வருமானத்திற்கு அதிகமாக 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா 10 கோடி மதிப்புள்ள திருமண மண்டபம் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வலம் வரும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய ABDO மற்றும் மேலாளர் மீது
லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடவடிக்கை எடுக்குமா!?

வட்டார வளர்ச்சி அலுவலகம் (Block Development Office) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில், முன்னூற்று எண்பத்தைந்து ஊராட்சி ஒன்றியங்களின்
[1] கீழ் உள்ள 12,524 ஊராட்சி மன்றங்களில் உள்ள ஊர் மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் மகளிர், பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தவர் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் சமூக நலத் திட்டங்களை திட்டங்களை கிராமங்களில் நடைமுறைப்படுத்தவும். அரசுகள் வழங்கும் நிதிகள் மற்றும் மானியங்களை கையாள்வதற்கும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியவர்களின் வழிகாட்டுதல்களின் படியும் வட்டார அளவில் செயல்படுகிறது.
[2]மத்திய, மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சி திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கண்காணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர் 29/10/2021 அன்று மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.
,ஆளுங்கட்சியினர் செய்யாத வேலைகளுக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கின்றனர். அது மட்டுமில்லாமல் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விதிமுறைகள் மீறியுள்ளதாகவும் சூரிய மின் விளக்கு வைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்றும்.இதற்கு காரணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் மற்றும் துணைத் தலைவர் முருகப்பா இரண்டு பேருக்கும் இடையே உள்ள கருத்து மோதல் காரணமாகவே அலுவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார். அது மட்டுமில்லாமல் அஜாந்தாவில் இல்லதா பொருள்களை தீர்மானத்தில் கொண்டு வந்து ஒப்பந்தம் வைத்து தரச் சொல்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஹை மாஸ் லைட் மற்றும் சோலார் விளக்குகள் அமைக்க பொது நிதியில் எடுக்கக் கூடாது.ஆனால் அதையும் தீர்மானத்தில் ஏற்றி ஒப்பந்தம் வைக்க சொல்கிறார்கள் என்றும் ஒன்றிய குழு தலைவர் 16 வேலைகளை எழுதிக் கொடுத்து இதில் எட்டு வேலைகள் செய்து முடிந்து விட்டதாகவும் ஒப்பந்தம் வைக்க சொல்கிறார் என்ற குற்றச்சாட்டையும் எழுப்பி இருந்தார். பொது நிதியில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு அஜந்தா அளிக்கப்படாமல் தீர்மானம் நிறைவேற்றினால் செல்லாது என்று இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் target work வழங்கப்பட்ட நிர்வாக அனுமதியினை ஊராட்சியின் மூலமாகவே செயல்படுத்த வேண்டும். இதையெல்லாம் அப்போதிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தெளிவாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியதில் நான் இங்கு பணி செய்ய முடியாது என்றும் எனக்கு நீண்ட நாள் விடுப்பு வேண்டும் என்றும் எழுதியிருந்தால் அவரை வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பின்பு குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் எந்த மக்கள் நலத் திட்டங்களும் செய்யாமல் இருந்த நிலையில் இதற்கு முன் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் சட்ட விதிகளை மீறி முறைகேடாக தீர்மானங்களை நிறைவேற்றி பல கோடிகள் ஊழல் செய்த இரண்டு பேரை குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு நியமிக்க முடிவு செய்தனர் குத்தால ஊராட்சி ஒன்றிய சேர்மன் மற்றும் ஏடி பஞ்சாயத்து மஞ்சுளா.
அந்த ஊழல் பெருச்சாளிகள் இரண்டு பேர் யார் !?அவர்கள் பின்னணி என்ன !?என்பதை தொடர்ந்து பார்ப்போம் அதிர்ச்சி தரும் தகவல் வந்துள்ளது.

ABDO கஜேந்திரன் மேலாளர் சசிகுமார்மயிலாடுதுறை மாவட்ட ஏடி பஞ்சாயத்து மஞ்சுளா

ஒருங்கிணைந்த நாகை மாவட்டமாக இருக்கும்போதே ஊராட்சி அலுவலங்களில் ஊழல்வாதிகள் என்றாலே கஜேந்திரன் சசிகுமார் கலியமூர்த்தி இந்த மும்மூர்த்திகள் தான். இவர்கள் மூன்று பேரும் எமன், காலம் ,தூதன் ,போல செயல்பட்டு வந்தார்கள் என்று பேசப்படுகிறது.
அந்தளவிற்கு ஊழல் முறைகேடு செய்வதில் வல்லமை மிக்க நபர்கள் என்று தகவல் வந்துள்ளது.
(இதில் கஜேந்திரன் சசிகுமார் இவர்கள் இரண்டு வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்கள் இவர்களுக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)
கடந்த அதிமுக ஆட்சியில் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலராக (BDO ,)ரெஜினா ராணி ABDO வாக கஜேந்திரன் மேலாளராக சசிகுமார் இந்த மூன்று பேரும் இருந்தபோது பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு செய்து கனக்கச்சிதமாக தற்போது வரை தப்பித்துக் கொண்டு வருகின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
இந்த ஊழல்வாதிகளுக்கு பின்பலமாக அப்போது இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாரதி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் முறைகேடு செய்த பணத்தில் ஒரு சிறு தொகையை மட்டுமே சட்டமன்ற உறுப்பினருக்கு சன்மானமாக கொடுத்து விட்டு பெருந்தொகையை இவர்கள் வைத்துக்கொண்டு நாடகம் நடத்தி அரங்கேற்றி வந்துள்ளனர் என்று அந்த அலுவலகத்தில் பணி செய்த சில ஊழியர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். அதில் முக்கியமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினா ராணியின் அதிகாரத்தை முழுவதுமே கஜேந்திரனும் சசிக்குமார் இரண்டு பேரும் தன் வசப்படுத்திக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.
இந்த ஊழல் முறைகேடு பற்றி அப்போது இருந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாரதிக்கு தெரியவர பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன்பு மேலாளர் சசிகுமாரை பணியிடம் மாற்றம் செய்துள்ளார்.
ABDO கஜேந்திரன் தன் நடிப்பால் சட்டமன்ற உறுப்பினர் பாரதியிடம் வளைந்து நெளிந்து கொடுத்து போனதால் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே பணியைத் தொடர்ந்தார் என்று கூறப்படுகிறது. அதன் பின்பு கஜேந்திரன் சசிகுமார் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாட்டால் சில காலம் எலியும் பூனையும் போல் இருந்து வந்துள்ளனர். இருந்தாலும் கஜேந்திரன் அவருடைய தந்திரத்தை பயன்படுத்தி சசிக்குமாரை சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மறுபடியும் கொண்டு வந்து கொண்டு வந்து இரண்டு பேரும் இணை பிரியா இரட்டை குழல் துப்பாக்கி போன்று மறுபடியும் ஊழல் முறைகேடு ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் தாங்கள் ஊழல் முறைகேடு செய்து சம்பாதித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா திருமண மண்டபம் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் இவற்றையெல்லாம் தக்க வைத்துக் கொள்ள அப்போது நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த அதிமுக கட்சிக்கு சாதகமாக இருந்துள்ளார்கள் ABDO கஜேந்திரன் மற்றும் சசிகுமார்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கட்சியினர் கஜேந்திரன் சசிகுமார் மீது பல புகார்களை அப்போதே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்துள்ளனர்.
அதன்பின்பு 2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ABDO கஜேந்திரனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக கட்சியினர் சீர்காழி திமுக சேர்மன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் இவர்களிடம் முறையிட்டதால் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் கஜேந்திரன்.
குத்தாலம் சென்ற கஜேந்திரன் செய்வது அறியாது தான் செய்த ஊழல் முறைகேடுகளை மறைக்கவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்ததை தக்க வைத்துக் கொள்ளவும் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம் தஞ்சம் அடைந்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.மாவட்ட ஆட்சியாளர் மூலம் குத்தால வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சசிகுமார் பணியிட மாற்றம் செய்து கொண்டு வந்துள்ளதாகவும் தற்போது குத்தாலத்தில் சசிக்குமாறும் கஜேந்திரனும் மறுபடியும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. எந்த ஒரு பைசாவும் செலவு செய்யாமல் தங்களுடைய தந்திரத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் ஊழல் முறைகள் செய்து உல்லாசமாக வலம் வருகின்றனர். இப்படி அரசு அலுவலங்களில் உள்ள ஊழியர்கள் ஊழல் முறைகேடுகள் ஈடுபடுவதால் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசிற்கும் தமிழக முதல் ஸ்டாலின் அவர்களுக்கும் களங்கப்படுத்தும் வகையில் இந்த செயல் அமைந்துவிடும் என்பது தான் நிதர்சனம்.
2016 முதல் 2021 வரை சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த பணிகள் பற்றி பொது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ளதாகவும் அதில் 100 நாட்கள் வேலையில் மட்டுமே பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதுமட்டுமில்லாமல் சாலைகள் ஏரி குளங்கள் தூர்வாரி சீரமைப்பது மின்சாதனங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் இது போன்று இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம் என்று சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனை செய்வதை போல் அரசின் முக்கிய துறைகளான வட்டாட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் பத்திரப்பதிவு துறை அலுவலகம் டாஸ்மார்க் மேலாளர் அலுவலகம் இது போன்ற பணம் கொட்டும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தால் மட்டுமே தமிழகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு இல்லாமல் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்க வேண்டும் வர வேண்டும் என்ற முதல்வரின் எண்ணம் நிறைவேறும் என்பது தான் நிதர்சனம்.
( மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சிக்கு ஆய்வு என்ற பெயரில் செல்லும் AD பஞ்சாயத்து மஞ்சுளாவுக்கு குறைந்தது 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஊராட்சி மன்ற தலைவர் தரவேண்டுமாம். அப்படி ஒரு நாளைக்கு மூன்று ஊராட்சிக்கு குறையாமல் ஆயவுக்கு செல்வதாகவும் அப்படி செல்வதால் குறைந்தது ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் வரை கிடைக்கும் என்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 12,524 ஊராட்சி மன்றங்களை ஆய்வு செய்யும் போது பல கோடி ரூபாய் இவர்களுக்கு கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதை எல்லாம் வசூல் செய்து கொடுப்பவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லமுத்து குமார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தற்போது
குத்தாலம் உராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி செய்யும் ABDO
கஜேந்திரன் மற்றும் மேலாளர் சசிகுமார் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் உழல் முறைகேடுக்கு உடந்தையாக AD பஞ்சாயத்து மஞ்சுளா இருப்பதற்கு சன்மானமாக மாதா மாதம் ஒரு பெரும் தொகையை கையூடாக பெற்றுக் கொள்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. )