விசாரணை என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக மதுரை மாவட்ட சமயநல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்தி மற்றும் மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் /62 (தகப்பனார் பெயர் பஞ்சவர்ணம்.)
வீரய்யா தெரு
ஊர் மெச்சிக்குளம் . என்பவர் 16 2022 அன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் 1989 ஆம் ஆண்டு எங்கள் அப்பா பாஞ்சவர்ணம் பெயரில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டி இருந்து வருகிறோம்.2008 ஆம் ஆண்டு எங்கள் உடன் பிறந்த அக்கா அவர்கள் கடன் பிரச்சனையில் இருந்தால் நாங்கள் கூடி இருக்கும் வீட்டை அடமானம் வைத்து அக்கா வாங்கிய கடன் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் வட்டியை கட்டினோம். அப்பொழுது இந்த வீட்டில் நான் பங்கு கேட்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்
14 வருடங்கள் கழித்து கடந்த 6/05/22 அன்று சமயநல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்தி அவர்கள் தொலை பேசியில் தொடர்புக் கொண்டு உங்கள் மீது உங்கள் அண்ணன் மீதும் உங்களுடன் பிறந்த அக்கா அருண்மொழி புகார் கொடுத்துள்ளார் என்றும் ஆகையால் தாங்கள் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறினார்கள்.
உடனே விசாரணைக்கு சென்றோம் அப்போது சமயநல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்தி முன்னிலையில் விசாரணை நடந்தது அப்போது நானும் என்னுடைய அண்ணனும் எனது அக்காவும் சமரசமாக பேசி முடித்து விட்டோம்.
அதன்பின்பு சில நாட்கள் கழித்து பகத்சிங் நிவேதா பாலமுருகன் ஆட்டோ டிரைவர் இவர்கள் மூன்று பேரும் என் அக்கா மற்றும் அவரது கணவர் இருவரிடம் 4லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று உங்கள் அண்ணன் இருவர் மீது சமய நல்லூர் காவல் நிலையத்தில் மறுபடியும் புகார் கொடுங்கள் நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று அவர்களை தூண்டி விட்டு புகார் கொடுக்க வைத்துள்ளார்கள் என்றும் அந்த புகாரின் பேரில் மீண்டும் சமய நல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்தி அவர்கள் எங்களை விசாரணைக்கு அழைத்தார்கள். உடனே விசாரணைக்கு சென்றோம்.அப்போது காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்தி அவர்கள் மற்றும் என் அக்காவுடன் வந்திருந்த மூன்று நபர்கள் சேர்ந்து எங்களை பார்த்து ஒழுங்கா கேட்கும் பணத்தை கொடுத்து விடுங்கள் இல்லை என்றால் பிரச்சனை ஆகி விடும் என்று எங்கள் இருவரையும் மிரட்டினார்கள். நாங்கள் காவல் ஆய்வாளர் ஆனந்தி அவர்களிடம் எங்களை மிரட்டுகிறார்கள் நீங்கள் பேசமாமல் இருக்கிறீர்கள் என்று கூறியும் அதற்கு காவல் ஆய்வாளர் உங்கள் அக்கா கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு பிரச்சனையை முடியுங்கள் என்று அவர்களுக்கு சாதகமாக பேசியதால் எங்களை பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வருவதால் சமய நல்லூர் காவல் ஆய்வாளர் நியாயமான முறையில் விசாரணை செய்யாததால் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எங்கள் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டியும். அதே போல் கட்டப் பஞ்சாயத்து செய்யும் காவல் ஆய்வாளர் ஆனந்தி மீதும் மற்றும் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டிய மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புக்கர் கொடுத்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் அவர்கள் இந்த புகார் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் ஒரு சில தினங்களில் இந்த புகார் சம்பந்தமாக அவர் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
குடும்ப சொத்துப் பிரச்சனை என்று காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை அழைத்து அவர்களை நீதிமன்றத்தை செல்லும்பபடி பலமுறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியும் அவற்றையெல்லாம் செவிசாய்க்காமல் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக வரும் காவல் நிலையங்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற புகார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வராமல் தடுக்க முடியும்.என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!!