காவல் செய்திகள்

விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகளின் அதிர்ச்சி சம்பவம்! சென்னை காவல் துறையை கதிகலங்க வைத்த சம்பவம்!

மூன்று சிறுமிகளுடன் 11 இளைஞர்கள் உல்லாசமாக இருந்ததாக கைது !

அதிர்ச்சி பின்னணி!
சென்னை தாம்பரம் தாங்கல் தெருவில் வசிக்கும் 17 வயது சிறுமியின் தோழியின் வீடு புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் இருக்கிறது.
தனது தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று தங்கி வருவது வழக்கம்.
இதற்கிடையே இரு நாட்களுக்கு முன்பு வெளியில் சென்று இருந்த இரண்டு சிறுமிகளும் நள்ளிரவில் 2 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதில் தாம்பரத்தில் இருந்து வந்த சிறுமியின் தோழியின் உறவினர் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியதையடுத்து அந்த 17 வயது சிறுமியின் தோழியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், “தாம்பரம் பகுதியில் வசித்து வரும் உறவினர் பெண்ணுக்கு 17 வயதாகிறது. அந்த சிறுமி கடந்த 3 நாட்களாகவே எங்கள் வீட்டில் தான் தங்கியிருக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த சிறுமி வீட்டிற்கு நள்ளிரவில் வந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் ஏன் நள்ளிரவில் வந்துள்ளீர்கள் எங்கு சென்றீர்கள் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு அப்போது அந்த சிறுமி தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பி வரத் தாமதமானதாகத் தெரிவித்தார்கள் என்றும் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த நபர் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை செய்தபோது
.இந்த சிறுமிகளுடன் மொத்தம் 11 பேருக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இருப்பினும், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான அறிகுறி உடம்பில் எதுவும் இல்லை. அதேநேரம், சிறுமி பல மாதங்களாக பாலியல் உறவில் ஈடுபட்டு வருவதை மருத்துவர் சோதனைக்கு பின்பு தெரிய வந்தது.
இதனால் குழப்பமடைந்த காவல்துறையினர் மீண்டும் விசாரணையே அந்த சிறுமியிடமே தொடங்கினர். இது குறித்து முதலில் தயங்கி நிலையிலிருந்த அந்த சிறுமி அதன் பிறகு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கூறிவிட்டார். , “நான் புளியந்தோப்பில் உள்ள உறவினர் வீட்டில் தோழியிடம் இருக்கிறேன். நான், எனது உறவினரின் 17 வயது மகள், எனது 18 வயது தோழி என மூவரும் சேர்ந்து இந்தப் பகுதியில் இருக்கும் 20 வயதிற்குட்பட்ட நண்பர்களுக்கு போன் செய்து அழைப்போம்.
அவர்களுடன் தான் உல்லாசமாக உடலுறவில் ஈடுபடுவோம்.
கடந்த சில நாட்களாகவும் தொடர்ந்து இதுபோல உல்லாசமாக இருந்து வருகிறோம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் செல்போனை ஆய்வு செய்ததில் 16- 22 வயதான 11 இளைஞர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.அதில் 6 பேர் 18 வயதுக்கு குறைவான மைனர் சிறுவர்கள் ஆவர். செல்போனில் இருக்கும் தகவல்களை வைத்து காவல்துறையினர் விசாரித்த நிலையில் உடலுறவில் ஈடுபட்ட 11 இளைஞர்களையும் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை செய்தது அவர்களும் சிறுமிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அந்த 11 இளைஞர்கள் மீதும் போக்சோ வழக்கு பதிவு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

சிறுமிகள் ஒப்புதலுடன் உடலுறவு கொண்டிருந்தாலும் அவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு Age Of Consent எனப்படும் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வமா ஒப்புதல் வயதே காரணமாகும். அதாவது பாலியல் உறவுக்கு இந்த வயதைக் கடந்தவர்கள் சம்மதிப்பது மட்டுமே சட்டப்பூர்வமாகக் கருதப்படும். இந்தியாவில் இது 18ஆக உள்ளது. எனவே, 18 வயது சிறுமிகள் ஒப்புதலுடன் உடலுறவு கொண்டாலும் அது பலாத்காரமாகவே (statutory rape) கருதப்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வயதில் இந்த சிறுமிகள் சிறுவர்களுடன் சட்டவிரோதமாக உடலுறவில் ஈடுபட்டு வந்த செயல்களை தங்களது உறவினர்கள் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் காலப்போக்கில் இந்த சிறுமிகள் மிகப்பெரிய விபச்சார தொழிலில் ஈடுபட வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இது போன்ற சம்பவங்கள் சென்னையில் வேறு எங்கும் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சென்னை காவல்துறைக்கு இது போன்ற சம்பவங்கள் நடப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை கண்டும் காணாமல் இருந்துள்ளனரா!? என்பதை சென்னை மாநகர காவல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆணையர் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button