மாவட்டச் செய்திகள்

வருமா வராதா !?
பாழடைந்து கிடக்கும் கால்நடை மருத்துவக் கிளை நிலையம்! கால்நடைகளின் மீது கருணை காட்டுவாரா தேனி மாவட்ட ஆட்சியர்!?

வருமா வராதா !?
பாழடைந்து கிடக்கும் கால்நடை மருத்துவக் கிளை நிலையம்! கால்நடைகளின் மீது கருணை காண்பிப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்!

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய்க்கானை நோய் தடுப்பு ஊசி முகாம் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியர் ஆண்டிபட்டி குன்னூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.


தேனி மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்துகள் மருத்துவர் ஆய்வாளர் உள்ள பல்வேறு பணியாளர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தேனி போடி பெரியகுளம் ஆகிய மூன்று நகராட்சிகளில் மட்டுமே கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் 33 கால்நடை மருந்துகள் இருப்பதாக தகவல் ஆனால் தற்போது இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் தேனில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மட்டுமே கால்நடைகளுக்கான சிகிச்சை அளிக்கும் வசதி மற்றும் மருந்துகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகள் பெற முடியாமல் கால்நடை வளர்ப்பு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



அதேபோல்
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா குள்ளப்புரம்  கால்நடை பராமரிப்பு அரசு கால்நடை மருத்துவ கிளை நிலையம் உள்ளது  தற்போது சுற்றுச்சூழல் மிகவும் பழுதடைந்து மேல்கூரை இடிந்து விழுந்து வானத்தைப் பார்த்த நிலையில் உள்ளது .

மருத்துவக் கிளை நிலையம் குள்ளபுரம் பெரியகுளம்

இக்கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் அதிகமாக உள்ளனர் . அந்தப் பகுதியில் ஆடு கோழி மாடு என்று ஆயிரக்கணக்கான கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். ஆனால் கால்நடைகுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எங்கு கொண்டு சென்று பார்ப்பது என்று வழி தெரியாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
காரணம் தற்போது வாயில்லா ஜீவன்களுக்கு மருத்துவம் பார்க்கும் அரசு கால்நடை மருத்துவர் வருவதில்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியாளருக்கு புகார் அளித்துள்ளனர்.
புகாரியின் அடிப்படையில் ஒரு சில நாட்களுக்கு மட்டும்  கால்நடை மருத்துவர் வந்தாலும் இப்படிப்பட்ட கட்டிடங்களில் எப்படி உட்கார்ந்து கால்நடை மருத்துவர் பணி செய்வது என்று அப்பகுதி விவசாய பெருமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல்  பாழடைந்து கிடக்கும் கால்நடை கிளை மருத்துவ நிலையத்தில்
ஒரு சில சமூக விரோதிகள் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் மற்றும் மது குடிப்பதும் குடித்த  பாட்டில்கள்  அங்கே உடைத்து செல்வதாலும் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொது மக்களின் கால்களில் பதம் பார்க்கும் அவல நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் கால்நடை உயரதிகாரிகள் உடனே கால்நடை வளர்ப்பவர்களின் வாயில்லா ஜீவனான கால்நடைகளின்  நலனை கருத்தில் கொண்டு  மற்றொரு இடத்தில் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டிக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கால்நடை வளர்ப்பவர்களின் கோரிக்கை…
வாயில்லா ஜீவனான கால்நடைகளை பராமரிக்கும் விவசாயிகளின் கனவை நினைவாக்குவாரா  !?
தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது கடமைக்காக ஏதாவது நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாய்மொழி உத்தரவு போல் இல்லாமல் இந்தக் கோரிக்கையும் கடமையாக நினைத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். பொறுத்திருந்து பார்ப்போம் தேனி மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை!!

அதிமுக ஆட்சியில் சட்டசபையில் 110 இன் கீழ்உருட்டியது.

ரூ.1.60 கோடியில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.

ரூ.3.50 கோடியில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும்,

ரூ.3 கோடியில் 5 கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனைகளாகவும், ரூ.1.20 கோடியில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.

90.35 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.22.03 கோடியில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.

ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆட்டம்மை தடுப்பூசி மருந்து உற்பத்திப் பிரிவு ரூ.18.03 கோடியில் நல் உற்பத்தி நடைமுறைகள் (GMP) தரத்திற்கு தரம் உயர்த்தப்படும்.

தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறவும்,

உயர்கல்வித் துறை மூலம் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும்.

#TNAssembly 2020 மார்ச்#சட்டப்பேரவை_விதிஎண்110

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button