வாச்சாரு பாரு ஆப்பு!!தடைசெய்யப்பட்ட பொருள்களை சட்ட விரோதமாக விற்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்.
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஓபன் டாக் எச்சரிக்கை!

தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவலர்கள் முதல் காவல் கண்காணிப்பாளர் வரை நடுக்கத்தில்!
2010ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கார்க் ips
சில மாதங்கள் முன்பு
தெற்கு மண்டல ஐஜியாக பொறுப்பேற்றார்.

அஸ்ரா கார்க் ஐபிஎஸ்
asra garg, a 2004 batch ips officer who had been on central deputation since 2016, has returned to tamil nadu and has been posted as the south zone inspector-general of police (igp).
தென் மண்டல காவல் எல்லைக்குட்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு( தூத்துக்குடி திருநெல்வேலி நாகர்கோவில் கன்னியாகுமரி திண்டுக்கல் தேனி சிவகங்கை ராமநாடு )மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஓபன் மைக்கில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள், லாட்டரி உள்ளிட்டவைகளில் லஞ்சம் பெறுவது, முறைகேடு உள்ளிட்ட தவறுகளில் ஈடுபடும் காவலர்கள் மீது கவனத்துக்கு வரும் குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்நிலையம் காவலர்களுக்குபணியிட மாற்றம், பணியிடை நீக்கம், குற்ற நடவடிக்கை என 3 வகையான நடவடிக்கை எடுக்கப்படும்
ஓபன் மைக்கில் பேசிய தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் !
தடைசெய்யப்பட்ட லாட்டரி மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்கும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக காவல் நிலையங்கள் மற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை செயல்படுவதாக என் கவனத்திற்கு புகார் வந்தால் உங்களுக்கு தெரியும் குறைந்த பட்சம் தண்டனை பணியிட மாற்றம் ,சஸ்பெண்ட் தேவைப் பட்டால் உச்சபட்சமாக கிரிமினல் வழக்குகூட அவர்கள் மீது பதியப்படும்.
ரிவெஞ்ச் ( பழிவாங்கும்) வகையில் நடக்கும் கொலைகாரர்கள் தொடர்பாக மேல் இடத்தில் இருந்து தகவல் வரும். தகவல் கிடைத்து அதையும் மீறு ரிவெஞ்ச் கொலைகள் நடைபெற்றால் அதற்கு சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் முழு பொறுப்பேற்க வேண்டும்.
தேவைப் பட்டால் இது சம்பந்தமாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் தயங்கமாட்டேன் என்று அசுரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவல் நிலையங்களில் பணி செய்யும் காவலர்கள் 60 சதவீதம் பேர் நேர்மையாக தங்கள் பணியை செய்துவருவதாகவும் 10 சதவீதத்தில் இருந்து 15சதவீதம் வரை இது போல் சட்ட விரோதமாக செயல்படுபவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் ஆனால் இதற்கு முன்பு யார் எப்படி இருந்தார்கள் என்பதைப் பற்றி தற்போது விமர்சிக்க விரும்பவில்லை என்றும் இனிமேல் யாராவது தடைசெய்யப்பட்ட லாட்டரி மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார்
பழிவாங்கும் நோக்கில் நடைபெறும் கொலைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஓபன் டாக் எச்சரிக்கையை கண்டு தென்மண்டல மாவட்ட காவல் நிலையங்களில் பணியில் இருக்கும் ஊழல் காவலர்கள் நடுக்கத்தில் உதரலிலும் இருப்பதாக தகவல் !?வந்த்துள்ளது.