விவாசய விளை நிலத்தில் இரவோடு இரவாக சட்ட விரோதமாக சுமார் 500 டிப்பர் லாரிகள் மண் கடத்தல்! லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருந்த சீர்காழி வட்டாட்சியர் !! அச்சத்தில் பொது மக்கள்! நடவடிக்கை எடுப்பாரா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!?
விவசாய விளை நிலத்தில் மண் எடுப்பதாக புகார் கொடுத்த பொது மக்களிடம் பெரியிடத்துச் சமாச்சாரம் என்று லஞ்சம் பெற்றுக் கொண்டு ஓதுங்கிக் கொண்ட சீர்காழி வட்டாட்சியர் ! யார் அந்த பெரிய இடம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டை ஊராட்சியில் அனுமதி பெறாமல் செங்கற்சூலைக்காக கன்னிக்கோயில் தெருவில் உள்ள விவசாய நிலத்தில் இரவோடு இரவாக சட்ட விரோதமாக JCB இராட்ச்சத இயந்திரத்தை கொண்டு வந்து 15 அடி ஆழத்தில் பல ஏக்கர் விளை நிலத்தில் சுமார் 500 டிப்பர் லாரிகள் மண் எடுக்கப்பட்டதாக சீர்காழி வட்டாச்சியர் செந்திலிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததற்கு வட்டாச்சியர் செந்தில் அவர்கள் சொந்த நிலத்தில் மண் எடுக்கிறார்கள் என்றும் அது பெரிய இடத்து சமாச்சாரம். அதில் எல்லாம் தலையிட்டு தடுத்து நிறுத்த முடியாது என்று அப்பகுதி மக்களிடம் கூறினாராம்.
இதைக்கேட்டுஅதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே சீர்காழி கோட்டாச்சியர் (RDO) நாராயணன் அவர்களிடம் தெரிவித்தனராம் .
உடனே RDO அவர்கள் மண் அள்ளிய இடத்திற்கு நெரில் சென்ற கோட்டாச்சியர்க்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அளவிற்கு சுமார் 15அடி ஆழத்திற்கு மேல் மண் எடுத்துக் கடத்தப் பட்டு இருப்பதை கண்ட கோட்டாச்சியர் நாராயணன் அவர்கள் வட்டாச்சியர், வி ஏ ஒ. மற்றும் விசாரிப்பு ஆகியோரை அழைத்து அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு தானே வேலை செய்கிறீர்கள் . ஒரு நாள் சம்பளம் தாமதமாக வந்ததால் வந்து நின்று கேள்வி கேட்கும் நீங்கள் பொது மக்கள் புகார் கொடுத்தும் ஏன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை வில்லை என்றும் உடனே மண் எடுத்துச் சென்ற வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வேயரிடம் சொல்லி நிலத்தை உடனே அளக்க செய்ய வேண்டும் அது மட்டுமில்லாமல் செங்கற்சூலை நடத்தும் உரிமையாளரிடம் செங்கல் சூலை நடத்த அரசு அனுமதி கொடுத்த உரிமத்தை (லைசென்ஸ் ) எடுத்துக் கொண்டு வரச் சொல்லும்படியும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
RDO வின் இந்தச் செயலை கண்டு அப்பகுதி மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர் .
இத்துடன் இதை விட்டு விடாமல் எந்த விவசாய விளைநிலத்திலும் மண் திருடு நடைப்பெறாமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்பட கடுமையான உத்தரவு போட வேண்டும் என்பதே அப்பகுதி விவசாய மக்களின் கோரிக்கையாகும்.
சீர்காழி வட்டாட்சியர் சொன்ன அந்த பெரிய இடம் யார் என்பதை புலனாய்வு செய்து வரும் இதழில் வெளியிட உள்ளோம் !!