வசூல் வேட்டை நடத்தும் செங்கல் பட்டு மருத்துவ மனை நிர்வாகத்தின் அவலம்! நடவடிக்கை எடுப்பாரா சுகாதாரத் துறை அமைச்சர்!
சுங்கச் சாவடிகளை எடுக்க அனைத்துக் கட்சிகளும் போராடும் நேரத்தில் புதிதாக சுங்கச்சாவடி அமைத்து வசூல் வேட்டை நடத்தும் செங்கல் பட்டு மருத்துவமனையின் அவலம்!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தி சுங்கச்சாவடி போல் வசூல் போல் மடக்கி மடக்கி இன்று (28.10.2023) சுமார் காலை 8.30 மணி வசூல் செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த சட்டவிரோத செயலால் திமுக அரசுக்கும் திமுக கட்சிக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தக் கூடிய வேலையை செய்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகை செய்கின்றனர். மாவட்ட முழுவதும் இருந்தும், அருகாமை மாவட்டங்களில் இருந்தும் ஒருநாளைக்கு சுமார் 500 முதல் 1000 பேர் வந்து செல்லக்கூடிய சாமானிய ஏழை எளிய குடும்பத்தினர் தனியார் மருத்துமனைக்கு செல்ல முடியாதவர்கள் தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர் அவர்களிடத்தில் வசூல் செய்வது நியாமமா? உடனே சுகாதாரத் துறை அமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!