விளம்பரத்திற்காகபள்ளி மாணவ மாணவிகளை வைத்து நடத்தப்படும் சுகாதார விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கண்துடைப்பு நாடகமா!? பள்ளி வளாகம் முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் ! நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட ஆட்சியர்!?
கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் சுகாதார விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் தேனி மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இடையே சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அது ஒரு விளம்பரத்துக்கு மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கப்படுகிறது என்றும் உண்மை நிலவரம் அது இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதற்கு ஏற்றார் போல்
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட முத்துதேவன்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும்நிலையில் தொடர் கனமழையால் பள்ளி வளாகம் முழுவதும் மழைத்தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்பதாலும், கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நின்று சுகாதாரம் மற்ற நிளையில் இருப்பதால் கொசுக்கள் அதிகமாக இருப்பதாகவும் இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
, இது சம்பந்தமாக
பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை புகார் செய்தும் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற எந்தவித நடவடிக்கை எடுக்காமல்
இருந்து வருவதாகவும்,
அது மட்டும் இல்லாமல் மாணவர்களின் நலன் காக்க வேண்டிய தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலரோ, தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரோ, தேனி மாவட்ட (செகண்டரி) கல்வி அலுவலரோ, தேனி மாவட்ட (பிரைமரி) கல்வி அலுவலரோ, தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநரோ, கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும், அப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகுந்த உடல் ரீதியாக பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகி வருவதாகவும், இதனால்
இன்று, தேனி-கம்பம் நெடுஞ்சாலையில், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
, தகவலறிந்த வீரபாண்டி போலீஸார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, சமரசப் பேச்சுவார்ததை செய்து, மாணவ, மாணவியர்களின் கோரிக்கைகளை வெகுவிரைவில் நிறைவேற்றி தர நடவடிககை எடுப்பதாக கூறியதால், கலைந்து சென்றதாகவும்,
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இருந்தோ முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்தோ சாலை மறியல் ஈடுபட்ட இடத்திற்கு யாரும் வரவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.
பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகளின் நலனை காப்பதாக, பெயரளவில் செயல்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் மீது, தமிழக அரசும், தேனி மாவட்ட நிர்வாகமும், மாணவ, மாணவியர்களின் நலனை கருத்திற்கொண்டும், கவனத்திற்கொண்டும், முறையான, விரைவான நடவடிக்கை மேற்கொண்டிட பள்ளி மாணவ மாணவிகளை வைத்து சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்தும் தேனி மாவட்ட ஆட்சியாளர் அவர்கள்
முன்வரவேண்டும் என்பது அப்பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், அப்பகுதிவாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.