ஸ்டாலினின் மூன்று திட்டம் : முக்கோண சிக்கலில் எடப்பாடி…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 25 நிறுவனத்திற்கு மேல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர் அந்த சோதனையில் பல்வேறு சொத்துகள் வாங்கியது சம்பந்தமாக முக்கிய நகல்கள் கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக 56% சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அதிமுக அமைச்சர்கள் 20 பேர் ஊழல் பட்டியலை தமிழக கவர்னர் அவரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
அதில் ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் இருந்தாலும் கூட அதில் முதன்மையாக இருக்கிறது யார் அப்படினா எல்லோருக்கும் நன்கு தெரிந்ததுதான்.
முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி அவர்கள் அவரைக் குறிவைத்து ஆளும் தரப்பு இன்ச் பை இன்ச்சாக நெருங்கி இருக்காங்க அதுல தான் ஒரு புது ஸ்டோரி இருக்கீங்க.
திட்டம் 1. SP வேலுமணி மீது 1400 கோடி உழல் !லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு! விரைவில் கைது
அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவையில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு டெண்டர் விட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஜெயராமன் உள்ளிட்ட முக்கியமான சிலர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வழக்கு தாக்கல் செய்திருந்தனர். எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கடந்த முறை அதிமுக அரசு நீதிமன்றத்தில் கூறியது.
மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் புகார் குறித்து தீர விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் விசாரணைக்கு வந்த போது தற்போதுள்ள திமுக அரசு எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று திமுக அரசும் அவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினார்கள்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தது! எஸ்.பி.வேலுமணி மீது தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது எடுத்து எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது கைது நடவடிக்கை மிக விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
அது மட்டுமில்லாமல் மற்ற முன்னாள் அமைச்சர்களும் மீது உள்ள முறைகேடு புகார்கள் இவையெல்லாவற்றையும் தூசு தட்டி அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சட்டரீதியாக அவர்களுக்கு செக் வைப்பதன் மூலமாக அடுத்தடுத்து வரக்கூடிய எல்லா தேர்தல்களிலும் டோட்டலாக அவர்களை முடக்கி வைப்பது தான் ஸ்டாலினின் முதல்திட்டம் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
திமுக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க கோவை முன்னால் லாட்டரி விற்பனை நிறுவனத்தின் முக்கியமானவரின் வாரிசை சத்தமில்லாம அதிமுக தரப்பு ஆளும் தரப்பு கிட்ட அனுப்பி இருக்காங்க.
கோவை மாவட்டத்தில் முன்னாள் முக்கியமான அமைச்சர் அவர் தன் பெயரில் ஆயுதத்தை வைத்திருப்பார். அந்த தூதுவர் ஆளும் தரப்புக்கு மிக மிக நெருக்கமான பெரிய அளவில் நிதி உதவி செய்த லாட்டரி நிறுவன அதிபர் வாரிசு முன்னாள் அமைச்சர் உடைய நெருக்கமான பூவான உறவினர். அந்த பூவான ரெண்டு பேருமே மிக மிக நெருக்கமான நண்பர்கள். முன்னாள் அமைச்சரருடைய சகோதரர். அதாவது முன்னாள் அமைச்சருக்கு அவருடைய சகோதரர் தான் எல்லாமே.
இந்த ரெண்டு பேருமே சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை அரசு உதவியுடன் சென்னையில் நிறுவி இருந்தார்கள்.
இந்த முறைகேடு புகார்கள் தான் முதன்முதலாக ஆளும் தரப்பு தூசு தட்டி கையில் எடுக்கப் போறாதா தகவல்கள் வந்துள்ளது!
இதன் மூலம்முன்னாள் அமைச்சரை நெருக்கதிட்டம் போட்டுள்ளது ஆளும் கட்சி! இதனால் பயத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பூவான பெயரைக்கொண்ட நபரிடம் நான் சிக்கிக்கொண்டால் அதே நேரத்தில் நீங்களும் சேர்ந்து மாட்டிக் கொள்வீர்கள். இந்த ஊழல் பட்டியலில் உங்கள் பெயரும் அடிபட்டு இருக்கு என்று அன்பான எச்சரிக்கை செஞ்சிருக்காங்க முன்னால் அமைச்சருடைய தரப்பினர். இது நடவடிக்கைக்கான ஒரு தொடக்கமா இல்லையா என்று வேறு எதுவும் தெரியாமல் கொஞ்சம் குழப்பத்தோடு தான் போயிருக்காங்க முன்னாள் அமைச்சர் மற்றும் அந்த பூவான நபர் தரப்பினர்.
உடனே பூவான நபர் தரப்பினர் ஆளும் தரப்பினரிடம் சென்று இந்த முறைகேடு கள் பற்றி தற்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு ஆளும் தரப்பினர் மாவுனமாக இருந்ததாகவும் அதனால் முன்னால் அமைச்சர் பதட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
மாஜி அமைச்சருக்கு தகவல் கொடுக்கும் திட்ட அதிகாரி
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சருக்கு அந்த மாவட்டத்தில் நடக்கக்கூடிய அரசு சார்ந்த எல்லா நிகழ்வுகளும் முன்கூட்டியே தெரிந்து கொள்கிறாராம். அதற்கு காரணம் விழுப்புரம் மாவட்டம் அரசு திட்ட அதிகாரி தானாம். அந்த அரசு திட்ட உதவி அதிகாரி முன்னால் மாஜி அமைச்சர் விழுப்புரம் மாவட்டம். அந்த முன்னாள் முக்கிய அதிமுக புள்ளிக்கு மிக மிக நெருக்கமான உரவினர் தான் அந்த அரசு திட்ட அதிகாரி மூலமாகதான் அரசு சார்ந்த முக்கியமான திட்டங்கள் குறித்த எல்லா விவரங்களும் முன்னால் அமைச்சருக்கு உடனடியாக போய் சேர்ந்துவிடுகிறதாம்.
உள்ளாட்சி தேர்தல் வரும் நேரத்தில் இப்படி தகவல்கள் மாஜி அமைச்சர் அவர்களுக்கு விஷயங்கள் தெரிந்தால் எப்படி இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று விழுப்புரம் திமுக மாவட்ட நிர்வாகிகள் திமுக தலைமைக்கு தெரிவித்துள்ளார்கள்.
சிக்கும் மாஜி அமைச்சர் – திட்டம் 2.
பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட அந்த பெண்களின் அலறல் சத்தத்தை இன்றும் யாராலும் எளிதில் மறந்து விட முடியாது.
அந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்மந்தமாக மீண்டும் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு இருக்காங்க. அதிலும் புதிதாக மூன்று பெண்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலம் புகாரின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் வாய்ப்பு இருக்கு என்று தகவல்கள் வந்துள்ளது.
பாலியல் புகார் சமந்தமாக மிக முக்கியமாக இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு கூடுதல் ஆதாரங்களை பொள்ளாச்சியில் இருக்கும் திமுக நிர்வாகிகள் திரட்டி கொடுக்குமாறும் திமுக மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாம்!
தமிழ்நாடு அரசு சார்பாக முக்கியமான அதிகரிகளும் கூடுதல் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் திரட்டிட்டே இருக்காங்க .இதன் மூலமாக அதிமுகவின் முன்னாள் மாஜி அமைச்சர்கள் உறவினர்கள் முக்கியமான புள்ளிகள் எல்லோரும் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம். இதன் மூலம் திமுக மேலிடம் முன்னால் மாஜி அமைச்சர்களுக்கு செக் வைக்க கூடிய புதிய திட்டமாகவும் இது இருக்குதாம்.
இவை எல்லாமே பாதிக்கப்பட்ட பெங்கள்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூடுதலாக இருந்தாலும் பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு நீதிக்காக காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்தப் பெண்களுக்கு நீதி கிடைத்தால் மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு செல்வாக்கு செலுத்த அரசியல் ரீதியாக வாய்ப்புகளை உருவாக்கும்.
இவையெல்லாமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய கணக்கு என்றும் இதனால் சில கரை வேட்டிகள் எல்லாமே கலக்கத்திலேயே இருக்காங்க என்றும் தகவல்கள் வந்துள்ளது.
அதிமுக முன்னாள் கவுன்சிலரான ஜான்சன்ராஜா கட்சி பணிகளை ஒதுக்கி வைததுவிட்டு சாதிரீதியாக ஆக்டிவா மாறி இருக்கிறார்.
தன்னுடைய புதிய அடையாளமாக மாற்றி அந்த பகுதி முழுக்கவே குறிப்பாக பொள்ளாச்சி முழுக்கவே பல்வேறு பேனர்கள் போஸ்டர்களை ஒட்டி கொண்டே இருக்கிறார்.
எல்லா இடங்களிலும் போஸ்டர் தென்பட்டாலும் தன்னுடைய சாதி சங்கத்திலும் அவருக்கு அதிகமான நம்பிக்கை தானாக வராவிட்டாலும் சரி சாதி சங்க வராவிட்டாலும் சரி தப்பு செஞ்சவங்க தண்டனையிலிருந்து தப்ப முடியாது இது தான் நீதி அப்படின்னு ஓங்கி ஒலிக்க நீதியின் பக்கம் இருக்க கூடிய பொதுமக்கள் ஒட்டு மொத்த குரலாக இருக்குது!
கொடநாடு மர்மம் விலகுமா.. திட்டம் 3
2017 ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த கொலை கொல்லை நடந்த சம்பவம் எளிதில் மறந்து விடமுடியாது. கொடநாடு கொலை வழக்கில் மனோஜ் சயான். கனகராஜ் குற்றவாளிகளாக கருதப்பட்டனர். இதுசம்மந்தமாக விசாரணையும் நடந்து கொண்டிருந்த போது கனகராஜ் கார் விபத்தில் பலியானார்.
சயான் மனோஜ் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சிறையிலிருந்து பிணையில் வந்து இருக்காங்க. இவர்களிடம் ஆளும் தரப்பு கொலை கொள்ளை சம்மந்தமாக கூடுதலாக பல்வேறு வாக்குமூலங்களையும் பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும். பல்வேறு ஆதாரங்களைத் திரட்டுவதற்காக திமுகவினருக்கு திமுக தலைமை கட்டளையை பொட்டுள்ளதாம். அவர்களும் இந்த பணிகளை சத்தமில்லாமல் செய்ய தொடங்கிட்டாங்கலாம்.
இந்த விவகாரத்தில் மூலமாக அதிமுக தலைமைக்கு வழக்கு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதன் மூலமாக அதிமுக தலைமைக்கு செக் வைத்து முடக்கவும் திமுக தலைமை வேளையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.