சினிமா

வாக்களிப்பவர்கள் 50 சதவீதம் பேர் 70 வயதை தாண்டியவர்கள்!தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கோரிக்கை!

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும்!
தேர்தல் அதிகாரிகளுக்கு பட அதிபர் கேயார் கோரிக்கை!!

K.R.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 30 ம் தேதி அடையாறில் உள்ள அன்னை சத்யா (ஸ்டுடியோ) கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியில் களம் இறங்கி இருக்கும் நிலையில் தேர்தலுக்கான அனைத்து பணிகளை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நடக்க இருக்கும் சத்யா ஸ்டுடியோவில் போதுமான இடவசதி இல்லை என்றும் கடந்த தேர்தலும் அங்குதான் நடைபெற்றது. அப்போது வாக்களிக்க அந்த தயாரிப்பாளர்களே வாகனங்களை கூட அங்கு நிறுத்த முடியவில்லை என்றும் அனைத்து வாகனங்களும் நெருக்கடியில் சிக்கி அவதிப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற “சின்ன தம்பி” உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே பி பிலிம்ஸ் பாலு, உடல்நிலை பாதிக்கப்பட்டு தேர்தல் முடிந்த சில தினங்களில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று என கண்டறியப்பட்டு உயிரையே இழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதும் அதே போல கொரோனா மீண்டும் அச்சுறுத்தி வரும் நிலையில் அதைவிட கொடுமையான வெயில் காலமாக இருக்கிறது. இந்த முறை 1406 தயாரிப்பாளர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர். குறைந்தது 1200 பேர் தேர்தலில் வாக்களிக்க வருவார்கள். அத்தனை பேரும் கார்களில் வந்து இறங்குவதற்கும், நிறுத்துவதற்குமான இட வசதி அங்கு இல்லை. அத்துடன் பிரபல நடிகர்களும் இயக்குனர்களும் வாக்களிக்க வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஏற்ற சூழலும் அங்கு இல்லை. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வருவதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே அடையாறு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் போதுமான இட வசதி இருக்கிறது. எவ்வளவு கார்களை வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். சினிமாவுக்கு தொடர்புடைய ஒரு இடம் என்பதால் தொடர்ந்து எல்லாத் தேர்தல்களையும் அங்கேயே நடத்திக் கொள்ளலாம். தமிழக அரசும் திரைப்படத்துறைக்கு ஆதரவாக இருப்பதால் அனுமதி பெறுவதும் கஷ்டமாக இருக்காது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் அதிகாரிகள் எல்லா சூழலையும் கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்தும் இடத்தை திரைப்பட கல்லூரி வளாகத்திற்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் அது மட்டுமல்லாமல் சமூக இடைவெளியுடன் வாக்களிக்கலாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வரும் வாக்காளர்களில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள் என்பதையும், ஏராளமான பெண்களும் வாக்களிக்க வருவார்கள் என்பதையும் தேர்தலை நடத்தும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்கனவே இந்த விஷயத்தை சங்க நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்கள் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு தயாரிப்பாளரும் தனிநபர் அல்ல. அவரைச் சுற்றி 100 குடும்பங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? என்று அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(உறுப்பினர் எண்:0006
முன்னாள் தலைவர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
நிறுவனர் மற்றும் அறங்காவலர்
தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button