வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அடியாட்களை வைத்து நில உரிமையாளர்களை கொலை மிரட்டல் விடும் சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் !
வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அடியாட்களை வைத்து நில உரிமையாளர்களை கொலை மிரட்டல் விடும் சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் !
சேலம் காவல் ஆணையர்
நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்!?
சேலம் மாவட்டம், குள்ளம்பட்டி, பள்ளக்காடு பகுதியில் கனகா (59) கணவர் பெயர் ராஜூ (லேட்)என்பவர் தனது மகன் ஜெயக்குமார் உடன் வசித்து வசித்து வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் ஜெயக்குமார் அவர்களுக்கு அயோத்தி பட்டினம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியில் குமரன் ரைஸ் மில் ஒன்று இருக்கிறது. அந்த ரைஸ் இல்லை தற்போது ஜெயக்குமார் கவனித்து வருகிறார்.
ஜெயக்குமாரின் தந்தை ராஜு உயிரோடு இருந்தபோது ஜெயக்குமாருக்கு 24/02/2019 ஆம் ஆண்டு சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த
(முத்து டிரான்ஸ் போர்ட் )( SKS கார் டீலர் ) உரிமையாளர் சங்கரன் மனைவி கவிதா தம்பதியினர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ரோஜா ஸ்ரீ என்பவருடன் ஜெயகுமாருக்கு திருமணம் நடந்தது. ஜெயக்குமாரின் தந்தை தங்களுடைய 10 ஏக்கர் நிலத்தை கடந்த 2017 ஆம் ஆண்டில் எச்டிஎப்சி வங்கியில் அடமானம் வைத்திருந்த தகவலை ஜெயக்குமார் மனைவி ரோஜா ஸ்ரீ இடம் ஏப்ரல் மாதம் தெரிவித்துள்ளார். உடனே ஜெயக்குமார் மனைவி அவரது அப்பா சங்கரன் மற்றும் அவரது அம்மா கவிதாவிடம் கூறியுள்ளார். நவம்பர் 2019 ஆம் ஆண்டு ஹெச்டிஎஃப்சி வங்கியில் உள்ள மேலாளரிடம் சென்ற ஜெயக்குமாரின் மனைவியின் அப்பா சங்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வட்டி இல்லாமல் 52 லட்சம் பணத்தை கட்டுவதாக கூறியுள்ளார் அதை ஏற்றுக் கொண்ட வங்கி மேலாளர் 52 லட்சம் பணத்தை கட்டினால் ஜெயக்குமாரின் தந்தை ராஜு அடமானம் வைத்துள்ள பத்திரத்தை கேன்சல் செய்து உங்களது பெயரில் பத்திரம் செய்து செய்ய பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் . அதன் பின்பு ஜெயக்குமாரின் அப்பா ராஜுவிடம் மனைவி ரோஜா ஶ்ரீ யின் தந்தை சங்கரன் மற்றும் அவரது மகள் ஜெயக்குமாரின் மனைவி ரோஜா ஸ்ரீ இருவரும் வங்கிக்கு பணம் கட்டி அந்த சொத்தை மீட்டு கொடுப்பதாக கூறியுள்ளார்கள். ஆனால் மனைவி ரோஜா ஸ்ரீ ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் . என்னவென்றால் வங்கியில் 52 லட்சம் பணம் கட்டி விட்ட பின்பு என்னுடைய அம்மா அப்பா பெயரில் அந்த 10 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுத்தால் அந்த சொத்தை மீண்டும் உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுவார் எனவும் தன்னுடைய கணவர் ஜெயக்குமார் இடம் கூறியுள்ளார். அதற்கு ஜெயக்குமாரின் தந்தை ஜெயக்குமார் இருவரும் சம்மதித்து ஜெயக்குமாரின் மனைவியின் அதாவது ஜெயக்குமார் மாமனார் சங்கரன் மற்றும் அவரது மாமியார் பெயரில் 10 ஏக்கர் நிலத்தை அயோத்தியாப் பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் (ஆவண எண் 3756/2019) 22-11-2019 ஆம் தேதியில் கனகா அவரது கணவர் ராஜு, மற்றும் மகன் ஜெயக்குமார் மனைவி ரோஜா ஷிரி மனைவி ஆகியோர் சேர்ந்து
ஜெயக்குமார் மாமனார் சங்கரன்-மற்றும் மாமியார் கவிதா இருவர் பெயரில்
கிரையம் செய்து கொடுத்துள்ளனர். ஜெயக்குமாரும் பிற்காலத்தில் பணத்தை திருப்பி கொடுத்து சொத்தை மீட்டு விடலாம் என நிலத்தை மனைவியின் தந்தை மற்றும் அம்மா பெயரில் கிரையம் செய்து பதிந்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த பத்திரத்தில் மொத்தம் 13 -1/2 ஏக்கர் நிலமும், வீடு மற்றும் 11 ஆயிரம் சதுர பரப்பிலான மாடர்ன் ரைஸ் மில்பெயரில் உள்ள நிலத்தின் பத்திரமும் அதனுடன் சேர்ந்து இருந்துள்ளது. அந்த நிலத்தையும் 2020 ஆண்டு ஜெயக்குமாரின் மனைவி ரோஜா ஸ்ரீ யின் தந்தை சங்கரன் தனது மருமகன் ஜெயக்குமாருக்கு தெரியாமல் சங்கரன் மற்றும் அவரது மனைவி பெயரில் சேல் ஆக்ரிமெண்ட் செய்து பதிவு செய்துள்ளது ஜெயக்குமாரின் தந்தை ராஜு வுக்கு தெரியவர தன்னுடைய மகன் ஜெயக்குமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.அதன் பின்பு ஜெயக்குமார் தன்னுடைய மனைவியிடம் இது சம்மந்த மாக கேட்டுள்ளார் .இதனால் மனைவிக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே பிரச்சனை வந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.அந்த நேரத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொரூனாவில் இறந்து விடுகிறார். அதன் பின்பு 2021 நவம்பர் மாதத்திலிருந்து ஜெயக்குமாரின் மனைவி ரோஜா ஸ்ரீ தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பின்பு ஜெயக்குமார் அவரது அம்மா இருவரும் சேர்ந்து 52 லட்சம் மற்றும் அதற்கு வட்டியும் சேர்த்து நாங்கள் கட்டி விடுகிறோம் சொத்தை திருப்பி எங்கள் பெயரில் எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஜெயக்குமாரின் மனைவியின் தந்தை சங்கரன் சொத்து மீண்டும் வேண்டுமென்றால் ஒன்றரை கோடி பணத்தை கொடுத்தால் மட்டுமே சொத்தை உங்கள் பெயரை எழுதிக் கொடுப்போம் என கூறியுள்ளனர் .
அதன் பின்பு ஜெயக்குமார் நீதிமன்றத்தை நாடி உள்ளார்.சேலம் சிட்டி சிவில்
நீதிமன்றத்தில் வழக்கு எண்(08610/2022, )
(05502/2022 ) இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதிலிருந்து இரண்டு வருடங்களாக ஜெயக்குமார் வீட்டிற்கும் ஜெயக்குமார் மனைவி ரோஜா ஸ்ரீ வருவதும் இல்லை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்வதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை ஜெயக்குமாருக்கும் தனது மனைவி ரோஜா ஶ்ரீ இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மட்டுமே இருந்து வருகிறது இரண்டு பேருக்கும் இடையே விவகாரத்து வழக்கும் இல்லை எனவும் ஜெயக்குமார் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில் தான்
கடந்த 2024 ஜனவரி மாதம் ஜெயக்குமாரின் மாமனார் மாமியார் மனைவி மூன்று பேரும் சேர்ந்து சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முத்துக்குமாரிடம்
10 ஏக்கர் நிலத்தை பணத்தை பெற்றுக் கொண்டு கிரையம் செய்து வைத்துள்ளனர். அதன் பின்பு சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் அந்த 10 ஏக்கர் நிலத்தில் வீடு கட்டி குடியிருக்கும் ஜெயக்குமார் மற்றும் அவரது அம்மா இருவரையும் காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். நீதிமன்றத்தில் தன்னுடைய மாமனார் மாமியார் மீது வழக்கு போட்டு நிலுவையில் இருக்கும்போது இந்த இடத்தை எப்படி நீங்கள் வாங்கினீர்கள் என சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துக்குமாரிடம் ஜெயக்குமாரன் கேட்டுள்ளார். அதற்கு உங்கள் மாமனார் பெயரில் சொத்து இருந்ததால் நான் வாங்கியுள்ளேன் என ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். அதற்கு ஜெயக்குமார் அவரது அம்மா இரண்டு பேரும் வீட்டை காலி செய்ய மாட்டோம் எனக் கூறியுள்ளனர். உடனே சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துக்குமார் சுவாதினத்தை எடுக்க முயற்சி செய்து
10 க்கும் மேற்ப்பட்ட கார்களில் 50க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துக்குமாரின் மேலாளர் அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் பதிவு செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க் இணைப்புகளை அனைத்தையும் துண்டித்து செயல்படாமல் செய்துள்ளனர். ஹார்ட் டிஸ்கையும் அடியாட்கள் எடுத்து வைத்துக் கொண்டுள்ளனர்.உடனே ஜெயக்குமார் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல்துறையினர் வந்து
டாக்டர் முத்துக்குமார் அனுப்பிவிட்ட ஆட்யாட்களை விரட்டிவிட்டு டாக்டர் முத்துக்குமாரிடம் உங்கள் நிலம் என்றால் நீதி மன்றம் மூலம் அனுமதி பெற்று வாருங்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர். அதன் பின்பு ஜெயக்குமார் தனது உயிருக்கு டாக்டர் முத்துக்குமாரின் தூண்டுதலின் பேரில் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நானும் என் தாயும் தனியாக இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் ஆகவே டாக்டர் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாநகர காவல் துறை கமிஷனரிடம் ஜெயக்குமார் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில்
டாக்டர் முத்துக்குமார் மீது கொலை மிரட்டல் போன்ற பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு .அடியாட்கள் 5 பேர் கைது செய்யப் பட்டனர்.
ஆனால் இதுவரை சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துக் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கு முன்பு முன் ஜாமின் பெற்றுள்ளார்.
டாக்டர் முத்துக் குமார் தற்போது சென்னையில் இருப்பதாகவும் அது மட்டுமில்லாமல் சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துக்குமாருக்கும் அதிமுக கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
சேலம் சிசு மருத்துவமனையில் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகளை சாலையில் உள்ள மாநகராட்சியின் குப்பை தொட்டியில்
கொட்டி விட்டு செல்வதாக சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்ததின் பேரில் சேலம் மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் வந்து சேலம் சிசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது
2019 ஜூன் மாதம் ஒரு லட்ச ரூபாய் அவதாரம் விதித்து அந்தப் பணத்தை நிர்வாகம் கட்டியதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலங்களை வாங்கி அந்த நிலத்தில் உள்ள நபர்களை அடியாட்களை வைத்து மிரட்டி நிலங்களை அபகரிக்க முயற்சி செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.