மாவட்டச் செய்திகள்

வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கொடுத்த புகார்! அதிரடியாக ஆய்வுக்கு வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் ! நடந்தது என்னா!?

ஆய்வுக்கு வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் !
பாராட்டுடன் விமர்சனத்தையும் வைத்த வாடிப்பட்டி பொதுமக்கள்!
நடந்தது என்ன!?

மதுரை மாவட்டம் ஆட்சியர் சங்கீதா

மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி பேரூராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் சோழவந்தான் அதிமுக சட்ட மன்ற உறுப் பினராக இருந்த மாணிக்கம் (தற்போது பிஜேபி கட்சியில் ) ஒப்பந்தம் எடுத்த 2 கோடி ரூபாய் மதிப் பீட்டில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு கட்டி முடிக்கப் பட்ட வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழிக் கழிவுகளை திடக்கழிவு கிடங்கில் கொட்டப்பட்டு இருந்தது.

அதிலும் திடக்கழிவு கிடங்கிற்கு வெளியே சாலை முழுவதும் கழிவு குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது
டி.வாடிப்பட்டி பேருராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுவதால் மலைபோல் சேர்ந்து இருந்தது. இந்நிலையில் 05/06/23 அன்று திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மர்மநபர்கள்
குப்பை கிடங்கில் தீ வைத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனம் உடனடியாக வரவழைக்கப்பட்டது.

ஆனால் சாலை முழுவதும் கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீ பற்றி எரிந்ததால் தீயணைப்பு துறையினர் ஒரு கிலோமீட்டருக்கு முன்பு நின்று தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குகுள் கொண்டு வந்தனர்.
இதனால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் கண் எரிச்சல், மூச்சுத் தினறல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் சுமார் 2 கோடி மதிப்பிலான ,மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழிவு மேலாண்மைக்கிடங்கை தீ வைத்து நாசமாக்கிய
மர்மநபர்கள் மீது உடனடியாக
மதுரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக

வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்

பேரூராட்சி அலுவலகம் முன்பு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஏழு கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷன் நேரில் வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அசம்பாவிதம் நடக்காமல் காவல்துறையினர் பாதுகாப்புக்கு இருந்தனர். அப்போது கோரிக்கை மீது மறுநாள் அனைவரும் பேசி முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பாதாக கூறிய பின்பு தர்ணாவை கை விட்டு அனைவரும் கலைந்துச் சென்றனர்.
அதன் பின்பு மறுநாள் காலை 10 மணி அளவில் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வந்தார் அதன் பின்பு வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பேரூராட்சி நிர்வாக செயலாளர் மற்றும் பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் அனைவரும் உட்கார்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தான் தீ வைத்ததாக குற்றச்சாட்டை வைத்தனர். அதன் பின்பு இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்தது இதனால் சிறிது நேரம் சலசலப்பு அதன் பின்பு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் தவறு செய்தது யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக பேசி முடிக்கப்பட்டது.
அதன்பின்பு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்தப் புகாரில் வாடிப்பட்டியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தான் தீ வைத்தார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கழிவு குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்கு உள்ளே கொட்டாமல் வெளியே சாலை முழுவதும் கொட்டி செல்கின்றனர் என்றும் இதனால் சாலை முழுவதும் கழிவு குப்பையால் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் .

அதேபோல் நபார்ட் வங்கி மூலம் 2023 2024 திட்டத்தின் கீழ் சில நாட்களுக்கு முன்பு போடப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான சாலை தரமற்றதாக இருப்பதாகவும் அதையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அது மட்டுமில்லாமல் கழிவு நீர் கால்வாய்கள் திட்டமிடாமல் கட்டியிருப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதாகவும் அனைத்தையும் நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வருவதாக கூறியுள்ளார். அதன் பின்பு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு செல்கிறேன் என்று உறுதிமொழி அளித்துள்ளார். அதன் பின்பு பேரூராட்சிக்கு மட்டும் தகவல் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் கழிவு திட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கு கிடங்கிற்கு வெளியே சாலையில் கொட்டப்பட்டிருந்த கழிவு குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் அதிரிடியாக அகற்றி சுத்தம் செய்து வைத்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் 07/06/ 2023 அன்று காலை 10 மணிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார் . அதன் பின்பு அங்கிருந்து பேரூராட்சி அதிகாரிகளை கழிவு குப்பை கொட்டப்படும் திடக் கழிவு மேலாண்மை கிடங்கிற்கு சென்றுள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியருடன் அதிகாரிகளை மட்டும் அழைத்து சென்றார். பத்திரிக்கை நிருபர்கள் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று அனுமதிக்கவில்லை . அதில் என்ன ரகசியம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை அதிமுக கட்சியினர் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் என்று பத்திரிகைகளில் செய்து வந்தால் ஆட்சியருக்கும் அமைச்சருக்கும் மோதல் போக்கு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க வில்லையோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இவன் பின்னர் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் உட்கார்ந்து ஆவணங்களை சரி பார்த்து விட்டு செல்லும் வழியில் மின் மயானம் பணிகளை ஆய்வு மேற்கொண்டு விட்டு அப்படியே மதுரைக்கு சென்று விட்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுரை மாவட்ட பெண் ஆட்சியர் முதல் முதலில் வாடிப்பட்டி பகுதிக்கு ஆய்வுக்கு மேற்கொண்ட போது பொதுமக்களை சந்தித்து ஏதாவது குறைகள் இருக்கிறதா என்று கேட்காமல் தவிர்த்தது எதற்கு என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.


குலசேகரன் கோட்டையில் போடப்பட்டிருந்த தார்ச் சாலையை பார்வையிட்டார் அப்போது எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சாலைதரமாக இல்லாமல் இருக்கிறது என்பதை காட்டினார்கள்.

உடனே மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை அழைத்து இந்த சாலைக்கு எதற்கு ஒரு கோடி ரூபாய் செலவு இவ்வளவு மோசமாக இருக்கிறது சாலை இவ்வளவு மோசமாக இருப்பதால் வாகனங்கள் செல்லும் போது பதிந்திருக்கும் என்றும் இந்த சாலை தரமாக இல்லை என்றும் தரமற்றதாக இருக்கிறது என்றும் அப்போதே அதிகாரிகளிடம் (disqualified) என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிய மாவட்ட ஆட்சியர் வாடிப்பட்டி பேரூராட்சியில் நடக்கும் திட்டப் பணிகளான கழிவுநீர் கால்வாய் மற்றும் மின் மயானம் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆனால் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு அடிப்படை வசதியான கழிவு நீர் கால்வாய்கள் சேதமடைந்து கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் அருகில் உள்ள நிலங்களில் சென்று அப்பகுதி முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறது அதேபோல் வாடிப்பட்டி தாதம்பட்டி கண்மாயில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாதம்பட்டி புது கண்மாயில் குப்பை கழிவில் கொட்டப்பட்டு சுகாதாரம் மற்றும் நிலையில் இருக்கும் அவல நிலை

இதுவரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்தனர். ஆனால் முக்கிய குற்றச்சாட்டு வைத்த திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் பார்வையிட சென்ற போது எந்த பத்திரிக்கை நிருபர்களும் வரவேண்டாம் என்று கூறிவிட்டு தனியாக ஆய்வு மேற்கொண்டதாகவும் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்பு வெளிப் படையாக ஆய்வு மேற் கொள்ளாததற்கு உள் நோக்கம் இருப்பதாக தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நலத் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள செல்லும் போது நாள், நேரம் ,இடம் குறிப்பிட்டு pro மூலம் தெரிவிப் பார்கள். ஆனால் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா அவர்கள் முதல்முறையாக வாடிப்பட்டி பேரூராட்சிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளார் . ஆகையால் வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளும் இடங்களில் பொதுமக்களிடம் விசாரிக்க வேண்டும். ஏனென்றால் தற்போது தமிழக முதல்வரே மாவட்டம்தோறும் ஆய்வு மேற்கொள்ளும் போது அங்கு இருக்கும் பொது மக்களிடம் உங்கள் ஊரில் குறைகள் ஏதும் இருக்கிறதா என்று நேரடியாக குறைகளை கேட்டு அந்த இடத்திலேயே அதிகாரிகளை அழைத்து அந்த குறைகளை என்ன என்று பாருங்கள் உத்தரவிட்டு மறுநாளே அந்த குறைகளை அதிகாரிகள் தீர்த்து வைத்து தற்போது பாராட்டுகளை பெற்று வரும் தமிழக முதல்வர் வழியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் நடக்க வேண்டும் . ஆட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல அதிகாரிகளின் உதவி அவசியம் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ள முதல்வர் மாவட்ட ஆட்சியாளர்கள் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் புகார்கள் எழுந்த நிலையில் தான் புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர். ஆகவே தற்போதுள்ள திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் இருக்கும் நற்பெயரை மாவட்ட ஆட்சி நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும் .
ஆகவே மதுரை மாவட்ட ஆட்சியாளரின் மக்கள் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றுவதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button