மாவட்டச் செய்திகள்

வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு கறி விருந்து வைத்து உல்லாசமாக வளம் வரும் தாராபுரம் நகர( R I) நில பெண் வருவாய் ஆய்வாளர்!நடவடிக்கை திருப்பூர் எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!?

வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு கறி விருந்து வைத்து உல்லாசமாக வளம் வரும் தாராபுரம் நகர பெண் வருவாய் ஆய்வாளர்!?


திருப்பூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தாராபுரம் உடுமலைப்பேட்டை என மூன்று வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டம் சார் ஆட்சியர்/துணை ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்குகிறது. , அதன் கீழ் பல வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. நிலம், சட்டம் ஒழுங்கு, தேர்தல், துயர்துடைப்பு பணிகள், நில பரிமாற்றங்கள், வரி வசூல், நில ஆக்கிரமிப்பு அகற்றம், வீட்டு மனை பட்டா வழங்கல், மற்றும் சாதி, வருவாய், இருப்பிடம்,விதவை, வாரிசு,சொத்து மதிப்பு போன்ற பல சான்றிதழ்கள் வழங்குதல் வட்டாட்சியரின் முக்கிய பணிகளாகும். இந்தப் பணிக்கு
தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் வட்ட நிர்வாகத்தில் வட்டாட்சியரோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

கறி விருந்து வைக்க ஹோட்டலுக்கு ஆர்டர் செய்யும்போது..
வருவாய் அலுவலர் தனலட்சுமி தாராபுரம்


அதுவும் முக்கியமாக தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் கீழ் இருக்கும் வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் மீது தொடர்ந்து ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில் தற்போது தாராபுரம் நகர நில வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் தனலட்சுமி தன் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு பொதுமக்களிடம் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தாராபுரத்தில் உள்ள நகர நில வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மீது பல லஞ்ச ஊழல் முறைகேடு புகார்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கொடுத்து வரும் நிலையில் இவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது.
இவர் அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை என்றும் பெரும்பாலான நாட்களில் நில வருவாய் அலுவலர் அலுவலகம் கூட்டிய நிலையில் தான் இவர் தொலைபேசிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டால் நான் கள ஆய்வில் இருக்கிறேன் என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விடுவாராம். மாதத்தில் பத்து நாட்கள் அலுவலகத்துக்கு வந்தாலே பெரிய விஷயமாக பொதுமக்கள் குற்றம் அப்படியேஅலுவலகத்திற்கு வந்தாலும் பொதுமக்கள் கொண்டுவரும் கோரிக்கை மனுக்களை உடனே பெற்றுக் கொள்வதில்லையாம்
இந்த நிலையில் பொதுமக்களை பல மணி நேரம் கால் கடுக்க காக்க நிற்க வைப்பதும் பொது மக்களை உட்காருங்கள் என்று பேச்சுக்கு கூட கூற மாட்டாராம் இந்த அம்மணி. நிற்க வைத்து தான் பேசுவாராம் இந்த அம்மணி! தனலட்சுமி அம்மணி தன்னுடைய லஞ்ச ஊழல் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு கறி விருந்து வைக்க அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு பணி செய்வது போல தன்னுடைய கைபேசியில் யாரோ ஒருவருக்கு தொடர்பு கொண்டு தாராபுரம் நல்லம்மா கிராமிய ஹோட்டலில் சென்று மட்டன் பிரியாணி காளான் சில்லி ஒயிட் ரைஸ் கோலா உருண்டை மட்டன் வகைகளை வாங்கி வருமாறு தனக்கு கீழ் வேலை செய்யும் உதவியாளருக்கு பேசி வருவதும் அப்போது நில வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க வந்த ஒரு நபரை கால் கடுக்க காக்க வைத்து விட்டு இவர் செய்யும் ஊழல் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் மேல் அதிகாரிக்கு கறி விருந்து கொடுக்க ஆர்டர் செய்வதிலேயே அரை மணி நேரம் கைபேசியில் பேசியதை அலுவலகத்தில் இருந்த ஒரு நபர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது! வஞ்சம் ஊழல் முறைகேடுகளில் மட்டுமே தன்னுடைய குறிக்கோளாக கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மீது திருப்பூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியார் துறை ரீதியான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button