லதா ரஜினிகாந்த் & சசிகலா
இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன!?
அதிமுகவுடன் சசிகலாவை இணைக்க பிஜேபி முயற்சி! அண்ணாமலையின் பேச்சால் பரபரப்பு!!
அதிமுக மூன்று அணியாக இருக்கும் வரை பிஜேபிக்கு கொண்டாட்டம்!??
மீண்டும் சசிகலா..OPS பேச்சால் எடப்பாடி சாக்!!
லதா ரஜினிகாந்த் & சசிகலா
இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன!?
அதிமுகவுடன் சசிகலாவை இணைக்க பிஜேபி முயற்சி! அண்ணாமலையின் பேச்சால் பரபரப்பு!!
அதிமுக மூன்று அணியாக இருக்கும் வரை பிஜேபிக்கு கொண்டாட்டம்!??
மீண்டும் சசிகலா..OPS பேச்சால் எடப்பாடி சாக்!!
சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கும் விதமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசிய பேச்சு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பையும், பரபரப்பையும் கிளப்பி விட்டு வருகிறது.. அதேசமயம் சசிகலாவை எதிர்ப்பதும், பிறகு மறைமுகமாக வரவேற்பதுமாக ஓபிஎஸ்ஸின் பேச்சு அமைந்து வருகிறது.
போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றி அரசு அறிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிட்டனர்.
இந்த உத்தரவைத் எதிர்த்து ஜெ தீபாவும் தீபக்கும் வழக்கு தொடுத்தனர். தீபாவுக்கும் , தீபக்கும் வழக்கறிஞரை சசிகலா தரப்பு நியமித்து அதற்கான செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் வந்தது. அதன்பின் ஜெயலலிதாவின் அதிகாரப் பூர்வமான வாரிசுதாரர்களாக சென்னை உயர்நீதிமன்றம் தீபா வையும் தீபக்கையும் நியமித்து உத்தரவிட்டது. இருந்தாலும் கடந்த அதிமுக ஆட்சியில் வேதா இல்லத்திற்கான மதிப்பு செய்யப்பட்டு அதற்கான தொகையை(56 கோடி ரூபாய் DD யை) உயர் நீதிமன்றத்தில் அரசு பணத்தில் அரசே செலுத்தியது. அதன்பின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் வேத இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது. அதன்பின் போயஸ் கார்டனில் குடியிருக்கும் மற்ற வி வி ஐ பிக்கள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் போயஸ்கார்டனில் மிக முக்கியமான விஐபிகள் குடியிருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடமாக வேதாளத்தை மாற்றினால் அங்கு அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் வந்து செல்வார்கள் இதனால் போயஸ் கார்டனில் குடியிருக்கும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் அதனால் வேதாளத்தை அரசுடைமை ஆக்கும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கையை மத்திய அரசு தமிழக அரசிடம் விவாதித்த பின்புதான் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாரிசுதாரர்கள் தீபா தீபக் 2 பேரிடமும் மில்லத்தின் சாவியை ஒப்படைக்கவும் கடந்த ஆட்சியில் இல்லத்திற்கு செலுத்திய ஐம்பத்தி ஆறு கோடி காசோலையை அரசு டிரசரரில் செலுத்த உயர்நீதிமன்றம் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் அவர்களுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்தான் வேதா இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் தீபா தீபக் இருவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் அவர்கள் ஒப்படைத்ததாகவும் அதன்பின் தீபா இல்லத்திற்கு சென்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் பின்புதான் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டில் சசிகலா ரஜினியை சந்தித்ததாகவும் அவரிடம் நலம் விசாரிப்பதும் தகவல்கள் வந்தது ஆனால் அங்கு நடந்தது வேறு. ரஜினி வீட்டிற்கு சசிகலாவை வரவழைத்தது லதா ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் தான் தற்போது பிஜேபியின் மறைமுக ஆலோசகராக இருக்கிறார். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இருக்கும் பிரச்சினையை தீர்த்து வைக்க லதா ரஜினிகாந்திடம் பிஜேபி பொறுப்பை கொடுத்திருப்பதாகவும் அதன் பின்புதான் இந்த முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவலும் வருகிறது . இதைத்தான் பிஜேபி தலைவர் அண்ணாமலை சூசகமாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு பிஜேபி முயற்சி செய்து வருகிறது என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு சொல்லியிருந்தார். ஆனால் அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் அணி என்று இரண்டு அணிகள் தற்போது இருப்பதால் இபிஎஸ் அணியில் இருக்கும் ஜெயக்குமார் போன்ற ஒருசிலர் சசிகலாவை இணைக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி போன்றோர்தான் சின்னம்மா என்று பகிரங்கமாகவே சொல்லி சசிகலா விடுதலை பற்றி பேசினார்களே தவிர வேறு தலைவர்கள் யாருமே வாய் திறக்க வில்லை.சசிகலாவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தற்போது ஓபிஎஸ் செய்த தவறுகளை தானாகவே முன்வந்து ஒத்துக் கொண்டால் யாராக இருந்தாலும் கட்சியில் இணைக்க வாய்ப்பு இருப்பதாகவும் மறைமுகமாக பேசியுள்ளது தற்போது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பிஜேபியின் ஆலோசகராக வைத்துள்ள லதா ரஜினிகாந்தின் பேச்சுவார்த்தையில் சசிகலா அவர்களுக்கு அதிமுகவில் ஏதோ ஒரு பொறுப்பு கொடுக்க இருப்பதாகவும் தாங்கள் பாராளுமன்ற தேர்தல் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்றும் பிஜேபி கூறியதாக லதா ரஜினிகாந்த் சசிகலாவிடம் கூறியதாக தகவல் வந்துள்ளது. எது எப்படியோ அதிமுக 3 அணியாக இருக்கும் வரை பிஜேபிக்கு இவர்கள் வைத்து அரசியல் செய்ய ஒரு இடம் இருக்கத்தான் செய்யும். அதை வைத்து தமிழகத்தில் பிஜேபி காயை நகர்த்த முடிவு செய்யும் என்பதுதான் நிதர்சனம்!
மீண்டும் சசிகலா பற்றின பேச்சை மறைமுகமாக எடுத்துள்ளார் ஓபிஎஸ்.. ‘தவறு செய்தவர்கள் மனம் திரும்பி வந்தால், அவர்களை ஏற்பதுதான் தலைமைக்கு அழகு என்று எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்து கொண்டே பேசியுள்ளார்.. இதற்கு முதல் நபராக வழக்கம்போல் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தாலும், எடப்பாடி சைலண்ட்டாகவே இருக்கிறார்.. இந்த அமைதிக்கு பின்னாடி என்ன புயல் வீச போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!
இதில் பாதிக்கப்படுபவர்கள் அதிமுக தொண்டர்கள் மட்டுமே!!!!! தொடரும்