வெளிநாட்டில் இருக்கும் கணவர் பெயரில் உள்ள இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்து மோசடி!தேவகோட்டை சார் பதிவாளர் மீது பெண் புகார்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தேவகோட்டை அருகே சிறுமருதுாரில் செல்வவிநாயகர் நகரில் வீட்டுமனை பிளாட் போடப்பட்டது. அதில் 8 ஆம் எண் கொண்ட பிளாட்டை 15 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பாக இந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்த ராம்நகர் பாலமுருகன் (31), வெளிவயல் சேகர்( 49)ஆகியோர்…
செந்தில் நகரை சேர்ந்த ராமநாதனுக்கு (வயது 46)
12 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி விற்றுள்ளனர். இந்த இடத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு ராமச்சந்திரன் பெயரைக் கொண்ட மற்றொருவரை அழைத்துச் சென்று தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். அப்போது இடத்தை வாங்கிய உரிமையாளர் ராமச்சந்திரன் மனைவிக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனே ராமச்சந்திரன் மனைவி தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு என்னுடைய கணவர் பெயரில் உள்ள இடத்தை கணவர் இல்லாமல் எப்படி பத்திரப்பதிவு செய்தீர்கள் என்றும் என் கணவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக புகார் கொடுத்துள்ளார்.
உடனே சார்பதிவாளர் கங்கிரேஸ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜூ க்கு உடனே தகவல் கொடுத்துள்ளார். உடனே பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பதிவு செய்ய கொண்டு வந்த ஆவணங்கள் போலியானது என்று தெரியவந்தது. உடனே இந்த போலி ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்ய வந்த மூன்று பேரையும் கைது செய்தனர் . போலி ராமச்சந்திரணை காவல்துறை தேடி வருகின்றனர். எது எப்படியோ பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும் முன்பு போலி ஆவணங்களா உண்மையான ஆவணங்களா என்பதை பத்திரப்பதிவு அலுவலக எழுத்தாளர்கள் சரிபார்க்க வேண்டும் ஆனால் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் எழுத்தாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆவணங்களை சரி பார்க்காமலே பத்திரப்பதிவுக்கு டோக்கன் வழங்கி வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Hi to every one, for the reason that I am truly
eager of reading this webpage’s post to be updated daily.
It consists of pleasant data.