு மற்றும் கடைகளுக்கு வரைபட அனுமதி கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தபின் 45 நாட்களுக்குள் மனுதாரர்க்கு கட்டிடத்தின் இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வரைபட அனுமதி பேரூராட்சி அலுவலர் வழங்க வேண்டும். ஆனால் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில்
உள்ள கிளார்க்  கார்த்திக் ஆறுமுகம் தமிழரசி இவர்கள் மூன்று பேருக்கும் லஞ்சம் வாங்கிக் கொடுக்க இடைத்தரகர்களை நியமித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இடைத்தரகர்களை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக பேரூராட்சி அலுவலகத்தில் வரைபட அனுமதி கேட்டால் குறைந்தது ஐந்து மாதம் கிடப்பில் போட்டு இடைத்தரகர்கள் வைத்து மட்டுமே அனைத்து பணியும் நடைபெறுவதாகவும் நேரடியாக பொதுமக்களுக்கு பேரூராட்சி அலுவலர்கள் எந்தப் பணியையும் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நியாயமான முறையில் வீடு மற்றும் வணிக ரீதியான கடைகளுக்கு அனுமதி கேட்டால் ஐந்து மாதங்கள் குறையாமல் மனுதாரர்களை  அலைய வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுபோல் வணிக வளாகங்கள் கட்டி முடிந்த கடைகளுக்கு பல மாதங்களாக வரி போடாமல் வாடிப்பட்டி பேரூராட்சி கிளர்க் கார்த்திக் இழுத்தடித்து லஞ்சம் பெற்றுக்கொண்ட பிறகு வரி போட்டு கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை பற்றி தற்போது வந்துள்ள வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலர் சண்முகம் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது  எனக்கு எதுவும்தெரியாது நான் புதிதாக வந்து உள்ளேன் நான் கேட்டு சொல்கிறேன் அலுவலகத்தில் உள்ளவர்கள் யார் பெயரும் எனக்கு தெரியாது  யாருடைய தொலைபேசியும் எனக்கு தெரியாது வேண்டுமென்றால் நீங்கள் நேரடியாக பேரூராட்சி அலுவலகத்தில் வந்து கேட்டுக் கொள்ளுங்கள்  என்ற  பதில் மட்டுமே சொல்லிவிட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்து விடுகிறார்.
தற்போது ஒரு வருடமாக
வாடிப்பட்டி பேரூராட்சியில் கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீர் எங்கேயும் செல்லாமல் அப்படியே தேங்கி நிற்பதால் கொசு அதிகமாக உருவாகி டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இதைப் பற்றி  எந்தக் கவலையும் படாமல் நடவடிக்கை எடுக்காமல்  பேரூராட்சி நிர்வாகம் லஞ்சம்  வாங்குவதிலேயே குறியாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் வந்துள்ளது.
வாடிப்பட்டி பேரூராட்சியில் தற்போது நூற்றுக்கணக்கான வீடுகள் வணிக வளாகங்கள்  கடந்த  ஒரு வருடமாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதியும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்காமல் தற்போது லஞ்சம் மட்டுமே குறிக்கோளாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.
பேரூராட்சி நிர்வாகத்தின் மீது பல புகார்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்.

எது எப்படியோ தற்போது
லஞ்ச ஊழலில் கொடிகட்டி பறக்கும் வாடிப்பட்டி பேரூராட்சியின் அவல நிலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேர்மையான அதிகாரிகளை நியமித்து பேரூராட்சியில் தணிக்கை செய்து லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை களை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆய்வாளர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button