கோலிவுட்

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை எச்சரித்த அஜித்!?முன் வைத்த காலை பின் வைக்காத அஜீத்!?

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை எச்சரித்த அஜித்!
பணத்திற்காக முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் அஜித்!
யாரிடமும் என்றுமே விலைபோகாத அஜித்!
தனக்கு பிடிக்கவில்லை என்று ஒருவரை மனதளவில் நினைத்துவிட்டால் அதன்பின் அவர் அஜித்திடம் நெருங்கவே முடியாது!

தனக்கென்று ஒரு பாணியை கடைபிடித்துக் கொண்டு தற்போது சினிமாவில் தன்னை உச்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

வலிமை திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட உதயநிதியை சந்திக்க அஜித்குமாரை அழைத்துள்ளார் தயாரிப்பாளர் போனிகபூர், இதை கேட்டு டென்ஷன் ஆன அஜித் நான் எதற்காக உதயநிதியை பார்க்க உங்களுடன் வர வேண்டும்,


நான் சம்பளம் வாங்கிக்கொண்டு படத்தில் நடித்துள்ளேன் அவ்வளவுதான்.படம் நன்றாக இருந்தால் மக்கள் வந்து பார்க்கட்டும், மற்றபடி உதயநிதியை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என அஜித் டென்ஷனாக என்னை இது போன்ற வற்றிற்கு வருமாறு தொந்தரவு செய்ய வேண்டாம் என போனி கபூரிடம் கறாராக தெரிவித்துள்ளார் அஜித்.

அன்புச் செழியன் மகள் சுஷ்மிதாவிற்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உறவினரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் மகன் சரணுக்கும் சென்னையில் திருமணம் நடந்துள்ளது.அந்தத் திருமணத்திற்கு தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் சினிமா துறையில் ரஜினி கமல் போன்ற மிகப் பெரிய நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக விஜய் அஜித் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று பரபரப்பாக பேசப்பட்டது.தமிழகம் முழுவதும் அஜித் நடித்த வலிமை படத்தை 180 கோடிக்கு வாங்கி வெளியிட்ட சினிமா பைனான்சியர் என்று அழைக்கப்படும் மதுரை அன்பு செழியன் மகள் திருமணத்திற்கு நடிகர் அஜித்குமார் ஏன் வரவில்லை!?அன்புச்செழியன் மகள் திருமணத்துக்கு நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க அஜீத் மேனேஜரை தொடர்பு கொண்டு அனுமதி கேட்டுள்ளார் அன்புசெழியன், ஆனால் அன்பு செழியனை சந்திக்க அஜித்குமார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வலிமை படம் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களிடம் தன் மகள் திருமணத்திற்கு அஜித்திடம் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் மற்றும் அவரை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்றும் அன்புச்செழியன் அப்போதும் அஜித் நான் நடித்த படத்தை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார் அவ்வளவுதான் நான் எதற்கு படம் வாங்கியவர்கள் திருமணத்திற்கு வர வேண்டும் என்று அஜித் ஒரே முடிவால் அன்புச்செழியன் மகள் திருமணம் அழைப்பிதழை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்றும் நேரில் சந்திக்கவே விருப்பமில்லை என்றும் அஜித் தனது மேலாளரிடம் தெரிவித்துவிட்டாராம்.
இதனால் அஜித் ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார் என்பதை தான் காட்டுகிறது ஏனென்றால் சில வருடங்கள் முன்பு பாலா இயக்க இருந்த கடவுள் திரைப்படத்திற்கு அஜீத் ஹீரோவாக நடிக்க பாலா அன்புச்செழியன் அவர்களிடம் பைனான்ஸ் வாங்கி அஜித்துக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார் . ஆனால் இயக்குனர் பாலாவுக்கும் அஜித்துக்கும் சில கருத்து வேறுபாட்டால் அஜித் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பின் இயக்குனர் பாலா அன்புச்செழியன் இருவரும் அஜித்தை நேரடியாக வரவழைத்து திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அஜித் மறுக்கவே அன்புச்செழியன் அஜித்திடம் தரக்குறைவாக மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதாகவும் அப்போது அன்புச்செழியன் மீது விமர்சனம் எழுந்தது .அதன்பின் அன்புச்செழியன் மிரட்டுவதாகவும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அஜித் சார்பில் புகார் கொடுத்ததாகவும் தகவல் இருந்து வந்தது.

கோப்பு வீடியோ காட்சி.

இயக்குனர் பாலா அன்புச்செழியன் அஜித் மூன்று பேருக்கும் நடந்த சம்பவத்தையெல்லாம் தற்போது அன்புச் செழியன் மறந்து இருக்கலாம் அன்புச்செழியன் .
ஆனால் அஜித் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவத்தை மறந்து கடந்து செல்ல மாட்டார் அஜீத் என்பதுதான் நிதர்சனம்.அஜித் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னணி இயக்குனர்கள் பரவலாக பேசி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button