லஞ்ச ஒழிப்புத் துறை

வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வாதிகாரியாக தனி அரசாங்கம் நடத்தி ஒரு கோடியில் ஆடம்பர சொகுசு பங்களா கட்டியுள்ள உசிலம்பட்டி நகர பெண் நில அளவையர்!? கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட வருவாய் நிர்வாகம்! லஞ்ச ஒழிப்புத் துறையின் கடைக்கண் பார்வை எப்போது!?

வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து உள்ள உசிலம்பட்டி நகர பெண் நில அளவையர்! கோமாவில் இருக்கும் வருவாய்த்துறை நிர்வாகம்! சாட்டையை கையில் எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை!

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அரசாங்கம் நடத்தும் நகர பெண் நில சர்வேயர்.

உசிலம்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் வட்டாட்சியர் aலுவலகம் உசிலம்பட்டி நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியரராக சுரேஷ் பிரடரிக்கிள மண்ட் உள்ளார்.வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று வருடங்களாக பிச்சை மணி என்ற பெண்மணி உசிலம்பட்டி நகர சர்வேயராக இருக்கிறார்.


இவர் முதலில் குக்கிராமங்களில் உள்ள நிலங்கள் சம்பந்தப்பட்ட அளவையாராக இருந்துள்ளார்.
தற்போது உசிலம்பட்டி நகர நில அளவையாராக இருக்கிறார்.


இவர் செய்யும் வஞ்ச ஊழல் முறைகேடு மோசடிகளுக்கு உதயகுமார். மோசஸ். பாண்டி. என்பவர்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த மும்மூர்த்திகள் மூலமாக தான் எந்த ஒரு பட்டா மற்றும் பெயர் மாற்றம் போன்றவை அனைத்து வேலைகளையும் பெண் சர்வேயர் கச்சிதமாக முடித்து அதற்கான சன்மானமாக பெரிய தொகையை லஞ்சமாக பெற்றுக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. புரோக்கராக செயல்பட்டு வரும் மும்மூர்த்திகளுக்கு லஞ்சப் பணத்தில் இருந்து ஒரு சிறு தொகையை அவர்களுக்கு கொடுத்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.
ஒரு சொத்தை பாகப்பிரிவினை அளவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு ரூபாய் 10 ஆயிரம், முதல் ஒரு லட்சம் வரை வாங்குவதாகவும் அது மட்டுமில்லாமல் நிலத்தை அளவீடு செய்ய நிலத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய ரூபாய் 7000 ரூபாய் முதல் 25000 ரூபாய் வரை என லஞ்சமாக கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.
இந்த லஞ்ச ஊழல் முறைகேடு பற்றி பெண் நில அளவையர் பிச்சை மணி இடம் சமூக ஆர்வலர்கள் கேட்கச் சென்றாள் அதற்கு அவர் கூறும் பதில் அதிர்ச்சி தந்ததாக இருந்ததாகவும் கூறுகின்றனர் அப்படி என்ன தான் நில அளவையர் பிச்சைமணி கூறினார் என்று விசாரித்தால் பெண் நில அளவையர் பிச்சை மணி யின் கீழ் தற்காலிக ஊழியர்களாக 10 பேரை வைத்துள்ளார் என்றும் அந்த பத்து ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் ஆகையால் தான் பட்டா பெயர் மாற்ற பத்தாயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை வாங்குகிறேன் என்று தைரியமாக கூறியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இவர் (சர்வேயராக )நில அளவையாராக பணிக்கு வந்த பின்பு உசிலம்பட்டியில் சுமார் ஒரு கோடி மதிப்பில் ஆடம்பர சொகுசு பங்களா வாங்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் வருமானத்திற்கு அதிகமாக வாங்கும் லஞ்ச பணத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பல்வேறு அசையா சொத்துக்கள் வாங்கி உள்ளதாக உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு சில நேர்மையான ஊழியர்கள் பேசுவது நம் காதிற்கு வந்துள்ளது.
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்று இவரிடம் சமூக ஆர்வலர்கள் கேட்டால் அதற்கு என்னுடைய உறவுக்காரர் தலைமைச் செயலகத்தில் முக்கிய உயர் பதவியில் இருக்கிறார் என்றும் எனது கணவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார் என்றும் உங்களால் முடிந்ததை பாருங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் உங்களுக்கு தெரிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் . என் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தினால் விசாரணை நடத்தும் அதிகாரிகள் என்னை ஒன்றும் செய்ய முடியாது அது மட்டும் இல்லாமல் அவர்களை நேருக்கு நேராக சந்திக்க தயார் என்று கூறி வருகிறாராம்.
இந்த பெண் நில அளவையரின் லஞ்சம் ஊழல் முறைகேடு அராஜகம் கூடிக் கொண்டே செல்வதால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் என்ன செய்வது என்று மிகவும் மனக் குழப்பத்தில் வேதனையுடன் இருந்து வருகிறார்கள் என்று சமூக ஆர்வ ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதையெல்லாம் கண்டும் காணாமல் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர்


ஆகவே லஞ்ச ஊழல் முறைகேடு செய்து சர்வாதிகாரியாக செயல்பட்டு வருவதாக மதுரை மாவட்ட உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பெண் நில அளவையர் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருவாய்த்துறை நிர்வாகம் சீர்கெட்டு விடும் என்பதை சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அரசு ஊழியராக இருந்து வரும் நில அளவையர் வருமானத்திற்கு அதிகமான பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக வந்துள்ள தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினால் மட்டுமே பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button