விஜய்சேதுபதி திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்!
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல 2 காதல் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இதுதவிர விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகில் என்ற படமும் திரைக்கு வரவுள்ள நிலையில்
விஜய் சேதுபதி, ரெஜினா மற்றும் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள முகில் படத்தை வரும் அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட விஜய் சேதுபதி முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது இதில் புதிதாக ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.
அதாவது விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகில் படத்தின் மொத்த நேரமே வெறும் 62 நிமிடங்கள் மட்டும் அதாவது ஒரு மணி நேரம் மட்டுமே !
எனவே இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டால்
ரசிகர்கள் இந்த படத்திற்கு எந்த அளவுக்கு ஆதரவு தருவார்கள் என்று தெரியவில்லை…
விஜய் சேதுபதி நடித்த திரைபடங்கள் போல இந்த படத்திற்கு வியாபாரரீதியாக பார்த்தால் முந்தைய படத்தின் வசூலில் இந்த படம் 20% வசூலாகும் என்பதே நிதர்சனம்.
மற்றும் படத்திற்கு இடைவேளையே விடமுடியாது சூழ்நிலை உருவாகும்.
அப்படியே இடைவேளை விட வேண்டியது இருந்தால் அரை மணி நேரத்தில் இடைவேளை விட வேண்டும் அதற்கு சாத்தியமா என்பது பெரிய கேள்விக்குறி
அப்படி அரை மணி நேரத்திற்கு இடைவேளை விட்டாலும் நேரம் மாறுபடுவது உள்ளிட்ட பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் .
மொத்தத்தில் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட மறுத்து விட்டார்களாம்.
இதனால் விஜய் சேதுபதி முகில் படத்தை எப்படி வெளியிடுவது என யோசித்து வருகிறாராம். இதனால் விஜய்சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா நடித்த இந்த படம் OTT தளத்தில் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.