மாவட்டச் செய்திகள்

வாடிப்பட்டி அய்யங்கோட்டை ஊராட்சியில் பலகோடி ரூபாய் ஊழல் முறைகேடு ! அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட தலைவர் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அய்யங்கோட்டை ஊராட்சியில் பலகோடி ஊழல் முறைகேடு ! அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆஜராக நீதிமன்ற உத்தரவு!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றியம் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 37 ஊராட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் அய்யங்கோட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிமன்றத் தலைவராக நாகலட்சுமி (கணவர் பெயர் மணி என்ற கருப்பன்) இருக்கிறார்.அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவராக முருகேசன் (வயது 75) என்பவர் இருக்கிறார். ஐயங்கோட்டை ஊராட்சி மன்ற செயலாளராக தெய்வேந்திரன் பணியாற்றி வருகிறார்.
அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பாண்டியன் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் மூன்று பேரும் அய்யங்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருக்கும் முருகேசன் அவர்களுக்கு அரசு வழங்கியுள்ள DSC card (digital signature certif certification card) இன் மின்னஞ்சல் முகவரி மற்றும் OTP யை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன் அனுமதியில்லாமல் முறைகேடாக பயன்படுத்தி 2020 முதல் 2022 வரை ஊராட்சியில் பல கோடி ரூபாய்வரை அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து கையாடல் மோசடி செய்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்கள் . அதன் பின்பு அந்த DSC card காலாவதி ஆனவுடன் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அய்யங்கோட்டை ஊராட்சி துணைத் தலைவரிடம் 13/06/2022 அன்று கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அய்யங்கோட்டை ஊராட்சி மூலம் வழங்கும் குடிநீர் இணைப்பு ,வீடு கட்டுவதற்கு கட்டிட வரைபடம் அனுமதி,DTCP சுமதி வீட்டு வரி ரசீது போடுவது போன்ற அனைத்திலும் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன் ஊராட்சி மன்ற தலைவி நாகலட்சுமி இடம் கேட்டதற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விட்டதாகவும் அதனால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஆகவே கொலை மிரட்டல் விடுத்த ஐயங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவியின் நாகலட்சுமி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் அலங்காநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் ஆகிய மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க 13/01/2023 அன்று வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஐயங்கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் படி 28/01/2023 அன்று விசாரணைக்காக முருகேசனை வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர் .

விசாரணையில் என்ன நடந்தது என்பதை ஐயங்கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன் காவல் நிலையத்தில் கூறியுள்ளார் ஆனால் காவல் நிலையத்தில் துணைத் தலைவர் முருகேசன் கூறியதை எதையும் பதிவு செய்யாமல் அவர் கொடுத்த புகாரின் மீது வாடிப்பட்டி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அனுப்பி உள்ளனர்.
ஊழல் முறைகேடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காரணத்தைக் காட்டி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் அலங்காநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய மூன்று பேர் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 17/02/2023 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுரை மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார். அதன் பின்னும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதன் மீது எடுக்கவில்லை . அதன் பின்பு ஊழல் முறைகேடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என 07/3/2023 அன்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நாலு பேர் மீது 07/09/2023 அன்று வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன் பெயரில் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நான்கு பேரும் மீதும் (குற்ற எண் 536 /2023 ) வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் 04/10 2023 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது என
ஐயங்கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button